Link copied!
Sign in / Sign up
13
Shares

தாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா?

தாய்ப்பால் தருவதென்பது குழந்தைக்கு மிகவும் அவசியமான ஒன்று என்றாலும் அந்தந்த வயதில் நம் குழந்தைக்கு என்ன தேவையோ அது கொடுப்பதுதானே முறை? குழந்தைக்கு நீங்கள் நல்லது எது? கெட்டது எது? என பிரித்துப்பார்க்க பிள்ளை பருவத்திலே பழக்குவது அவர்களுடைய பகுத்தறிவை வளர்க்க உதவுகிறது. ஒருசில பெற்றோர் சொல்வார்கள். 'என் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து வந்தேன். இப்போது என்னால் எப்படி நிறுத்துவது என தெரியவில்லை...' என கூறுவார்கள். இதற்கு காரணம், நீங்கள் தான். பாவம் குழந்தை அழுகிறான் என நீங்கள் கொடுக்க தாய்ப்பால் நிறுத்தும் காலத்தை தாண்டியும் சென்றுவிடுகிறது. அப்புறம் எப்படி நிறுத்துவது என உங்களுக்கு தெரிவதில்லை. உங்கள் குழந்தைக்கும் தெரியவில்லை. இதோ தாய்ப்பாலை நிறுத்த எட்டு வழிகளை நாங்கள் உங்களுக்கு தருகிறோம். படித்து பயன்பெறுங்கள்...  

1. ஆஸ்ட்ரோஜன் அதிகரிக்க மருந்து கொடுக்கலாம்:

மருந்து எடுத்துக்கொள்வதால் ஆஸ்ட்ரோஜன் அளவு அதிகரிக்கும். இதனால் பால் சுரப்பு என்பது குறையும். மருந்துகளை எடுத்துக்கொள்வதில் மருத்துவரின் பரிந்துரை என்பதை மறவாதீர்கள். சிலர் குடும்ப கட்டுபாட்டிற்காக மாத்திரை எடுத்துக்கொள்வார்கள். இந்த மாத்திரை உட்கொள்வதாலும் பால் சுரப்பு குறைய வாய்ப்பிருக்கிறது.

2. மார்பக இறுக்கம்:

பால்சுரப்பை கட்டுப்படுத்த உங்கள் மார்பகத்தை போட்டு கொடுமை படுத்தாதீர்கள். இதனால் மடி வீக்க நோய் என்பது ஒருவருக்கு உண்டாகிறது. உங்கள் மார்பகத்தை இயல்பு நிலைக்கு விட்டுவிட முயலுங்கள்.

3. திரவம் உட்கொள்வதில் கட்டுப்பாடு:

தண்ணீர் குடிப்பதால் பால்சுரப்பு குறையும் என்பது கருத்து. உடனே நாமும் பால்சுரப்பை கட்டுப்படுத்த தண்ணீர் குறைவாக குடிப்போம். ஆனால், உண்மை என்னவெனில்... தண்ணீர் குறைவாக குடிப்பதால் நோய் ஏற்படுவது மிகவும் எளிதாகிறது. உங்களுக்கு தேவையான எதிர்ப்பு சக்தி என்பது குறைகிறது.

4. முட்டைக்கோசு இலைகள்:

நன்றாக கழுவிய, உலர வைக்கப்பட்ட, குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்ட முட்டைக்கோசு இலைக்கு பால்சுரப்பை கட்டுப்படுத்தும் பண்பு என்பது உண்டு. இந்த முட்டைக்கோசு இலைகளில் சல்பர் இருப்பதால் பால் உற்பத்தியானது குறையக்கூடும். இதனால் வீக்கமோ, வலியோ உண்டாவதில்லை.

5. குறைவான பால் தருதல்:

நீங்கள் எவ்வளவு உங்கள் குழந்தைக்கு பால் தருகிறீர்களோ, அதை பொறுத்தே பால் சுரப்பானது அமைகிறது. அதனால், கொஞ்சநாளுக்கு பிறகு... பால் தருவதை குறைத்துக்கொள்ள பாருங்கள். உங்கள் குழந்தை அடம்பிடித்தாலும் அவனுக்கு பால் தரும் நிலையில் மட்டுமே கொடுக்க பழகுங்கள். இதனால் பால்சுரப்பு என்பது தானாக குறையக்கூடும். அத்துடன் உங்கள் குழந்தையும் உணவு உண்ண தன்னை பழக்கப்படுத்திக்கொள்ள தயாராவான்.

6. வலி நிவாரணி:

நீங்கள் பால்சுரப்பை குறைப்பதனால் மார்பகத்தில் வலி ஏற்படக்கூடும். அப்போது, மருத்துவரின் பரிந்துரையுடன் மருந்து மற்றும் மாத்திரை எடுத்துக்கொள்ளலாம்.

7. உங்களுக்கு என சில நேரம் வேண்டும்:

பால் மறக்க செய்வதென்பது வித்தியாசமான உணர்வை மனதில் தரக்கூடியது. ஒருசில நாட்கள் உங்களுக்கு ஏதோ தனிமையில் இருப்பது போல் தோன்றினாலும், அதன்பின்னர் மனதளவில் நீங்கள் தயாராகிவிடுவீர்கள்.

8. உதவி தேவை:

உங்களுக்கு தயக்கம் இருப்பின்... உடனடியாக மருத்துவரை சந்தித்து அவரிடம் ஆலோசனை பெற்று அதன்படி செயல்படுவது மிக நல்லது. 

குழந்தை அடம்பிடிக்கிறான்... அழுகிறான்...கவலைகொள்கிறான் என நீங்கள் நினைத்து பால்சுரப்பை நிறுத்த தயங்கினால் உங்கள் குழந்தைக்கு பருவ நிலையில் வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல் கூட போகலாம். கவலை எப்போது வேண்டுமானாலும் வரலாம். அதை காலத்தில் செய்து அதன்பிறகு நிறைவுடன் வாழ நீங்கள் முயலக்கூடாதா?

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon