Link copied!
Sign in / Sign up
15
Shares

தாய்மார்களுக்கான சில ஆயுர்வேத குறிப்புக்கள்!

ஆயுர்வேதம் என்பது 5000 வருட பழமையான உடல் ஆரோக்கிய பராமரிப்பு முறையாகும். இது தாய்க்கும் சேய்க்கும் சிறந்த பாதுகாப்பை வழங்க வேண்டும் என்ற அணுகுமுறையில் இந்தியாவில் உருவாக்கப்பட்டது. ஆயுர்வேதம், உடலின் சக்திகளை உணவு மற்றும் பழங்கால நெறிமுறைகளின் மூலம் சமமாக வைத்துக்கொள்வதை அடிப்படையாக கொண்டது. ஆயுர்வேதத்தின் படி, நல்ல ஆரோக்கியம் என்பது மூன்று சக்திகளான வாதம், பித்தம், கபம் ஆகியவற்றை சமநிலையில் வைத்துக்கொள்வதன் சார்ந்தே உள்ளது. இந்த சமநிலை என்பது ஒவ்வொருவருக்கும் தனித்துவமானது.

1 தாய்மார்களுக்கான உணவு

பிரசவித்த புதிதில் பெரும்பாலான தாய்மார்கள் சந்திக்கும் பிரச்சனைகள், கவலை, தூக்கமின்மை, வறட்சி, வாயு, மலச்சிக்கல் ஆகியவையாகும். இவை அனைத்தும் வாதம் உடலில் சமநிலையில் இல்லாததால் ஏற்படுபவை.

ஆயுர்வேத மருத்துவர்கள் இந்த சமநிலையின்மைக்கு, உணவு, ஓய்வு, மூலிகைகள் மூலம் சிகிச்சையளிக்கிறார்கள். வாதத்தை சரி செய்ய, ஆயுர்வேதம் சூடான, புதிதாய் செய்யப்பட்ட உணவுகளை முன் வைக்கின்றது. அதுமட்டுமில்லாமல், இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு சுவை கொண்ட உணவுகள் பரிந்துரைக்கப்படுகிறது. இனிப்பு என்பது ஆயுர்வேதத்தில் சக்கரையை குறிப்பதில்லை; மாறாக அது தேன், அரிசி மற்றும் பழங்களை குறிக்கிறது. குளிர்ச்சியான உணவுகள் ஜீரணம் ஆவதற்கு கடினமாக இருக்கும். அதனால் சூடான மற்றும் வெதுவெதுப்பான உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். அதேபோல், பச்சை காய்கறிகள், ஐஸ் கிரீம், அசைவ உணவுகள் ஆகியவை குளிர்பதன பெட்டியில் இருந்து எடுக்கப்பட்ட உடனே உண்பதை தவிர்க்கவும். இவை அனைத்தும் உடம்பில் உள்ள நீரை உறிஞ்சி, வாயு மற்றும் மலச்சிக்கலை ஏற்படுத்தும். அதனால் தாய்மார்கள், எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய உணவுகளை உண்ண வேண்டும்.

உலர்ந்த பழங்கள் மற்றும் நட்ஸ்கள் ஆகியவை இரவில் ஊற வைத்து சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும். மேலும், பாதாமை தோல் நீக்கியோ அல்லது பொன்னிறமாக வறுத்தோ சாப்பிடலாம். புரதம் நிறைந்த பீன்ஸ், கோழி மற்றும் மீன் ஆகியவை எடுத்துக்கொள்ளலாம். கோழி மற்றும் மீனை வேகவைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது. பீட்ரூட், கேரட், பீன்ஸ் மற்றும் கீரையை நன்றாக வேகவைத்து சாப்பிட வேண்டும். நெய், தயிர், நல்லெண்ணெய், ஆலிவ் எண்ணெய், சூப் ஆகியவையும் எடுத்துக்கொள்ளலாம்.

2 தாய் மற்றும் சேய்க்கு மசாஜ் செய்வதால் ஏற்படும் நன்மைகள்

ஆயுர்வேதம், அபயங்கா எனப்படும் சூடான எண்ணெயில் செய்யப்படும் மசாஜிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. இது தாய்மார்களுக்காகவே வடிவமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 90 நிமிடங்களுக்கு செய்யப்படும் இந்த மசாஜை வீட்டிலே பண்ணலாம். இதை தினமும் பல நாட்களுக்கு செய்யலாம் என ஆயுர்வேதம் பரிந்துரை செய்கிறது. புதிய தாய்மார்கள் அவ்வளவு சுறுசுறுப்பாக இருக்க மாட்டார்கள் என்பதால், இந்த அபயங்கா, அவர்கள் உடலில் சேர்ந்திருக்கும் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. மேலும், இது உடலுக்கு ஓய்வையும் மற்றும் பால் சுரப்பை அதிகரிக்கவும் செய்கிறது.

குழந்தைகளுக்கும் 15 நிமிடத்திற்கு வெதுவெதுப்பான எண்ணெயில் மசாஜ் செய்யலாம். பெரும்பாலான தாய்மார்கள் குழந்தைகளை குளிக்க வைப்பதற்கு முன் மசாஜ் செய்வார்கள். இந்த மசாஜ் குழந்தைக்கும் பெற்றோருக்கும் இடையே ஒரு பிணைப்பை ஏற்படுத்துகிறது. மேலும், வாயு மற்றும் மலச்சிக்கல் உள்ள குழந்தைகளுக்கு இது மிக சிறந்த தீர்வாகும்.

3 தொப்பையை குறைத்தல்

பெல்லி ராப்பிங் (Belly Wrapping) எனப்படுவது, ஒரு பாரம்பரிய ஆயுர்வேத நுட்பமாகும். இது உடல் உறுப்புகளை அந்தந்த இடங்களுக்கே மீட்டெடுத்து, உடலில் உள்ள வெற்றிடத்தை நிரப்ப உதவுகிறது. இதில், ஒரு நீண்ட பருத்தி துணியை எடுத்து வயிற்றை சுற்றி கட்டிக்கொள்ள வேண்டும். பிரசவத்திற்கு பிறகு உடனே இதை செய்வது தொப்புள்கொடியை நீக்க உதவுகிறது. இதனால் வாத நோய் ஏற்படாமல் தடுக்க முடியும். மேலும், பிரசவத்திற்கு பிறகு பெண்களுக்கு ஏற்படும் தொப்பையை குறைத்து பழைய நிலைக்கு கொண்டு வர இது உதவுகிறது.  

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon