Link copied!
Sign in / Sign up
4
Shares

சுவையான தேங்காய்ப்பால் முறுக்கு செய்வது எப்படி?

குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறை தொடங்கிவிட்ட இந்த காலகட்டத்தில், அவர்கள் வெளியில் கொளுத்தும் வெயிலில் விளையாடக்கூட இயலாமல் வீட்டிலேயே அடைபட்டு கிடப்பர்; அப்படி வீட்டிலேயே அடைந்திருக்கும் குழந்தைகளின் கவனம் வீட்டிலேயே விளையாடல் அல்லது எதையாவது கொறித்து உண்டுவிட்டு உறங்குவது என்பதில் தான் வந்து நிற்கிறது. விடுமுறை நாட்களில், வீட்டில் இருக்கும் குழந்தைக்கு ஆரோக்கியம் கலந்த நொறுக்குத்தீனிகளை வீட்டிலேயே தயாரித்து அளிக்கலாம்.  அப்படி குழந்தைகளின் மனத்தைக் கவரும் தேங்காய்ப்பால் முறுக்கு எப்படி செய்வது என்று இப்பதிப்பில் படித்தறியலாம்..!     

தேவையான பொருட்கள்:

வறுத்த உளுத்தம் பருப்பு மாவு - 1 கோப்பை, தேங்காய் - 1, அரிசி மாவு - 4 கோப்பை, வெண்ணெய் - 1 மேஜைக் கரண்டி, சீரகம் - சிறிதளவு, மிளகு - சிறிதளவு, தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு

செய்முறை:

1. மிளகு, சீரகம் போன்றவற்றை கரகரப்பாக பொடித்துக் கொண்டு, இதனுடன் வறுத்து அரைத்த உளுத்தம் பருப்பு மாவு, சலித்த அரிசி மாவு, உப்பு ஆகியவை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்; பின்னர் வெண்ணெயைச் சேர்த்து மாவை நன்கு பிசைந்து கொள்ளவும்; பிசைந்து வைத்த மாவை 4 அல்லது 5 பகுதியாக பிரித்துக் கொள்ளவும்

2. தேங்காயைத் துருவி சிறிது நீர் சேர்த்து, அரைத்து வடிகட்டி கெட்டியான தேங்காய்பால் எடுத்துக் கொள்ளவும்

3. பிரித்து வைத்த மாவுகளில், ஒரு பகுதி மாவை மட்டும் தனியே எடுத்து, சிறிது தேங்காய்ப்பால் சேர்த்து பதமாகப் பிசைந்து கொள்ளவும்

4. ஈரமான துணியின் மேல், பிசைந்து வைத்த மாவினை சிறிய முறுக்காக பிழிந்து அதை எண்ணெயில் எடுத்து போடவும்; அல்லது வடிகட்டி கரண்டியை திருப்பி அதன்மீது சின்ன வட்டமாக பிழிந்து, பின்னர் அதை அப்படியே திருப்பி எண்ணெயில் விழுமாறு செய்தும் முறுக்கு சுடலாம்

 

5. முறுக்கு பொன்னிறத்தை எட்டும் வரை, அதனை எண்ணெயிலிட்டு பொரித்தெடுக்கவும் 

6. முறுக்கிலுள்ள அதிகப்படியான எண்ணெயை அகன்ற பாத்திரத்திலோ அல்லது தட்டிலோ போட்டு ஆறவைத்து, வடிகட்டி மூலம் வடித்து அகற்றலாம்

7. இதன் பின்னர் காற்றுப்புகாத சுத்தமான பாத்திரத்தில் போட்டு வைத்துப் பயன்படுத்தவும்

8. இந்த தேங்காய்ப்பால் முறுக்கு உங்கள் குடும்பத்தினர் மனதை கவர்ந்திருந்தால், முதலில் பிசைந்த மாவின் ருசி பிடித்திருந்தால், முதல் பகுதி மாவு தீர்ந்ததும், அடுத்த பகுதி மாவை எடுத்து முன்பு செய்தது போல், பிசைந்து முறுக்கு சுட்டெடுக்க வேண்டும்

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon