Link copied!
Sign in / Sign up
1
Shares

தாய்ப்பாலை நிறுத்திய பின்னும் தாய்ப்பால் சுரக்கிறதா?

தாய்ப்பால் என்பது குழந்தைக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் அளிக்க கூடிய அற்புத உணவாகும். ஆனால், குறிப்பிட்ட வயதிற்கு பின் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திவிடுகிறார்கள். சிலதாய்மார்களுக்கு பால் கொடுப்பதை நிறுத்தியபின்னும் பால் சுரந்துகொண்டே இருக்கும். இங்கு பால் சுரப்பதற்கான காரணங்களையும், அதை தடுக்கும் முறைகளையும் பற்றி பார்க்கலாம்.

 

பாலூட்டுவதை நிறுத்திய பின்னும் தாய்ப்பால் சுரப்பதற்கான காரணங்கள்

பாலூட்டும் தாய்மார்களுக்கு புரோலாக்டின் (Prolactin) என்கிற ஹார்மோன் சுரக்கும். தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திய சில மாதங்களுக்குப் பிறகு, அந்த ஹார்மோன் கொஞ்சம் கொஞ்சமாக சுரப்பதை நிறுத்தும். ஆனால், பால் கொடுப்பதை நிறுத்திய உடனே பால் சுரப்பது நிற்காது. தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திய பிறகு 3 - 6 மாதங்கள் வரை தாய்ப்பால் சுரப்பு இருக்கும். அது இயல்புதான். இதில் பிரச்சனை ஒன்றும் இல்லை

அரிதாக ஒரு சிலருக்கு குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தி பல ஆண்டுகளுக்குப் பின்னரும் பால் சுரப்பு இருக்கும். இதனை Galactorrhoea என்பார்கள். இது ஹார்மோன் பிரச்னை. அதாவது, புரோலாக்டின் ஹார்மோன், தைராய்டு ஹார்மோன், பிட்யூட்டரி ஹார்மோன் போன்ற ஹார்மோன்சுரப்புகளில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் தாய்ப்பால் நிறுத்திய பல வருடங்களுக்குப் பிறகும் சிலருக்கு இப்படி ஏற்படும். ஹார்மோன்களில் ஏற்படும் பிரச்னையைத் தவிர்த்து வேறு காரணங்களால் இப்பிரச்னை ஏற்படாது.

அறுவை சிகிச்சை புரோலாக்டின் ஹார்மோன் மற்றும் தைராய்டு ஹார்மோன் பிரச்னை குறைபாடுகளுக்கு மாத்திரை சாப்பிடுவதன் மூலம் இந்தப் பிரச்னையை குணப்படுத்தி விட முடியும். பிட்யூட்டரி ஹார்மோன் சுரப்பதில் பிரச்னை இருந்தாலும் மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம். ஒரு வேளை பிட்யூட்டரியில் கட்டி இருந்தால் அறுவைசிகிச்சை மூலம் தான் சரி செய்ய முடியும். இது மூளை வழியாக சிறுதுளை மூலம் செய்யப்படும் அறுவை சிகிச்சை.

தாய்ப்பால் சுரப்பதை நிறுத்தும் முறைகள்
துவரம் பருப்பு

துவரம் பருப்பை பன்னீர் வீட்டு அரைத்து மார்பகத்தில் பற்றுப் போட்டால் தாய்ப்பால் சுரப்பு குறையும்.

தேங்காய்

தேங்காய் பூவை வதக்கி மார்பகத்தில் கட்டினால் தாய்ப்பால் சுரப்பு நின்றுவிடும்.

மல்லிகை பூ

மல்லிகை பூவை மார்பகத்தில் வைத்துக் கட்டினால் தாய்ப்பால் சுரப்பு நின்றுவிடும்.

வேப்பில்லை

வேப்பில்லைகளை மார்பில் வைத்துக் கட்டினால் பால்சுரப்பு வற்றிவிடும்.

முட்டைக்கோஸ்

முட்டைக்கோஸை பொடிப்படியாக நறுக்கி மூட்டையாக கட்டி மார்பில் வைத்துக் கட்டினால் தாய்ப்பால் சுரப்பு குறையும்.

வாழை பிஞ்சு

வாழைப்பிஞ்சு தாய்ப்பாலை நிறுத்தும் தன்மை உள்ளது. வாழைப்பிஞ்சை அரைத்து மார்பில் பற்று போட்டால் பால் சுரப்பது நின்றுவிடும். 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon