Link copied!
Sign in / Sign up
48
Shares

தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டிய ஊட்டச்சத்துக்கள்

கர்ப்பகாலத்தில் பெண்கள் எப்போதும் ஊட்டச்சத்த்துகள் நிறைந்த ஆரோக்கியமான உணவை உண்வார்கள். குழந்தை ஆரோக்கியமாக பிறக்க வேண்டும், சரியான வளர்ச்சி அடைய வேண்டும் என உணவில் அக்கறை செலுத்துவார்கள். அதே போல் குழந்தை பிறந்தவுடனும், ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டியது அவசியம். குழந்தைக்கு தேவையான உணவு தாய்ப்பால் மூலமாகவே கிடைப்பதால், ஊட்டச்சத்துள்ள உணவுகளை எடுத்து கொள்ள  வேண்டும். இங்கு தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகளை பற்றி பார்க்கலாம்.

இரும்புச் சத்து

பிரசவ நேரத்தில் அதிக அளவு இரத்தப்போக்கினால் பெண்களின் உடலில் சத்து குறைபாடு ஏற்பட்டிருக்கும். தாய்மார்களுக்கு இரும்புச்சத்து பற்றாக்குறையினால் இரத்த சோகை ஏற்படுகிறது. இதனால் குழந்தைகளுக்கும் இரும்புச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் குழந்தைகளின் எடை குறைவதோடு நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு ஏற்படுகிறது. எனவே பிரசவித்த பெண்களுக்கு உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய இரும்புசத்து நிறைந்த உணவை அளிக்கவேண்டும். ஏனெனில் இரத்தத்தில் ஹீமோகுளோபின் உற்பத்தி, மூளை செயல்பாடு மற்றும் உடல் எதிர்ப்பு சக்திக்கு இரும்புச்சத்து தேவைப்படுகிறது.

உணவுகள்

முழு தானியங்கள், முளைக்கட்டிய பயறுகள், உலர் பழங்கள் மற்றும் பச்சைக் கீரைகளில் அதிக அளவு இரும்புச் சத்து உள்ளது. இறைச்சி, கோழி மற்றும் மீன் போன்றவற்றிலும் இரும்புச்சத்து உள்ளது. தாவரங்களில் குறைவான அளவு இரும்புச்சத்து கிடைக்கிறது. ஆனால் மாமிச உணவுகளில் அதிகமாக உள்ளது. வைட்டமின் 'சி" அதிகமுள்ள பெருநெல்லி, கொய்யா, ஆரஞ்சு வகை பழங்கள் ஆகியன, தாவரங்களில் உள்ள இரும்புச்சத்தை கிடைக்கச் செய்கின்றன.

வெல்லம்

பிரசவித்த பெண்களுக்கு நல்லெண்ணை, வெள்ளைப் பூண்டு, வெல்லம் போன்றவற்றை கொடுப்பார்கள். நல்லெண்ணையானது தளர்வடைந்த உடலை மீண்டும் பழைய நிலைக்கு மாற்ற உதவுகிறது. பச்சை உடம்பு என்று அழைக்கப்படும் பிரசவித்த தாய்மார்களின் கர்ப்பப்பையில் ஏற்பட்ட புண்களை ஆற்றும் சக்தி எள் எண்ணெக்கு அதிகம் உண்டு. எனவே தான் நல்லெண்ணெயை அதிகம் உணவில் சேர்த்துக் கொடுக்கின்றனர். மிதமான காரம் சேர்த்த, மிளகு, கொடாம்புளி சேர்த்த உணவுகளையே கொடுக்கலாம். அது தாய், சேய் நலனுக்கு ஏற்றது.

அதேபோல் வெள்ளைப் பூண்டை வதக்கி உட்கொள்வது தேவையற்ற வாயு உடலில் சேராமல் தடுக்கும், தாய்ப்பால் சுரக்கும். வெல்லமானது தாய்மார்களின் உடலில் இரும்புச்சத்து அதிகரிக்க உதவும். இதனால் தாய்ப்பால் மூலம் குழந்தைகளுக்குச் செல்லும் சத்தானது குழந்தைகளின் நலனை பாதுகாக்கும்.

புரதச்சத்து

புரதச்சத்து நிறைந்த கடல் உணவுகள், மாமிச உணவுகள், பால் பொருட்கள், பீன்ஸ் போன்றவற்றை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால் தாய்மார்களின் உடலில் புரதச்சத்து அதிகரிக்கும். தாய்ப்பால் தரும் பெண்கள் அவசியம் கால்சியம் சத்து நிறைந்த பால் பொருட்கள், தயிர் போன்றவற்றை உட்கொள்ள வேண்டும்.

தண்ணீர்

நன்றாக காய்ச்சி ஆற வைத்த தண்ணீரை அருந்துவது அவசியம். அத்துடன் பழரசங்கள், பால், மூலிகை தேநீர் ஆகியவற்றை அருந்துவது உடல் நலத்திற்கு ஏற்றது. இது உடலில் நீர் சக்தியை தக்கவைக்கும். 

மூடப்பழக்கம்

பிறந்த குழந்தைக்கும், பிரசவித்த தாய்க்கும் தேவையில்லாத கட்டுப்பாடுகளை விதிப்பது வழக்கம். இதுவே சில சமயங்களில் சிக்கலை ஏற்படுத்தும். எனவே உடல் நலத்திற்கு ஒத்துவராத மூடபழக்கவழக்கங்களையும் எண்ணங்களையும் தவிர்க்கவேண்டும். மருத்துவர்களின் பரிந்துரையின்படி மட்டும் மருந்துகள் உட்கொள்ள வேண்டும்.

தவிர்க்கவும்

காபி, தேநீர், குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இவற்றை பருகுவதன் மூலம் இரும்புச்சத்தை கிரகித்து கொண்டு அவற்றை கிடைக்காமல் செய்கின்றது. எனவே சாப்பிடுவதற்கு முன்போ, சாப்பிடும் பொழுதோ, சாப்பிட்டவுடனோ தேநீர் உட்கொள்வதை தவிர்க்கவேண்டும். மேலும் இதிலிருக்கும் காபின் எனப்படும் நச்சு பொருள் தாய்ப்பால் மூலமாக குழந்தையை அடையும். இவற்றை குழந்தையின் செரிமான மண்டலத்தால் வெளியேற்ற முடியாததால், அவர்களின் உடலில் தங்கி தீங்கு விளைவிக்கும்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

Recently, we launched a baby-safe, natural and toxin-free floor cleaner. Recommended by moms and doctors all over India, this floor-cleaner liquid gets rid of germs and stains without adding harmful toxins to the floor. Click here to buy it and let us know if you liked it.

Stay tuned for our future product launches - we plan to launch a range of homecare products that will keep your little explorer healthy, safe and happy!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon