Link copied!
Sign in / Sign up
6
Shares

தாய்ப்பாலூட்டும் பெண்கள் சாப்பிட வேண்டியவை

தாய்ப்பாலூட்டும் பெண்கள் சாப்பிட வேண்டியவைஎந்த உணவுகளை சாப்பிட வேண்டும்? எதை சாப்பிட கூடாது? நொறுக்குத்தீனிகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடலாமா? அதிக கலோரிகள் எடுத்துக்கொள்ளலாமா? அதிக பழங்கள் சாப்பிடலாமா? என்பது போன்ற கேள்விகள் எழும். மேலும், உங்கள் குழந்தைக்கும் சேர்த்து இரண்டு பேருக்காக சாப்பிட வேண்டும் என்பதால், அதிகளவு உணவு உட்கொள்ள வேண்டும்.

இந்த குழப்பங்கள் எல்லாம் உங்களுக்கும் இருக்கிறதா? கவலைப்படாதீர்கள். இங்கே, உங்கள் உடல் நலத்தையும், உங்கள் குழ்நதையின் உடல் நலத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் உணவுகள் பற்றி பார்க்கலாம்.

1 அதிக கலோரிகள்

கண்டிப்பாக உங்கள் உடலின் ஆற்றலை தக்கவைத்துக்கொள்ள அதிகளவு கலோரிகள் உள்ள உணவை உட்கொள்ள வேண்டும். அதாவது 2 பேருக்காக சாப்பிட வேண்டும். இதற்கு, சத்துக்கள் நிறைந்த வெண்ணெயுடனான பிரட், சீஸ், வாழைப்பழம், ஆப்பிள் மற்றும் தயிர் ஆகியவற்றை சாப்பிடலாம்.

2 புரதம்

உங்களின் பால் சுரப்பை அதிகரிக்க, மற்றும் சீராக வைத்திருக்க உங்களுக்கு புரதம் தேவைப்படும். குழந்தையின் வளர்ச்சிக்கும், தாய்மார்களுக்கு உடல்நலனுக்கும் புரதம் உதவுகிறது. புரதம் நிறைந்த இறைச்சி, பால் பொருட்கள், முட்டை, பீன்ஸ், பருப்பு வகைகள் மற்றும் கடல் உணவுகளை சாப்பிடலாம். முழு தானியம், பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம். வைட்டமின்களும் தாய்ப்பாலூட்டும் தாய்மார்களுக்கு அவசியம் தேவை.

3 தண்ணீர்

 

நிறைய தண்ணீர் அருந்துங்கள். குறிப்பாக தாய்ப்பால் கொடுக்கும் முன் மற்றும் கொடுத்த பின் நிறைய தண்ணீர் அருந்த வேண்டும். உங்களின் சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் இருந்தால் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். ஆனால், குளிர் பானங்கள், சக்கரை நிறைந்த பானங்களை பருகும் போது கவனமாக இருங்கள். இவை உங்களின் உடல் எடையை அதிகரிக்க கூடும்.

4 இரும்புசத்து மற்றும் கால்சியம்

பலம் வாய்ந்த எலும்புகளே, பலம் வாய்ந்த குழந்தைகளை உருவாக்கும். இரும்புசத்து மற்றும் கால்சியம் நிறைந்த உணவுகள் உங்கள் குழந்தைக்கு இரும்புசத்து மற்றும் கால்சியம் சத்துகள் பெற உதவும். இரும்புசத்து நிறைந்த பருப்பு, தானியம், முழு தானிய உணவுகள், பட்டாணி, கீரை, உலர்ந்த திராட்சை ஆகியவற்றை சாப்பிடலாம். கால்சியம் சத்திற்கு பால் பொருட்களை எடுத்துக்கொள்ளலாம்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
100%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon