Link copied!
Sign in / Sign up
1
Shares

நான் இப்போது சந்தோஷமாக சாவேன் - சூப்பர் ஸ்டார் ரசிகன் நெகிழ்ச்சி!

இணையத்தளத்தில் நேற்று வைரல் ஆன ஒரு விஷயம் எதுவென்றால் தூத்துக்குடி சென்ற நடிகர் ரஜினியை மக்கள் திருப்பி அனுப்பிய ஒரு செய்தி என்பது எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். ஆம், சமீபத்தில் நடந்த ஸ்டெரிலைட் துப்பாக்கி சூட்டில் 13 பேர் தூத்துக்குடியில் தன் உயிரை தியாகம் செய்தனர். இதனால் அரசின் இந்த செயலுக்கு எதிராக கடும் எதிர்ப்புகளும், கண்டனங்களும் பதிவாக இறுதியில் தமிழக அரசு ஸ்டெரிலைட் ஆலைக்கு சீல் வைக்க உத்தரவிட்டது. இதை அடுத்து தூத்துக்குடி பகுதி இயல்பு நிலைக்கு திரும்பி வந்த வேளையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க சென்றிருந்தார்.

அப்போது பாதிக்கப்பட்ட ஒரு இளைஞனை ரஜினி காந்த் விசாரிக்க, "நீங்கள் யார்?" என்று அந்த இளைஞன் கேட்டது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி இருந்தது. சென்னையிலிருந்து வரும் சூப்பர் ஸ்டாருக்கு தூத்துக்குடி வர 100 நாட்கள் தேவைப்பட்டதா என்று அந்த இளைஞன் கூறியதாக நெட்டிசன்கள் வீடியோக்களையும், மீம்களையும் தெறிக்க விட்டிருந்தனர்.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகன் ஒருவர் உருக்கமான ஒரு பதிவை டிவிட்டரில் பகிர்ந்திருக்கிறார். அது என்னவென்றால், இப்போதே நான் மரணித்தாலும் மகிழ்வு தான் என லக்ஷ்மன் என்ற ரசிகன் தன் கருத்தை பகிர்ந்துள்ளார்.

யார் இந்த லக்ஷ்மன்? ஏன் இதை செய்தார்?

xதூத்துக்குடி மக்களை காண சென்ற நடிகர் ரஜினியை ஒரு இளைஞன் பின் தொடர்ந்து வந்திருக்கிறார். இதை கவனித்த சூப்பர் ஸ்டார், காரை நிறுத்த சொல்லி அந்த இளைஞனை சந்திக்க, ரஜினியுடன் செல்பி ஒன்று எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டிருக்கிறான் அந்த இளைஞன். உடனே ரஜினிகாந்தும் புகைப்படம் எடுத்துக்கொள்ள சம்மதிக்க, அவன் சந்தோஷத்தின் எல்லையில் சூப்பர் ஸ்டாருடன் செல்பி எடுத்து அதை டிவிட்டரில் பதிவு செய்திருக்கிறான். அவன் தான் லக்ஷ்மன் என்ற இளைஞன். மேலும், அந்த டிவிட்டர் பதிவில் "இந்த நிமிடமே நான் இறந்தாலும் மரணத்தை மகிழ்வுடன் ஏற்றுக்கொள்வேன்..." என சொல்லியிருக்கிறான்.

இதற்கு பலதரப்பட்ட விமர்சனங்கள் எழுந்துவர, ரஜினியின் தீவிர ரசிகர்கள்., "தலைவர்...தலைவர் தான்..." என டயலாக்கை தெறிக்க விட, "ஒரு நடிகனுக்காக இவ்வளவு சிரமப்பட்டு ஒரு இளைஞன் சென்று பார்ப்பது மிகுந்த வேதனை தரக்கூடிய விஷயமென..." கருத்துக்களை நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

எது எப்படியோ... விரைவில் காலா படம் ரிலீஸ் என்பதால் இது போன்று நடப்பதில் எந்த ஐயமும் இல்லை எனவும் தன் கருத்துக்களை பலர் பகிர தொடங்கிவிட்டனர். 

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களுக்கு ரஜினி தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கவும் முன் வந்துள்ளார்.

தூத்துக்குடியில் சமூக விரோதிகள் ஊடுருவியதால் தான் துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது என நேற்று ரஜினிகாந்த் கூறியதால் தமிழக மக்கள் கடும் கொந்தளிப்பில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் ஒட்டுமொத்த தமிழக மக்கள் மற்றும் போராடிய தூத்துக்குடி மக்களின் மனதை ரஜினிகாந்த் புண்படுத்திவிட்டார் எனவும் மக்கள் தங்கள் வேதனையையும், விமர்சனத்தையும் சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகின்றனர். 

இதற்கு உங்களுடைய கருத்துக்கள் என்ன என்பதை கமெண்டில் பதிவு செய்யுங்கள்.  

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon