Link copied!
Sign in / Sign up
1
Shares

சுற்றுசூழலோடு இணக்கமாக இருக்க குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டிய 7 வழிகள்

இன்றைய காலகட்டத்தில் சுற்றுசூழலுடன் இணக்கமாக வாழ்வதென்பது அத்தியாவசியமான ஒன்று. நமது சுற்றுசூழலை பாதுகாப்பது என்பது ஒரு நல்ல குடிமகனின் அடையாளமாகும். நாம் குழந்தைகளுக்கு சுற்றுசூழலை பற்றி கற்றுத்தருவது அவர்களது நிகழ்காலத்தை பாதுகாப்போதோடு, அவர்களின் எதிர்காலத்திற்கும் பாதுகாப்பாய் அமையும். உங்கள் குழந்தைகளை சுற்றுசூழல் பற்றிய ஆர்வத்தோடு வளர்க்க இதோ 7 வழிகள்.

1.தோட்டவேலைகளில் ஈடுபடுத்துதல்

இந்த வழி உங்கள் வார விடுமுறைகளை மகிழ்ச்சியாகவும், உபயோகமாகவும் கழிக்க உதவும். மரம், செடி மற்றும் கொடிகளை நட மற்றும் தோட்ட வேலைகளை செய்ய சொல்லித்தருவதோடு இயற்கையின் முக்கியத்துவத்தையும் உணர்த்துங்கள். அவர்கள் வைத்த செடியிலிருந்து பூ, காய் போன்றவை கிடைக்கும் போது அவர்கள் அளவில்லா மகிழ்ச்சி அடைவதோடு, அவர்களின் ஆர்வத்தையும் அதிகப்படுத்துகிறது. செடிகளின் பெயர்களையும், சில பூச்சிக்களை பற்றியும் அவர்கள் தெரிந்து கொள்ளும் சூழ்நிலையும் ஏற்படும்.

2.வாகனங்களை தவிர்க்கவும்

உங்கள் குழந்தைகள் நடந்து செல்ல கூடிய தூரத்தில் இருக்கும், அவர்களின் நண்பர்களின் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றால், நீங்கள் அவர்களை வாகனங்களில் கொண்டு விடுவதை தவிர்த்து, நடந்து செல்ல சொல்லுங்கள். அவர்களுக்கு மிதிவண்டியை உபயோகிக்க பழக்குங்கள். இதனால் அவர்களது உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு, இயற்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்பதை அவர்களுக்கு புரிய வையுங்கள்.

3 வெளியில் நேரம் செலவிடுங்கள்

அவர்கள் வீட்டிற்கு வெளியே செலவிடும் நேரங்கள், அவர்கள் இயற்கையை பற்றியும், அவற்றை பாதுகாப்பதை பற்றியும் மற்றும் இந்த உலகை பற்றியும் கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பாய் அமைகிறது. அவர்கள் வெளியில் நேரம் செலவிடும் போது, அது அவர்களுக்கான உடற்பயிற்சியாக அமைவதோடு, சூரியனிலிருந்து வைட்டமின் டி சத்தும் குழந்தைகளுக்கு கிடைக்கிறது. இது அவர்களை ஆரோக்கியமான வாழ்கை முறையில் வாழ வைப்பதோடு, இயற்கையை மதிக்க வேண்டும் என்பதையும் அவர்களுக்கு உணர்த்துகிறது.

4 இயற்கையின் முக்கித்துவதை உணர்த்துங்கள்

குழந்தைகள் இயற்கையுடன் இணைந்து வாழ, அவர்களுக்கு அதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கவும். அவர்களை சுற்றியுள்ள சூழலின் விஷயங்களைப் பற்றிக் கூறுங்கள், மேலும் செய்தித்தாளில் சுற்றுச்சூழலைப் பற்றிய செய்திகளை அவர்களுக்குக் காட்டுங்கள். இன்றைய சூழலில் அவற்றின் முக்கியத்துவத்தை எடுத்து கூறி அவற்றை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துங்கள்.

5 மறுசுழற்சியை துவங்குங்கள்

மறுசுழற்சி எனபது நமக்கு அனைத்தும் தரும் இயற்கைக்கு நம்மால் முடிந்ததை சிறிய அளவில் திரும்ப அளிப்பதாகும். குழந்தைகளுக்கு பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்கவும் இயற்கையாக மக்க கூடிய பொருட்களை உபயோகிக்க கற்றுக்கொடுக்கவும். குப்பைகளை மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகள் என தரம் பிரித்து, மக்கும் குப்பைகளை உரமாகவும், மக்காத குப்பைகளை மறுசுழற்சிக்கு பயன்படுத்தவும் கற்றுத்தரவும்.

6 குழந்தைகளுக்கு முன்னுதாரணமாக இருங்கள்

குழந்தைகள் எதை பார்க்கிறார்களோ, அது சரியாக இருந்தாலும், தவறாக இருந்தாலும் அதையே பின்பற்றுவார்கள். எனவே நீங்கள் முதலில் இயற்கையை பேணிக்காப்பவராக இருக்க வேண்டும். உங்கள் குழந்தை பல் துலக்கும்போது தண்ணீர் குழாய் திறந்திருப்பின் அதை மூடி தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும். நீங்களும் அப்படியே நடந்து கொள்ள வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

7 உங்கள் போதனைகளை கட்டுப்படுத்தாதீர்கள்

உங்கள் வீட்டிற்குள் மட்டும் இயற்கையை பாதுகாத்தால் போதாது. செல்லும் இடங்கள் அனைத்திலும் இயற்கையை பாதுகாக்க கற்றுகொடுங்கள். வெளியிடங்களுக்கு செல்லும்போது கண்ட இடங்களில் குப்பைகளை எரியாமல் சரியான இடத்தில குப்பைகளை போட அறிவுறுத்தவும்.

இயற்கையை பாதுகாப்பது என்பது நமது கடமையாகும். 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon