Link copied!
Sign in / Sign up
7
Shares

தாய்ப்பாலூட்டும் போது குழந்தை கடிக்காமல் இருக்க

சில தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு 6-8 மாதங்களுக்கு மேலாக பாலூட்டுவார்கள். இது ஒரு நல்ல செயலே. இதனால் குழந்தைகள் ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்ளாமல் தடுக்க முடியும். இந்த காலகட்டத்தில் குழந்தைகளின் நோயெதிர்ப்பு சக்தி வளர்ச்சியடைந்திருக்காது என்பதால் வெளியுணவுகள் ஆபத்தை விளைவிக்கும். நீண்ட காலம் தாய்ப்பால் கொடுப்பது, குழந்தைக்கு பாதுகாப்பானது மட்டுமில்லாமல், உங்களுக்கும் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கும்.

ஆனால், நீண்ட காலம் தாய்ப்பாலூட்டுவதில் பிரச்சனை என்னவென்றால் 7-8 மாதங்களில் குழந்தைக்கு பற்கள் வளர ஆரம்பித்துவிடும். இதனாலேயே பல தாய்மார்கள் 40 வாரங்களுக்கு பிறகு தாய்ப்பால் ஊட்டுவதை தவிர்த்துவிடுவார்கள். இந்த காலகட்டத்தில் குழந்தைகள் கடிக்க ஆரம்பித்துவிடுவார்கள் என்பதே உண்மை. ஆனால் இந்த பழக்கத்தை நிறுத்த முடியும். இங்கு அது எப்படி என்பதை பற்றி பார்க்கலாம்.

1 பாலூட்டும் நிலை

சரியான நிலையில் பால் கொடுத்தால், உங்கள் குழந்தையால் கடிக்க முடியாது. எனவே, பாலூட்டும் போது நீங்களும் உங்கள் குழந்தையும் சரியான நிலையில் இருக்கிறீர்களா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.

2 குழந்தையை தள்ளிவிட கூடாது

உங்களின் மார்பின் காம்பு குழந்தையின் வாயின் உள்ளே நன்றாக இருந்தால் குழந்தையால் கடிக்க முடியாது. குழந்தை தள்ளிவிடுவது இயற்கையான செயலே. ஆனால், தள்ளிவிடாமல் உங்களிடம் இருப்பதே சிறந்தது. இதனால் மார்பு காம்பு வாயினுள் செல்வதால் குழந்தையால் கடிக்க முடியாது.

3 நேரத்திற்கு பால் கொடுக்கவும்

உங்கள் குழந்தையை நன்றாக கவனியுங்கள். அவர்கள் எப்போது சாப்பிடுகிறார்கள், எப்போது விளையாடுகிறார்கள், எப்போது தூங்குகிறார்கள் என்று. சில நேரங்களில் குழந்தைகள் வயிறு நிறைந்துவிட்டால் கூட கடிப்பார்கள். அவர்களுக்கு கட்டாயப்படுத்தி பால் புகட்டாமல் நேரத்திற்கு கொடுங்கள்.

4 தூங்குவதற்கு முன் பால் கொடுப்பதை நிறுத்த வேண்டும்

குழந்தைகள் தூங்கும் போது கடிக்க வாய்ப்புள்ளது. பாலூட்டும் போது குழந்தை தூங்கிவிட்டால், மார்பை வெளியே எடுப்பது, சிரமமாகவும், வலி மிகுந்ததாகவும் இருக்கும். எனவே, பாலூட்டும் போது குழந்தையை தூங்க விட வேண்டாம். குழந்தை தூங்க ஆரம்பித்தால் விரல்விட்டு மார்பை குழந்தையின் வாயிலிருந்து எடுத்துவிடுங்கள்.

5 குழந்தையிடம் பேசுங்கள்

குழந்தையின் கவனம் சிதறினால் அவர்கள் நகர்ந்து மார்பை கடிக்க நேரிடும். உங்களின் கவனம் சிதறினாலும், உங்களின் கவனத்தை ஈர்க்க குழந்தைகள் கடிப்பார்கள். எனவே, அமைதியான இடத்தில் பாலூட்டுங்கள். பாலூட்டும் போது குழந்தையிடம் பேசுங்கள். நீங்கள் அவர்களோடு தான் இருக்கிறீர்கள் என்று இது உறுதியளிக்கும்.

6 பால் சுரப்பு நிற்க கூடாது

பால் சுரப்பு சீராக இல்லையென்றாலும் குழந்தைகள் கடிப்பார்கள். எனவே, பால் சுரப்பு சீராக இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.

7 குழந்தையை கீழே படுக்க வையுங்கள்

இது ஓரு சிறந்த வழி. குழந்தை கடித்தால் சிறிது நேரம் கீழே படுக்க வைத்துவிட்டு, பின் பால் கொடுக்கவும். இதனால் கடித்தால் பால் கிடைக்காது என்று குழந்தைகள் உணர்ந்து கொள்வார்கள். ஒரு 9 மாத குழந்தைக்கு அன்னையின் உடல்மொழி நன்றாக புரியும்.  

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon