Link copied!
Sign in / Sign up
12
Shares

தாய்ப்பாலூட்டும் தாய்மார்களின் கவனத்திற்கு

பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் உணவு கட்டுப்பாடு என தவிர்க்க வேண்டிய உணவுகளுக்கான அட்டவணையையே கொடுப்பார்கள். இதே போல் தான் செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவைகளையும் பட்டியலிட்டிருப்பார்கள். பிரசவத்தின் பின் அனைத்தும் மாறி விடும் என நினைத்தால், பிரசவத்தின் பின் தாய்ப்பாலூட்டுவதால் மீண்டும் சில கட்டுப்பாடுகள் இருக்கும். இங்கு தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவற்றை பார்க்கலாம்.

1 குளிர்ந்த நீர்

பிரசவத்தின் பின் குளிந்த நீரில் குளிக்கவும், குளிர்ச்சியான நீரை குடிக்கவும் கூடாது. பிரசவத்தின் பின் தாயின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். குளிர்ந்த நீரில் குளிக்கும் போதும், குடிக்கும் போது சளியால் பாதிப்படைய கூடும். வைரஸ் தொற்று தாய்ப்பாலை பாதிக்காது என்பதால், தாய்ப்பாலால் குழந்தைக்கு சளி ஏற்படுவதில்லை. உங்களது மூச்சு காற்று, குழந்தையை கொஞ்சுதல் போன்றவற்றால் குழந்தைக்கும் சளி ஏற்பட வாய்ப்புள்ளது.

2 குளிர்பானங்கள்

குளிர்பானங்கள் தாய்ப்பாலோட தன்மையை மாற்றாது. ஆனால் முடிந்த வரை குளிர்பானங்களை தவிர்த்து, பழச்சாறுகளை அருந்தலாம். கோடைகாலத்தில் மதிய வேளைகளில் ஐஸ் சேர்த்து குடிக்கலாம். வெறும் நீர்மங்களை அதிக அளவில் எடுத்து கொள்வது சிறந்தது. சோடா கலந்த குளிர்பானங்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

3 புரதம்

தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் அதிக அளவில் புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். மேலும், அவர்கள் எப்போதும் உண்ணும் உணவுடன் 400 கலோரிகள் அதிகம் எடுத்து கொள்ள வேண்டும்.

4 காபி

காபியில் காபின் எனும் நச்சு பொருள் உள்ளது. இது தாய்ப்பால் மூலமாக குழந்தையை சென்றடையும். குழந்தையின் செரிமான மண்டலம் வளர்ச்சியடைய துவங்கி இருப்பதால், இவற்றை வெளியேற்ற முடியாது. இதனால் குழந்தையின் உடலிலேயே தங்கி விடும்.

5 சாக்லேட்

பெண்களுக்கு எப்போதும் சாக்லேட் என்றாலே விருப்பம் தான். ஆனால், சாக்லேட்டிலும் காபின் கலந்திருப்பதால், தாய்ப்பாலூட்டும் காலத்தில் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

6 பூண்டு

தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் பூண்டு சாப்பிட்டால், அது தாய்ப்பாலில் கலந்து பூண்டு வாசனையை ஏற்படுத்தும். சில குழந்தைகளுக்கு பூண்டு வாசனை பிடிக்காமல், சரியாக பால் குடிக்கமாட்டார்கள்.

7 வேர்க்கடலை

வேர்க்கடலையில் நிறைந்திருக்கும் புரதம் செரிமான பிரச்சனையை ஏற்படுத்துவதோடு, குழந்தையின் உடலில் அலர்ஜியை ஏற்படுத்தும். தாய்ப்பாலூட்டும் போது இதை தவிர்ப்பது சிறந்தது.

8 மீன்

மீன் சாப்பிடும் பெண்கள் பாதரசம் அதிகம் இருக்கும் மீன்களை தவிர்த்து மற்ற மீன்களை சாப்பிடலாம். சாலமன் மீனில் இருக்கும் ஒமேகா மிகவும் சிறந்தது.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon