Link copied!
Sign in / Sign up
1
Shares

சுவையான இஞ்சி சாதம் செய்வது எப்படி?

எந்த ஒரு உணவை செய்தாலும் அதில் மணம் வீச இஞ்சி என்றுமே மறப்பதில்லை. அதுபோல் சாதாரண தேநீர் பருகிய பலரும் உடல் நலத்தை கருத்தில் கொண்டு இன்று இஞ்சி டீ குடிக்க தொடங்கிவிட்டனர். இதன் சுவை என்பது நாவில் எச்சிலை ஊற வைக்க, நல்லதொரு மணம் வீச, ஆரோக்கியத்தையும் தர வல்லது. இதுபோல் இஞ்சி ஆற்றும் பங்கு எண்ணற்றதாக இருக்க, இஞ்சிமரப்பாவை யாரால் தான் மறக்க முடியும். கிராமப்புறங்களில் இன்று கூட தயிர்சாதத்துக்கு இஞ்சி துவையல் தொட்டுக்கொண்டு சாப்பிடும் விவசாய பெருமக்கள் எத்தனையோ பேர். இப்படி இஞ்சி எல்லா இடத்திலும் வாசம் வீச, உங்கள் வீட்டு சாதத்தில் மட்டும் வீசாமல் சென்றுவிடுமா என்ன... அட ஆமாங்க, இன்று நாம் பார்க்க போவது இஞ்சி சாதம் செய்வது எப்படி என்பதை தான்...

தேவையான பொருட்கள்:

அரிசி - ஒரு கப் 

வெங்காயம் - 1

தக்காளி - 1 

பிரியாணி இலை - 1 

பட்டை - ஒரு சிறு துண்டு 

கிராம்பு - 4 

ஏலக்காய் - 2 

கொத்தமல்லித் தழை, புதினா, கறிவேப்பிலை - சிறிதளவு 

உப்பு - தேவையான அளவு 

எண்ணெய் - 2 குழிக்கரண்டி 

இஞ்சி - ஒரு சிறு துண்டு 

மிளகாய் வற்றல் - 3 

பூண்டு - 5 பல் 

பெருஞ்சீரகம் - கால் தேக்கரண்டி 

முந்திரி - 5

செய்முறை நேரம் - 30

எத்தனை பேர் உண்ணலாம் - 3

செய்முறை:

1. வெங்காயம், கொத்தமல்லி, புதினா இவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும் 

2. அரிசியை நன்றாக கழுவி வைக்கவும். 

3. இஞ்சி, மிளகாய் வற்றல், பூண்டு, பெருஞ்சீரகம், முந்திரி போன்ற அனைத்தையும் சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு அரைத்து வைக்கவும். 

4. தக்காளியைத் தனியே அரைத்து கொள்ளவும். 

5. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் பிரியாணி இலை, கறுவாப்பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளித்து, அதனுடன் கொத்தமல்லித் தழை, புதினா, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். 

6. வெங்காயம் வதங்கியதும், அரைத்த தக்காளியைச் சேர்த்து மீண்டும் வதக்கவும். 

7. அதில் அரைத்த இஞ்சி விழுதைச் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கி, கழுவிய அரிசியும், தேவையான அளவு உப்பும் சேர்த்து கிளறி, 2 கப் நீர் ஊற்றி, சாதம் சமைப்பது போல் சமைக்க வேண்டும்.

8. அவ்வளவு தான் சூடான சுவையான இஞ்சி சாதம் ரெடி.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon