Link copied!
Sign in / Sign up
30
Shares

தாய்ப்பாலூட்டும் போது சாப்பிட வேண்டிய 7 பழங்கள்

உங்கள் குழந்தைகளின் உணவு தேவைக்கு தாய்ப்பாலூட்டுவதில் நீங்கள் மட்டும் கவனம் செலுத்துங்கள். தாய்ப்பால்தான் உங்கள் குழந்தைக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் தரக்கூடியது. எனவே தாய்ப்பாலை அதிகரிக்ககூடிய ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும்.

பெரும்பாலும் நீங்கள் எளிதில் கிடைக்கூடிய சத்துக்கள் நிறைந்த பழங்களை சாப்பிடாமல் புறக்கணிக்கிறீர்கள். ஆனால் அவைதான் உங்கள் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள், ஆக்சிஜனேற்றிக்களை கொண்டுள்ளது. மேலும் அம்மாவுக்கு தாய்ப்பால் கொடுக்க தேவையான ஆற்றலையும் கொடுக்கிறது.

1. ஸ்ட்ராபெர்ரி

இது விட்டமின் சி நிறைந்த பழமாகும். எல்லா அம்மாக்களும் அதிகளவு ஸ்ட்ராபெர்ரி சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறார்கள்(நாளொன்றுக்கு 120கி). இதில் நீர்சத்துக்கள் அதிகம் இருப்பதால் உடலின் நீர் மேலாண்மையை சீராக வைத்திருக்க உதவுகிறது. எனவே நீங்கள் விரும்பும் போதெல்லாம் குழந்தைக்கு பால் கொடுக்கலாம்.

2 சப்போட்டா

உங்கள் குழந்தையின் தேவைகளை அறிந்துகொள்வதில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். பால் கொடுக்கும்போது ஏற்படும் வாந்தி, மயக்கம், குமட்டல் போன்றவற்றை சமாளிக்க உங்களுக்கு அதிக ஆற்றல் தேவைப்படும். அதற்க்கு தேவையான ஆற்றலனைத்தும் சப்போட்டா பழத்தில் அதிகளவில் உள்ளது.

3 ப்ளூபெர்ரி

இதில் அதிகளவு சிட்ரஸ் அமிலமும் அதிகளவில் ஆன்டிஆக்சிடண்ட்களும் உள்ளது. மற்ற பழங்களுடன் ஒப்பிடுகையில் இதில் ஆன்டிஆக்சிடண்ட்கள் அதிகளவில் உள்ளது. தாய்ப்பாலில் அதிகளவில் ஆன்டிஆக்சிடண்ட்கள் இருந்தாலும் இதன் மூலம் ஆன்டிஆக்சிடண்ட்கள் குழந்தைகளுக்கு பரிமாற்றம் செய்யப்படுகிறது.

4 வாழைப்பழம்

பொட்டாசியம் அதிகம் நிறைந்த பழமானதால் அம்மாக்களுக்கு அதிகளவில் பரிந்துரைக்கப்படுகிறது. தாய்ப்பாலூட்டும் அம்மாக்களுக்கு உடலின் திரவ சமநிலையை பராமரிப்பதற்கு பொட்டாசியம் அதிகளவில் தேவைப்படுகிறது.

5 பச்சை பப்பாளி

இது தாய்ப்பாலின் உற்பத்தியை அதிகரிக்க பயன்படுவதாகும். இது பால் உற்பத்தியை அதிகரிக்கும் அதே நேரத்தில் அத்தியாவசிய வைட்டமின்களான ஏ, பி, சி மற்றும் ஈ ஆகியவற்றையும் தருகிறது.

6 முலாம் பழம்

உங்களுடைய உடல் ஊட்டச்சத்துக்களுடன் இருந்தால்தான் குழந்தைக்கு உங்களால் ஊட்டச்சத்துக்களை தரமுடியும். நீங்கள் தாய்ப்பால் கொடுப்பதுபோல் ஆரோக்கியமான நிலையில் இருப்பதற்கு இந்த பழத்தை நிறைய உண்பது அவசியம்.

7 அவோகேடா

இது ஒமேகா -3, ஒமேகா -6 மற்றும் ஒமேகா -9 கொழுப்பு அமிலங்கள் நிறைந்தவை. இந்த அத்தியாவசிய அமினோ அமிலங்கள் நீங்கள் சத்துக்கள் நிறைந்த பாலை உற்பத்தி செய்ய உதவுவதோடு உங்கள் குழந்தைக்கு மிகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

பதிப்பைத் தொடர்ந்து படித்துவரும் வாசகர்களுக்கு நன்றி!!! உங்களுக்கு எங்கள் நன்றியை தெரிவிக்கும் விதமாக நீங்கள் ஆன்லைனில், அமேசானில் வாங்கும் பொருட்களுக்கு 5% பணவிலக்கு அளிக்கிறோம்..! அதற்கு இந்த link -ஐ உபயோகப்படுத்தவும்..! அமேசானில் பொருட்கள் வாங்க பயன்படுத்த வேண்டிய link:  http://bit.ly/2lLVpTJ

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon