Link copied!
Sign in / Sign up
7
Shares

தாய்ப்பாலூட்டுதல் எப்படி மாதவிடாயை பாதிக்கிறது..?

பெரும்பாலான அம்மாக்கள் குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் முதல் மாதவிடாய் சுழற்சியை பற்றி குழம்பவும், கவலைப்படவும் செய்கிறார்கள். அவர்கள் முந்தைய ஒன்பது மாதங்களில் மாதவிடாய் இல்லாமல் இருந்திருப்பார்கள். புதிதாக அம்மாவானவர்கள் அவர்களின் உடலில் ஏற்படும் மாற்றங்களால் ஆச்சரியப்படுவார்கள். இங்கு அவர்களின் உடலில் ஏற்படும் மாற்றங்களை பற்றியும், தாய்ப்பாலூட்டுவது எப்படி மாதவிடாயை பாதிக்கிறது என்பதை பற்றியும் பார்க்கலாம்.  

பிரசவத்தின் பின் எப்போது மாதவிடாய் துவங்கும்?

கர்ப்பகாலத்தின் முக்கியமான விஷயங்களில் ஒன்று பெண்களுக்கு இந்த 9 மாதமும் மாதவிடாய் ஏற்படாது என்பது தான். அவர்கள் துணிகளையோ அல்லது நாப்கின்களையோ இந்த மாதங்களில் மாற்ற வேண்டியிருக்காது. இந்த சமயத்தில் இது அவர்களுக்கு விடுதலை அளித்திருந்தாலும், பிரசவத்தின் பின் எப்போது வேண்டுமானாலும் அவர்களுக்கு மாதவிடாய் ஏற்படலாம். இதற்கென எந்த தேதியையும், கால நேரத்தையும் குறிப்பிட முடியாது. ஒவ்வொரு பெண்ணின் உடலும் அவர்களுக்கென தனி அட்டவணையுடன் இயங்கி கொண்டிருக்கிறது.

தாய்ப்பாலூட்டும் போது மாதவிடாயானது அதிகபட்சமாக 7 முதல் 8 மாத காலம் வரை நீடிக்கிறது. சில பெண்களுக்கு குழந்தை பிறந்த இரண்டு மாதங்களுக்கு பிறகே ஏற்படுகிறது. ஆனால், இதை பற்றி கவலைப்படுவதற்கு ஏதுமில்லை. உங்கள் உடலுக்கான நேரத்தை விட்டு விடுங்கள். நீங்கள் விரைவில் பழைய நிலைக்கு திருப்பிவிடுவீர்கள்.

1 உங்கள் குழந்தை தாய்ப்பால் குடித்தும் அதிக நேரம் உறங்கினால், உங்களுக்கு மாதவிடாய் விரைவில் ஏற்படும்.

2 உங்கள் குழந்தை திட உணவுகளை சாப்பிட துவங்கிவிட்டால், உங்கள் மாதவிடாய் முடிவடைய போகிறது என்பதன் அறிகுறியாகும்.

சில நேரங்களில் தாய்ப்பாலூட்டும் போது, நீங்கள் இரத்த கறைகளை கவனித்திருப்பீர்கள். இது மிகவும் சாதாரணமான ஒன்றுதான். இந்த கறைகள் எப்போது வேண்டுமானாலும் ஏற்படும், இதற்கென நேரம் காலம் எல்லாம் கிடையாது.

தாய்ப்பாலூட்டுதலுக்கு பின் ஏற்படும் மாதவிடாயின் உணர்வு

மாதவிடாயின் அனுபவம் வேண்டுமானால் ஒவ்வொரு பெண்ணிற்கும் மாறுபட்டிருக்கலாம். ஆனால், அதன் தீவிரம் அனைவருக்கும் சீரானதாகவே இருந்திருக்கும். குழந்தை பிறப்பிற்கு பின் ஏற்படும் இரத்தப்போக்கு மகப்பேற்று இரத்தப்போக்கு என அழைக்கப்படுகிறது. இது பெண்களில் உடலில் இருக்கும் தேவையற்ற இரத்தமாகும். இது உங்களது மாதாந்திர மாதவிடாயை விட அடர்சிவப்பு நிறத்திலும் அதிக அளவிலும் இருக்கும். நீங்கள் உபயோகிக்கும் நாப்கின்கள், 4 மணிநேரம் மட்டுமே பயன் தரும். நீங்கள் அவற்றை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.

மாதவிடாய் வெளியேற்றத்தில் ஏற்படும் மாற்றங்கள்

குழந்தை பிறப்பிற்கு பின் உங்கள் உடலில் இருந்து வெளியேறும் இரத்தத்தின் நிறம் மாறி இருக்கும். முதலில் அது சிவப்பு நிறத்திலும், பின் சற்று நிறம் குறைந்தும் இறுதியில் லேசான பழுப்பு நிறத்திலும் இருக்கும். அதன் பின் லேசான மஞ்சள் நிறத்தில் இருந்து மஞ்சள் நிறத்திற்கு மாறும். இறுதியில் இந்த மாதவிடாயானது இரத்தமாக இல்லாமல், அதிக உறைந்த நிலையிலும் உலர்ந்தும் இருக்கும். இது படிப்படியாக குறைந்து இறுதியில் நின்று விடும். சில பெண்களுக்கு இந்த சமயத்தில் மோசமான துர்நாற்றம் வீசியதாக கூறுகிறார்கள்.

இருப்பினும், இந்த மகப்பேற்று இரத்தப் போக்கானது ஒரு வார காலத்திற்குள் முடிந்து விடும், ஆனால் சில பெண்களுக்கு அதற்கு மேலும் எடுத்து கொள்ளலாம். ஆனால் அது கவலைக்குரியதல்ல. இந்த வெளியேற்றங்களின் போது வலி ஏற்பட்டாலோ அல்லது எதாவது தொந்தரவு ஏற்பட்டாலோ அல்லது இரத்தம் கட்டிகளாக வெளியேறினாலோ மருத்துவரை சந்தியுங்கள்.

தாய்ப்பால் எப்படி உங்கள் உடலை பாதிக்கிறது

தாய்ப்பால் உடலில் உள்ள சுரப்பிகளை தூண்டுகிறது. குழந்தை தாயிடம் பால் குடிக்கும் போது, உடலில் புரோலேக்ட்டின் உற்பத்தி செய்யப்பட்டு இரத்த ஓட்டத்தில் கலக்கிறது. இது குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிக் கொண்டிருக்கும் வரை பாய்கிறது. புரோலேக்ட்டின் உடலிலிருந்து கரு முட்டை வெளிப்படுவதை தவிர்க்கிறது. இதனால் உங்களுக்கு மாதவிலக்கு ஏற்படாது.

மாதவிலக்கு ஏற்பட்டாலும் குழந்தைக்கு பால் கொடுக்கலாம். இதனால் பாலின் சுவையில் மாற்றம் ஏற்படாது. மாதவிடாய் காலத்திலும் தாய்ப்பால் பாதுகாப்பானதே. இதன் காரணமாக தாய்ப்பாலின் அளவு குறையலாம். இது தற்காலிகமானதே தவிர நிரந்தரமல்ல. சிறிது நாட்களில் மீண்டும் பழைய படி அதிகரித்து விடும். இது உடலில் ஏற்பட்டிருக்கும் ஹார்மோன் மாற்றத்தால் ஏற்படுகிறது. 

மேலும் எங்கள் பதிவை படித்து தெரிந்துக்கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும். அல்லது வலதுபக்கம் ஸ்வைப் செய்யவும்

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon