Link copied!
Sign in / Sign up
0
Shares

தாய்மையின் தவறு குறித்து 5 தாய்மார்கள் கூறும் உண்மைகள்

உங்களின் கைகளின், உங்களின் தேவதையை வாங்கும் போது, நீங்கள் இந்த மாதிரியான அம்மாவாக இருக்க வேண்டும் என்று யோசித்திருக்கிறீர்களா? கர்ப்பகாலத்தில் தாய்மையை பற்றி உங்களுக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், இதில் உங்கள் தவறு எதுவும் இல்லை. ஆரம்பத்தில் சற்று கடினமாக இருந்தாலும், போக  போக பழகி விடும். இங்கு தாய்மை  குறித்து 5 தாய்மார்கள் கூறும் உண்மைகளை பார்க்கலாம்.

1 மகள் மீது பழி சுமத்தல்

தீபாவளிக்கு என் மாமியார் எனக்கு ஒரு பச்சை நிற புடவையை எடுத்துக்கொடுத்தார். ஆனால் எனக்கு அந்த நிறம் பிடிக்கவில்லை. என்ன தான், நானும் எனது மாமியாரும் இணக்கமாக இருந்தாலும், எங்கள் இருவரின் விருப்பங்களும் தேர்வுகளும் வெவ்வேறானவை. அதிலும் அவர் எனக்கு எடுத்து கொடுத்த பச்சை நிறம் எனக்கு பிடிக்காத நிறம். அதுமட்டுமில்லாமல், வீட்டு விசேஷகங்களுக்கு அந்த புடைவையை அணியுமாறு என் மாமியார் வலியுறுத்தினார். நானும் அவருக்காக இரண்டு முறை அப்புடவையை அணிந்தேன். ஒரு நாள் என் குழந்தைக்கு பால் எடுத்துக்கொண்டு அறைக்கு திரும்பிய போது, என் மகள் அந்த புடைவையில் லிப்ஸ்டிக்கை பூசிக்கொண்டு இருந்தாள். எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. உடனே ஒரு யோசனை தோன்றியது. புடவையில் மேலும் லிப்ஸ்டிகை பூசி அதை அணிய முடியாத படி செய்துவிட்டேன். என் மாமியாரும், என் மகள் தான் செய்தாள் என்று அதை பெரிதுபடுத்தாமல் விட்டுவிட்டார். குழந்தையின் மீது யாருக்கு தான் கோபம் வரும்.

2 என் குழந்தையை குழந்தைகள் நல மருத்துவமனையில் விட்டு வந்த பொழுது

என் மகனுக்கு 2 வயது இருக்கும் போது இது நடந்தது. அவனுக்கு 101 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் விட்டு விட்டு காய்ச்சல் அடித்தது. இதனால் நான் மிகவும் பதட்டமாகிவிட்டேன். அதனால் அவனை குழந்தைகள் நல மருத்துவரிடம் அழைத்து சென்றேன். அவனை பரிசோதித்து விட்டு, மருத்துவர் அவனுக்கு கொடுக்க வேண்டிய மருந்து மற்றும் மாத்திரைகளை எழுதி கொடுத்தார். நான் மாத்திரைகளை வாங்க செல்லும் முன், எனது மகனை மருத்துவமனைக்கு மகளுடன் வந்த மாற்றொரு பெற்றோருடன் விட்டு செல்ல முடிவெடுத்தேன். ஆனால் ஒரு பொறுப்பில்லாத அம்மா போல் என் குழந்தையை மீண்டும் அழைத்து செல்ல மறந்துவிட்டு வாகனம் நிறுத்தும் இடத்திற்கு வந்துவிட்டேன். என் காரை எடுத்த பிறகு தான் என் குழந்தையை மறந்துவிட்டது எனக்கு நினைவுக்கு வந்தது. இப்போது அதை நினைத்தாலும் எனக்கு சிரிப்பு வருகிறது.

3 படுக்கையை மாற்றுவதற்கு சோம்பேறித்தனம்

அதிகாலை 3 மணி இருக்கும். என் மகன் 10ஆவது முறையாக படுக்கையில் சிறுநீர் கழித்தான். துரதிர்ஷ்டவசமாக, அந்த நேரத்தில் டயப்பரும் வீட்டில் இல்லை. என் கணவரும் இரவு ஷிஃப்டில் இருந்ததால் அந்த நேரத்தில் கடைக்கு செல்லவும் வேறு ஆள் இல்லை. எனக்கு படுக்கை விரிப்புகளை மாற்றவும் சோம்பேறித்தனமாக இருந்தது. எனவே, என்னிடம் இருந்த குழந்தைக்கான துணிகளை வைத்து குழந்தையை சுத்தப்படுத்திவிட்டு, ஈர படுக்கையிலேயே தூங்கி விட்டேன்.

4 என் குழந்தையை தவறுதலாக தள்ளிவிட்ட போது

என் மகள் தவழ்ந்து கொண்டிருந்த போது, அவளை பல புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்தேன். இப்போது அவளுக்கு 5 வயதாகிறது. அவளுக்கு 2 வயதான போது, வீட்டுக்கு வெளியே இருந்த ஊஞ்சலில் வைத்து புகைப்படம் எடுக்க வேண்டும் என்று ஆசைபட்டேன். அது ஏன் என்று தெரியவில்லை. அதனால், அவளை ஊஞ்சலில் உட்கார வைத்து அவளின் தலைமுடியை சரி செய்துவிட்டேன். அப்போது அவளின் ஆடை கசங்கி இருந்ததை பார்த்தேன். அதை சரி செய்ய முயற்சி செய்த பொழுது, அவளை தவறுதலாக ஊஞ்சலில் இருந்து தள்ளிவிட்டுவிட்டேன். அவள் அப்படியே தலைகீழாக விழுந்துவிட்டாள். அதற்கு பிறகு நீண்ட நேரம் அழுது கொண்டே இருந்தாள்.

5 என் குழந்தையின் டயப்பரை மாற்றாமல் என் தாயிடம் ஒப்படைத்த போது

அது ஒரு வியாழக்கிழமை காலை நேரம். எனக்கு வேலைக்கு செல்ல நேரமாகி கொண்டிருந்தது. என் பணியிடம் என் வீட்டில் இருந்து சற்று தொலைவில் இருந்தது. மேலும், என் குழந்தையை என் தாயிடம் விட்டுவிட்டு செல்ல வேண்டும். ஒரு கையில் லேப்டாப் பையுடன் மற்றொரு கையில் என் குழந்தையுடன் நான் கிளம்ப தயாராகி கொண்டிருந்த போது, என் குழந்தை அவள் டயப்பரில் மலம் கழித்துவிட்டாள். ஆனால் எனக்கு வேலைக்கு நேரமாகி கொண்டிருந்ததால் அவளின் டயப்பரை மாற்றாமல் அப்படியே என் தாயிடம் கொடுத்துவிட்டு சென்றுவிட்டேன். அதுமட்டுமில்லாமல், என் தாயிடமும் அவளை பற்றி சொல்ல மறந்துவிட்டேன். பிறகு, என் அம்மா என்னை தொடர்பு கொண்டு எனது பொறுமையின்மையை கடிந்து கொண்டார்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon