Link copied!
Sign in / Sign up
2
Shares

தாம்பத்தியமற்ற வாழ்க்கை பற்றிய 11 தம்பதிகளின் கருத்து

தாம்பத்தியம் என்பது தம்பதியரின் வாழ்வில் ஒரு அங்கம் என்றே சொல்லலாம். திருமணமான புதிதில் இருக்கும் தாம்பத்திய ஈடுபாடு படிப்படியாக குறையும். ஆண்களுக்கு 55 வயது மற்றும் அதற்கு மேலும் தாம்பத்தியத்தில் ஈடுபாடு இருப்பதாகவும், பெண்களுக்கு 45 வயது வரை மட்டுமே இருப்பதாக சொல்கின்றன ஆய்வு முடிவுகள்.

சில சமயங்களில் உடல்நலம், சூழ்நிலை, மன அழுத்தம், ஆன்மிகம் போன்ற ஏதேனும் காரணத்தால் தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபாடு குறைவது அல்லது நாட்டமின்றி போவது ஏற்படலாம். தம்பதிகள் யாரேனும் ஒருவருக்கு இது போன்ற எண்ணம் எழலாம். ஆனால், மற்றொருவரும் இதை ஏற்றுக் கொள்வாரா என்பது தான் கேள்வி. பல ஆண்களாலும், சில பெண்களாலும் கண்டிப்பாக இதை ஏற்றுக் கொள்ள முடியாது. அது போன்ற தருணத்தில் தம்பதிகளின் கருத்துக்களை பார்க்கலாம்.

1 விவேக், சிந்துஜா தம்பதி

நானும் என் மனைவியும் கடந்த சில மாதங்களாக தாம்பத்திய உறவில் ஈடுபடுவதில்லை. அவள் மன அழுத்தம் கொண்டுள்ளதால், உறவில் ஈடுபட நாட்டம் இல்லை என்கிறார். தாம்பத்தியத்தில் ஈடுபடாமல் இருப்பதாலேயே எனக்கு மன அழுத்தம் அதிகரிக்கிறது. இது ஓர் தொடர் கதையாக நீண்டு செல்கிறது.

2 ரஞ்சித், பிரியா தம்பதி

நான் தாம்பத்தியம் அற்ற ஓர் திருமண வாழ்வில் வாழ்ந்து வருகிறேன். இதை நான் வெறுக்கிறேன் என என் கணவரும் அறிவார். ஆயினும் அவர் கண்டுக்கொள்வதில்லை.

3 ராம்ஜி, காவ்யா தம்பதி

தாம்பத்தியம் அற்ற வாழ்க்கையை விட்டு நான் பிரிந்துவிடலாம் என்று தான் எண்ணுகிறேன். ஆனால், என் குழந்தைகள் மற்றும் அவர்களது வளர்ச்சி , எதிர்காலம் கருத்தில் கொண்டு பிரிந்து செல்லாமல் இருக்கிறேன்.

4 ஷாம், ரம்யா தம்பதி

தாம்பத்தியம் அற்ற வாழ்க்கை எனில் அதில் மகிழ்ச்சி இல்லை என்ற கருத்தில் நான் உடன்படுவதாக இல்லை. வெறும் உடலுறவிற்காக மட்டும் நான் திருமணம் செய்துக் கொள்ளவில்லை. அவளுடன் சேர்ந்து வாழவே விரும்புகிறேன்.

5 ராஜ், சௌமியா தம்பதி

என் கணவர் என்னுடன் தாம்பத்தியத்தில் ஈடுபட முனைவதில்லை. மேலும், தவிர்க்கிறார். இது என்னை வெறுப்படைய வைக்கிறது.

6 மிதுன், ராகவி தம்பதி

என் மனைவிக்கு தாம்பத்தியத்தில் ஈடுபட விருப்பம் இல்லை. இதனால் நான் வருந்துவதாக அவள் முன் காட்டிக் கொள்வதில்லை. ஆனால், மனதுக்குள் கத்த வேண்டும் என்பது போன்ற உணர்வு அடிக்கடி எழும்.

7 கண்ணன், மிருதுளா தம்பதி

என் கணவர் நான் விரும்பி அழைத்தும் என்னுடன் தாம்பத்தியத்தில் ஈடுபட விரும்பவில்லை எனும் போது, அது மிகுந்த வலியை ஏற்படுத்தும்.

8 பிரேம், கவிப்ரியா தம்பதி

என் மனைவிக்கு தாம்பத்தியத்தில் ஈடுபட விருப்பமில்லை. அதனால், நான் அதை பற்றி பெரிதாக அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. ஆயினும் இது கடினமான ஒன்று தான்.

9 விஷ்ணு, சாய் மித்ரா தம்பதி

தாம்பத்தியம் அற்ற இந்த திருமண வாழ்க்கை எத்தனை தூரம் பயணிக்கும் என்று என்னால் யூகிக்க முடியவில்லை.

10 ரவிக்குமார், கீர்த்தி தம்பதி

கால சூழ்நிலையால் நான் தாம்பத்தியம் அற்ற திருமண வாழ்வில் வாழ்ந்து வருகிறேன். என் மனைவியை நான் அதிகமாக நேசிக்கிறேன். ஆயினும், உணர்சிகளை கட்டுப்படுத்துதல் சற்றே கடினமானது தான்.

11 கார்த்தி, விஜி தம்பதி

33 வயதிலேயே என் தாம்பத்திய வாழ்க்கை முற்று பெறும் என நான் நினைக்கவில்லை. என் கணவருக்கு இப்போதெல்லாம் இதில் நாட்டம் இல்லை. ஒருவகையில் இதுவும் ஓர் ஏமாற்றம் தான். தாம்பத்தியம் என்பது திருமண வாழ்வில் அனைவரும் வேண்டுவது தானே. 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon