Link copied!
Sign in / Sign up
4
Shares

கருவிலிருக்கும் குழந்தை நலமாக இல்லை என்பதை காட்டும் அறிகுறிகள்!

கருவிலிருக்கும் குழந்தையின் பாதுகாப்பு என்பது அவசியமாக, அவர்களுக்கு என்ன தேவை என்பதை அவர்களிடம் நீங்கள் கேட்காமலும் கொடுக்க வேண்டும். அதாவது நமக்கு தாகம் எடுத்தால் தண்ணீர் கேட்டு குடிப்பது போல, உங்கள் குழந்தைக்கு எப்போது பசிக்கும்? தாகம் எடுக்கும் போன்ற விஷயங்களை கண்டிப்பாக தெரிந்துக்கொள்ள வேண்டும். அத்துடன் கர்ப்பிணி பெண்கள் பருகும் நீரை பொறுத்தே பனிக்குட நீர் திரவம் அமைய, குழந்தை பாதுகாப்பாகவும் இதனால் இருக்கிறது. ஒருவேளை உங்கள் குழந்தை நலமாக இல்லை என்றால் அதை எப்படி அறிந்து கொள்வது? வாருங்கள் என்னுடன் சேர்ந்து படித்து பயன் பெறலாம்.

1. இதயத்துடிப்பு:

உங்கள் குழந்தையின் இதயத்துடிப்பை நீங்கள் கர்ப்ப காலத்தின் 10 ஆவது வாரத்தில் டாப்ளர் சோதனை மூலம் தெரிந்துக்கொள்ளக்கூடும். ஒருவேளை குழந்தை உடல் நலக்குறைவுடன் இருக்குமெனில் இதயத்துடிப்பு சீரற்று காணலாம். அப்படி என்றால் அதற்கு ஏற்ப மருத்துவர்கள் ஒரு சில ஆலோசனைகளை உங்களுக்கு வழங்குவர்.

2. தசைப்பிடிப்பு:

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகளுக்கு தசைப்பிடிப்பு ஏற்படுவது இயல்பான விஷயம் தான். இந்த தசைப்பிடிப்பு என்பது எப்படி இருக்குமெனில், நீங்கள் மாதவிடாய் காலத்தின்போது உணரும் ஒரு வலியை தருகிறது. இதற்கு காரணம், கருப்பைக்கு இரத்தம் செல்வதாலே ஆகும். ஆனால், இந்த வலி நீண்ட நேரத்திற்கு இருக்க, இதனால் இரத்த கசிவும் உங்களுக்கு ஏற்படுகிறது. இரண்டாவது மற்றும் மூன்றாவது 3 மாதத்தில் இந்த பிரச்சனை ஆனது முன் பிரசவ அறிகுறியாக அமைகிறது. 

3. இரத்த கசிவு:

கர்ப்ப காலத்தில் பிறப்புறுப்பிலிருந்து இரத்தம் வடிவது பாதுகாப்பானது அல்ல. ஆனால், இது கருச்சிதைவின் அறிகுறியாக இருப்பதுமல்ல. அதாவது உங்கள் உடல் ஹார்மோன்களில் எழும் சமநிலை மாற்றத்தாலும், நஞ்சுக்கொடி தொடர்பான பிரச்சனையினாலும் இந்த நிலைமை ஒரு பெண்ணுக்கு ஏற்படுகிறது. ஒரு சில சமயத்தில் குழந்தை முன்பே பிறப்பதனால் இந்த இரத்த கசிவு ஒருவருக்கு ஏற்படுகிறது.

4. முதுகில் அதிகம் வலி:

கர்ப்ப காலத்தில் முதுகில் வலி காண்பது இயல்பான விஷயம். இதற்கு காரணம், உங்கள் உடலின் முன்புறம் கனம் அதிகம் காண மைய ஈர்ப்பு விசையும் நகர்கிறது. ஆனால், இந்த பின்புற வலியை தாங்கிக்கொள்வது அவ்வளவு எளிதான காரியமும் அல்ல. இதற்கு காரணமாக சிறுநீரக அல்லது பிறப்புறுப்பு நோய்தொற்றும் அமைகிறது.

5. குழந்தை அசைவு:

கர்ப்ப காலத்தின் 20ஆவது வாரத்தின்போது கருவிலிருக்கும் குழந்தை உதைக்க செய்கிறான். அதாவது 2 மணி நேரத்திற்குள் குறைந்தது 10 தடவையாவது குழந்தை உங்களை உதைக்க செய்வான். ஒருவேளை குழந்தையின் அசைவை உங்களால் உணர முடியாதபோது மருத்துவரை சென்று பார்க்க வேண்டியது அவசியமாகும். 

கர்ப்பிணி பெண்களே! எது எப்படியோ... எக்காரணம் கொண்டும் யாருக்காகவும் கர்ப்ப காலத்தில் பயப்பட மட்டும் செய்யாதீர்கள். எவ்வளவு பெரிய பிரச்சனை என்றாலும் முறையாக மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதன் மூலம் உங்கள் சந்தேகங்களை நீங்கள் தீர்த்து கொள்ளலாம்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon