Link copied!
Sign in / Sign up
0
Shares

தாய்ப்பால் கொடுப்பதற்கான சிறந்த நிலைகள்

தாய்ப்பால் புகட்டுவது என்பது தாய் மற்றும் சேய் இருவரின் வாழ்விலும் ஒரு முக்கிய பகுதியாகும். இருவருக்கும் இது புதிய அனுபவம் என்பதால் ஆரம்பத்தில் இது கடினமாக இருக்கும். ஆனால் கடினம் என்பதற்காக இதை அப்படியே விட்டுவிட கூடாது. முடிந்த அளவு முயற்சி செய்ய வேண்டும்.

குழந்தைக்கு முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். குழந்தைகளின் நோய்யெதிர்ப்பு சக்தி அதிகரிக்க தாய்ப்பால் மிகவும் அவசியம். உங்களின் சிரமத்தை போக்க, இங்கு தாய்ப்பால் கொடுப்பதற்கான சிறந்த நிலைகள் பற்றி பார்க்கலாம்.

1 இடது புறமாக பாலூட்டல்

இது தாய்மார்களுக்கு கற்றுக்கொடுக்கப்படும் அடிப்படையான ஒன்றாகும். இந்த நிலையை ஒரு மாத குழந்தைகளுக்கு பயன்படுத்தலாம். ஒரு நாற்காலி அல்லது படுக்கையில் சௌகரியமாக அமர்ந்துகொள்ளுங்கள். நீங்கள் வலதுபக்கமாக பாலூட்டுகிறீர்கள் என்றால்,குழந்தையை வலது கையால் பிடித்துக்கொள்ளுங்கள். உங்களின் இடது கையால் மார்பை பிடித்துக்கொண்டு பாலூட்டுங்கள்.

2 வலப்புறமாக பாலூட்டல்

இது மேற்கூறிய முறைபோல் தான் இருக்கும். ஆனால் கைகள் மட்டும் வேறுபடும். குழந்தை பால் குடிக்க சிரமப்பட்டால் இந்த முறையை பயன்படுத்தலாம். ஒரு நாற்காலி அல்லது படுக்கையில் சௌகரியமாக அமர்ந்துகொள்ளுங்கள். குழந்தையை ஒரு தலையணை மீது வைத்து சரியான உயரத்திற்கு கொண்டுவரவும். நீங்கள் வலதுபுறமாக பாலூட்டினால், குழந்தையின் தலையை இடது கையால் தங்கிப்பிடிக்கவும். குழந்தையின் உடலை மற்றொரு கையால் பிடிக்கவும்.

3 ஒருக்களித்து படுத்து பாலூட்டல்

இது தாய்மார்களுக்கு பிடித்தமான நிலையாகும். நீங்கள் படுத்துக்கொண்டே பாலூட்டலாம். பல தாய்மார்கள் இந்த நிலையில் பால் கொடுத்தால் சோர்வாக உணர்வதில்லை என்று கூறியுள்ளனர். உங்களின் வலதுபக்கமாக குழந்தையை பார்த்தபடி படுத்துக்கொள்ளுங்கள். குழந்தையின் தலை மற்றும் உடலை உங்களின் வலது கையால் பிடித்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு கழுத்து வலி வராமல் இருக்க தலையணையில் தலை வைத்து படுத்துக்கொள்ளுங்கள்.

4 மேல் நோக்கி பிடித்து பாலூட்டல்

குழந்தைக்கு மூச்சு விடும் பிரச்சனை இருந்தால் அல்லது சற்றே பெரிய குழந்தையாக இருந்தால் இந்த நிலையை பயன்படுத்தலாம். உங்களுக்கு பால் சுரப்பு அதிகமாக இருக்கும் பட்சத்தில் இன்னும் சௌகரியமாக இருக்கும். ஒரு நாற்காலியில் அமர்ந்துகொண்டு, குழந்தையை நேராக உங்கள்மீது அமரவைத்து பாலூட்டுங்கள். ஒரு கையால் குழந்தையின் தலையை பிடித்துக்கொள்ளுங்கள். மற்றொரு கையால் மார்பை பிடித்துக்கொண்டு பாலூட்டுங்கள்.

5 முதுகுப்புறமாக படுத்து பாலூட்டல்

இது அம்மாக்கள் ஓய்வாக பால் கொடுக்க உதவும் நிலையாகும். குழந்தை உங்கள் உடலோடு ஒட்டி பால் குடிக்கும் போது, பால் சுரப்பு அதிகமாகும். தலையணையை முதுகுக்கு பின்னால் வைத்து சாய்த்துக்கொண்டு பால் கொடுக்கலாம். சுகப்பிரசவம் என்றால், குழந்தையின் முகத்தை மார்புக்கு நேராகவும், கால்களை உங்கள் தொடைக்கு அருகிலும் வைத்துக்கொள்ளலாம். சிசேரியன் என்றால், குழந்தை காயத்திற்கு அருகில் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon