Link copied!
Sign in / Sign up
0
Shares

ரிலீசானது தமிழ் படம் 2.0 டீசர் - வீடியோ பார்த்து வயிறு குலுங்கி சிரிங்க...

யார் இந்த சிவா?

இப்படி தேடி அலைந்தவர்களை மரு வைத்து ஏமாற்றியவர்., தன் இயல்பான நடிப்பில் இலட்சக்கணக்கான ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தார். தமிழ் படங்கள் எத்தனை வந்தாலும்... அத்தனை திரைப்படத்தின் ஒட்டுமொத்த உருவமாக நின்று நகைச்சுவை கலவையில் கல்லா கட்டிய படம் தான் சி.எஸ். அமுதன் இயக்கத்தில் வெளிவந்த தமிழ் படம் 1.0

விஜய் டிவியில் ஒளிபரப்பிய லொள்ளு சபாவின் ஜெராக்ஸ் என இத்திரைப்படத்தை சொல்லலாம். ஆம், தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்ற பாட்சா, காதலன், காக்க காக்க, விஜய் - அஜித்தின் முன்னணி திரைப்படங்கள் வரை உருவி எடுத்து ஒரு கதையை தயாரித்து வெளியிட, படமும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது என்னவோ உண்மை தான்.

இத்திரைப்படத்தில் இடம் பெற்ற "ஓமகசீயா..." பாடல் காட்சிகளால் கண்களை கவர்ந்து வரிகளால் விழுந்து விழுந்து சிரிக்கவும் வைத்தது.

திரைப்படம் முடிந்துகூட ஏன் முடிந்தது என்ற உணர்வை தந்த ஒரு படம் தமிழ்படம் என சொல்வதில் தயக்கமே தேவையில்லை.

இதன்பிறகு பதினாறு எனும் படத்தில் சிவா லவ்வர் பாயாக களம் இறங்க, கதை நன்றாக இருந்தபோதிலும் திரைப்படம் ஓடவில்லை. இதற்கு காரணம் தமிழ் படம் அவர் வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கம் தான் என சொல்வதில் ஐயமில்லை. ஆம், அவர் காதல் காட்சிகளில் கட்சிதமாக நடித்த போதும்., காமெடியாகவே எல்லோரும் அவரை பார்த்தனர்.

அதன்பிறகு சென்னை 28, கலக்கலப்பு, வா குவாட்டர் கட்டிங்க் என பல படங்களை தனக்கு ஏற்றார் போலவே தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார்.

இந்நிலையில் தமிழ் படம் 2.0 ஷூட்டிங்க் என்ற செய்தியை கேட்டவுடன் ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதந்தனர். அதுவும் பர்ஸ்ட் லுக்கில் சிவா தியானம் செய்வது போல் அமர்ந்திருப்பதை பார்த்தவுடன் பல் இல்லா கிழவி கூட சிரித்தது என சொல்லலாம். முதல் பாகத்தில் பல சினிமாவை கலாய்த்த நம்ம சிவா, இந்த பாகத்தில் தமிழ்நாட்டின் அரசியலை முன் எடுத்திருப்பாரோ என கூட தோன்றியது பலருக்கும்.

சில நிமிடங்களுக்கு முன்னர் இத்திரைப்படத்தின் டீசர் வெளியாகிவுள்ளது. துப்பாக்கி, விக்ரம் - வேதா, துப்பறிவாளன், மங்காத்தா என 40 நொடியில் வரும் காட்சிகளால், நமக்கு வயிறு வலி வந்தாலும் வரலாம்.

இந்த திரைப்படத்திற்கு தமிழ் படம் 2.0 - போலீஸ் அத்தியாயம் என டைட்டில் வைத்திருக்கிறார் சி.எஸ்.அமுதன். கண்டிப்பாக இந்த சீசனில் சிவாவின் சரவெடி தியேட்டர்களில் தெறிப்பது உறுதி என்பதற்கு இந்த டீசர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. டீசரை கீழே பார்க்கவும்.

வயிற்றில் 

அல்சர் இருப்பவர்கள்

அப்பென்டிஸ் ஆப்ரேஷன் செய்தவர்கள்

சிசேரியன் செய்த பெண்கள்

தயவுசெய்து இந்த டீசரை பார்க்க வேண்டாம். சிரித்து தையல் பிரிந்தால் சிவாவோ அல்லது நாங்களோ ஒருபோதும் பொறுப்பல்ல. 

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon