Link copied!
Sign in / Sign up
10
Shares

தாய்ப்பால் பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்

பிறந்த குழந்தைக்கு மிகவும் ஊட்டச்சத்துமிக்க ஒரு உணவு தான் தாய்ப்பால். அதனால்  தான் உடல்நல நிபுணர்கள் தாய்ப்பால் கொடுக்கச் சொல்கிறார்கள். தாய்ப்பால் கொடுப்பதால், அது குழந்தைக்கு மட்டுமின்றி, தாய்க்கும் பல வழிகளில் உதவும். மேலும் குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப தாய்ப்பாலில் உள்ள சத்துக்களும் மாற்றமடையும். குறிப்பாக குழந்தை பிறந்த ஒரு வருட காலத்தில் தான், குழந்தையின் ஆரோக்கிய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்குமாறு தாய்ப்பாலில் குறிப்பிட்ட மாற்றங்களும் ஏற்படும். சரி, இப்போது அந்த மாற்றங்கள் குறித்து காண்போம். 

1 கொலஸ்ட்ரோம்

பிரசவித்த 2 மணிநேரத்திற்குள் குழந்தைக்கு ஏன் கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். குழந்தைக்கு முதன் முதலில் கொடுக்கப்படும் தாய்ப்பாலில் அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிரம்பி இருக்கும். அதுமட்டுமின்றி, இந்த பால் சற்று மஞ்சள் நிறத்தில் இருக்கும். இந்த பால் தான் உலகிலேயே மிகவும் சத்து நிறைத்தது. இதில் கொலஸ்ட்ரோம் உள்ளது.

2 அடர்த்தி

மஞ்சள் நிறத்தில் அடர்த்தியாக இருந்த தாய்ப்பால் குழந்தை பிறந்த 3 மணிநேரத்திற்குப் பின், மிகவும் நீர்மமாக இருக்கும். இது தொடந்து இரண்டு நாட்களுக்கு இருக்கும். பின் 2-3 நாட்கள் கழித்து தாய்ப்பாலின் அடர்த்தி சற்று அதிகரித்திருக்கும்.

3 ஆன்டி-பையோட்டிக்

இந்த மாற்றங்கள் முடிந்து பால் சாதாரண நிலைக்கு வந்த ஒன்றரை மாதத்தில் தாய்ப்பாலில், குழந்தையின் உடலை நோய் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் தாய்ப்பாலில் ஆன்டி-பையோட்டிக் அதிகரித்திருக்கும்.

4 கலோரிகள்

குழந்தை பிறந்த மூன்று மாதங்களுக்குப் பின், குழந்தையின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கு தாய்ப்பாலில் கலோரிகள் சற்று அதிகமாகி இருக்கும். தாய்மார்கள் ஆரோக்கியமான உணவை எடுத்து கொள்வது அவசியமாகிறது.

5 ஒமேகா

ஆறு மாத காலத்திற்குப் பின், தாய்ப்பாலில் ஒமேகா அமிலங்கள் அதிகமான அளவில் இருக்கும். இந்த சத்து குழந்தையின் ஆரோக்கியமான மூளை வளர்ச்சிக்கு உதவி புரியும்.

6 அதிகம்

12 மாதங்களுக்கு பின் ஒரு தாய் தன் குழந்தைக்கு தாய்ப்பாலைக் கொடுத்தால், அந்த பாலில் ஒமேகா அமிலங்கள் மற்றும் கலோரிகள் இரண்டுமே அதிகளவில் இருக்கும். இந்த நிலையில் குழந்தைக்கு தாய்ப்பாலைக் கொடுக்கும் போது, அது குழந்தையின் தசை மற்றும் மூளை வளர்ச்சியை வேகமாக்கும். எனவே தான் அழகு பாழாகிறது என்று குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டாம். குழந்தைகளுக்கு குறைந்தது ஆறு மாதத்திற்காவது அவசியம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon