Link copied!
Sign in / Sign up
3
Shares

தாய்ப்பால் மாற்றி தருவது சரியா? தவறா?

குழந்தைகளின் வளர்ச்சிக்கு காரணமாக இருப்பதில் முதன்மையானது தாய்ப்பால். அத்துடன், தாய்ப்பால் தருவதன் மூலம் தாய் மற்றும் குழந்தைக்கான உறவு என்பது வலிமை அடைகிறது. ஆனால், ஒரு சில தாய்மார்கள்., தாய்ப்பால் தருவதில் சிக்கல் இருக்க, தன் உறவினர்களின் மூலமாகவோ அல்லது நண்பர்கள் மூலமாகவோ தன் குழந்தைக்கு தருகின்றனர். இது சரிதானா? இதனால் ஏதேனும் ஆபத்து இருக்கிறதா? வாருங்கள் பார்க்கலாம்.

என்ன ஆபத்து?

உங்களுடைய உறவினர்கள் மூலமாக தாய்ப்பால் தர எண்ணினால், நீங்கள் மருத்துவரிடம் இதையும் கேட்க வேண்டியது அவசியம். ஒருவேளை உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் தரும் ஒருவருக்கு தொற்று நோய் இருக்குமெனில், எளிதில் உங்கள் குழந்தைக்கு அது தொற்றிக்கொள்ளக்கூடும்.

எதனை நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும்?

ஒருவேளை உங்கள் சகோதரி அல்லது வேறு யாரோ தாய்ப்பால் தர வேண்டிய சூழல் உருவாகினால் அவர்களுடைய ஆரோக்கிய அடிப்படையை முற்றிலுமாக தெரிந்துக்கொண்டு அதன் பின்னர் கொடுக்க முயலுங்கள். நீங்கள் கேட்பதனால் அவர்கள் மனம் வருந்தக்கூடும் என நினைத்து அமைதி காப்பது முறையல்ல.

தாய்ப்பால் பகிர்வது எந்த நிலையில் இருக்கிறது?

தாய்ப்பால் தருவதென்பது அதிகரித்து வரும் வேளையில், தர முடியாத தாய்மார்கள் பகிர்ந்துகொள்ள நினைக்கின்றனர்.

ஒரு ஆய்வின் அறிக்கைப்படி தாய்ப்பால் பகிர்வது என்பது நண்பர்கள் மூலமாக அதிகரித்து இருப்பதாக சொல்கிறது. 

வெளிநாட்டில் பால் வங்கி என்பது இயங்கி வர, இங்கே குழந்தைகளுக்கு தேவையான பால் கிடைக்கிறது. இது மிகவும் பாதுகாப்பாக செய்துவர, இந்த பால் வங்கியில் கொடுப்பவர் யார்? வாங்குபவர் யார்? கொடுப்பவருக்கு ஏதாவது நோய்கள் இருக்கிறதா? போன்ற ஆய்வுகளும் நடத்தப்படுகிறது. ஏனெனில், பாட்டில் பாலை விட, தாய்ப்பால் தான் சத்தானது என அங்குள்ளவர்கள் முற்றிலும் நம்புகிறார்கள்.

அதேபோல் வெகுநாட்களுக்கு தாய்ப்பால் சேமித்து வைக்கப்பட்டால் அதுவே கிருமியை உருவாக்கி தேவையில்லா பிரச்சனையை தரக்கூடும்.

பால் பகிர்வது எதிர்க்காலத்தில் எப்படி இருக்கும்?

தற்போதைய நிலவரப்படி, பால் வங்கியில் பகிரப்படும் பாலானது தாய்மார்களுக்கு போதியதாக இல்லாததால், குழந்தைகளுக்கு தாய்ப்பால் தரும் சிரமம் இருக்கிறது. 

உங்களுடைய குழந்தைகளுக்கு இன்னொருவருடைய தாய்ப்பால் தருவது தவறல்ல. ஆனால், கொடுப்பவர்களுக்கு தொற்று நோய் எதுவும் இல்லாமல் இருத்தல் வேண்டும். ஏதேனும் விசேஷங்களுக்கு சென்று அங்கே உங்கள் சகோதரி அல்லது உறவினர் மூலம் தாய்ப்பால் தருவதை அவர்கள் பற்றி முழுவதுமாக தெரிந்துக்கொள்ளாமல் முயலாதீர்கள்.

ஏனெனில், தாய்ப்பால் என்பது உங்கள் குழந்தைக்கு மிகவும் முக்கியமானதாகும். அதுவும், கவனத்துடன் கையாள வேண்டிய விஷயமும் கூட...

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon