Link copied!
Sign in / Sign up
21
Shares

தாய்ப்பாலூட்டும் தாய்மார்களுக்கான சிறந்த 6 உணவுகள்


தாய்ப்பால் மட்டுமே குழந்தைக்கு தேவையான சிறந்த உணவாகும். குழந்தைக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும், நோயெதிர்ப்பு சக்தியும் தாய்ப்பாலில்தான் உள்ளது. எனவே பாலூட்டும்போது அம்மாக்கள் சரியான உணவுமுறையை பின்பற்ற வேண்டும். ஆய்வுகளின்படி, அம்மா சாப்பிடும் ஒவ்வொரு உணவும் தாய்ப்பாலில் பிரதிபலிக்கும். எனவே அம்மாக்கள் சாப்பிட வேண்டிய முக்கிய உணவுகளை இங்கு பட்டியலிட்டுள்ளோம்.

1 பூண்டு

 

பூண்டு பால் உற்பத்தியை அதிகரிக்கும் ஒரு சிறந்த உணவாகும். இது பிரவத்திற்கு பின் பெண்களுக்கு தேவைப்படும் நிறைய சத்துக்களை இயற்கையாவே கொண்டுள்ளது. இது உடலின் உஷ்ணத்தை சீராக வைத்திருப்பதோடு செரிமான கோளாறுகளையும் சரி செய்கிறது. மேலும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு முட்டி சம்பந்தமான பிரச்சனைகளையும் சரி செய்கிறது.  

2 இஞ்சி

இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு பாக்டீரியா மற்றும் வைரஸ்களுக்கு எதிராகவும் போராடுகிறது. அது மட்டுமின்றி இதன் உஷ்ண குணம் பிறப்புறுப்பில் இரத்தபோக்கை குறைக்கும். புதிய தாய்மார்களின் பிரசவத்திற்கு பின் முதல் மாதத்தில் அவர்கள் உணவில் நிறைய இஞ்சி சேர்க்கப்படும். வயிற்று வாயுவை நீக்குவதற்கும், வீக்கம் குறைவதற்கும் இஞ்சி பெரிதும் உதவும். இது மார்பகங்களுக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதன் மூலம் மார்பகத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

3 நெய்

பழங்காலம் முதலே புதிய தாய்மார்களுக்கு நெய் பரிந்துரைக்கப்படுகிறது. நெய் இரைப்பை அமிலத்தின் சுரப்பை தூண்டுகிறது, இதனால் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மிகவும் முக்கியமான செரிமானத்தில் உதவுகிறது. இது வைட்டமின் உறிஞ்சுதலை அதிகரிக்கிறது மற்றும் எடை இழப்பிற்கு உதவுகிறது. கொழுப்பு கரையக்கூடிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் மற்ற உணவுகளிலிருந்து உறிஞ்சப்படுவதில் நெய்யில் உள்ள கொழுப்புகள், நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகின்றன.

4 மாதுளை

பெண்களுக்கு மார்பக பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக மாதுளை பயன்படுகிறது. இது ஊட்டச்சத்து மிக்க அடர்த்தியான, ஆக்ஸிஜனேற்றம்-நிறைந்த பழம். மேலும், ஆரோக்கியம் மற்றும் கருவுறுதல் போன்ற மகிழ்ச்சியான வாழ்வுக்கான சின்னமாக மதிக்கப்படுகிறது. இது ஒரு சிறந்த இரத்த சுத்திகரிப்பனாகும்.

5 ஓட்ஸ்

மார்பக பால் அதிகரிக்க இந்தியாவில் பயன்படுத்தப்படும் முக்கிய உணவு வகைகளில் இதுவும் ஒன்றாகும். அது மென்மையாக மாறும் வரை நன்கு சமைத்து உண்ணலாம் அல்லது நேரடியாக பாலில் கலந்து சாப்பிடலாம் .மேலும் பல பழங்களுடன் கலந்து வேறுபட்ட மற்றும் சிறந்த சுவையுடன் உண்ணலாம்.

6 வெந்தயம்

இது மார்பக பால் அதிகரிப்பதற்கான பழங்கால மூலிகை மருந்தாகும். ஒரு வழக்கமான சமையலறை மூலிகை, விதையாக இருந்தாலும் தாயின் உணவில் தாராளமாக பயன்படுத்த முடியும். இது ஒரு சிறந்த பால் சுரப்பானாகும் அதாவது, மார்பக பால் சுரப்பு அதிகரிக்கும் மூலிகையாகும். மேலும் வெந்தயத்தில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. காய்ச்சல், மூட்டு வலி, குடல் மற்றும் சுவாச வியாதிகளுக்கு சிகிச்சையளிக்கவும் பயன்படுத்தலாம்.

பதிப்பைத் தொடர்ந்து படித்துவரும் வாசகர்களுக்கு நன்றி!!! உங்களுக்கு எங்கள் நன்றியை தெரிவிக்கும் விதமாக நீங்கள் ஆன்லைனில், அமேசானில் வாங்கும் பொருட்களுக்கு 5% பணவிலக்கு அளிக்கிறோம்..! அதற்கு இந்த link -ஐ உபயோகப்படுத்தவும்..! அமேசானில் பொருட்கள் வாங்க பயன்படுத்த வேண்டிய link:  http://bit.ly/2lLVpTJ

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon