Link copied!
Sign in / Sign up
2
Shares

ஆண் - பெண் குழந்தைகளுக்கு டயப்பர் அணிவிப்பதில் இவ்வளவு வித்தியாசம் இருக்கிறதா!

அம்மாக்களின் வாழ்வில் அழகான தருணங்களுள் ஒன்று குழந்தைகளுக்கு டயப்பர் அணிவிப்பது தான். ஆனால், இந்த டயப்பரை பார்த்து கவனமாக வாங்க வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்று. ஆம், நீங்கள் அணிவிக்கும் டயப்பர் முழுக்க முழுக்க குழந்தைக்கு பாதுகாப்பை மட்டுமே தர வேண்டும். முதல் முறையாக டயப்பர் அணிவிக்கும்போது குழந்தைகள் அழ செய்வர். ஆனால், அவர்களுக்கு பழக்கப்படுத்தும்போது அழுவதை நிறுத்திவிடுவார்கள். ஒருவேளை உங்கள் குழந்தைகள் அழுகையை நிப்பாட்டாமல் தொடர்ந்து அழுத வண்ணம் இருந்தால் அந்த டயப்பர் அவர்களுக்கு உகந்ததாக இல்லை என்பது புரிந்து உடனடியாக வேறு டயப்பர் வாங்குவது அவசியம். குழந்தைகள் நல மருத்துவரிடம் ஆலோசனை பெற்று அதற்கு ஏற்ப கூட நீங்கள் டயப்பர் வாங்கலாம். சரி, இப்போது ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு டயப்பர் அணிவிப்பது எப்படி என்பதை படித்து பயன் அடைவோம் வாருங்கள்...

ஆண் குழந்தைக்கு அணிவிப்பது எப்படி?

1. முதலில் ஆண் குழந்தையின் குறியை (ஆண்குறி) நன்றாக துடைத்து சுத்தப்படுத்த வேண்டும்.

2. உங்கள் மகன் சிறுநீர் கழிக்கும்போது அவன் விதைப்பை கீழ்ப்பகுதியை சுத்தமாக துடைக்க வேண்டியது அவசியம்.

3. அவன் விந்து கீழ்புறமிருக்க, ப்ரெஷ்ஷான டயப்பரை மையப்பகுதியிலிருந்து அணிவிக்க வேண்டும். 

பெண் குழந்தைக்கு அணிவிப்பது எப்படி? 

1. பெண் குழந்தைகளுக்கு டயப்பர் அணிவிக்கும்போது இடைப்பட்ட மடிப்பை சரி செய்ய வேண்டும்.

2. பெண்குறியின் இதழ்கள் மேல்புறத்திலிருந்து கீழ் பகுதியை சுத்தம்செய்து ஆசனவாய் நோக்கி அணிவிப்பதன் மூலம் பாக்டீரியாக்கள் பரவுவது தடுக்கப்படுகிறது.

3. அவர்களின் பெண் குறியில் ஏதேனும் பிசுபிசுவென இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்தி துடைக்க வேண்டியது அவசியம். காரணம், கருவிலிருந்த குழந்தையை பாதுகாக்கும் ஒரு சருமம் உங்கள் குழந்தையின் மேல் இருக்கக்கூடும். இந்த பிசுபிசுவென இருக்கும் தன்மைக்கொண்ட திரவம் பிறப்புறுப்பிலிருந்து மீண்டும் சுரக்கும். அதனால் நீங்கள் துடைக்க வேண்டியது அவசியம்.

4. குழந்தைகளை துடைக்கும்போது வெறுமனே துடைத்திடுங்கள். சோப் போன்றவை பயன்படுத்தாதீர்கள். குழந்தைக்கு தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

என்ன செய்ய வேண்டும்?

1. ஒரு பிளாஸ்டிக் பேக்கில் குழந்தைகளின் டயப்பர்களை பாதுகாப்பாக நீங்கள் வைத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

2. குழந்தைகள் மலம் அல்லது சிறுநீர் கழித்த உடனே மாற்றிவிடுவது நல்லது. நீங்கள் தாமதப்படுத்துவதால் கண்ணுக்கு தெரியாத கிருமிகள் அவர்களுக்கு நோய் தொற்றை ஏற்படுத்தக்கூடும். 

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

Recently, we launched a baby-safe, natural and toxin-free floor cleaner. Recommended by moms and doctors all over India, this floor-cleaner liquid gets rid of germs and stains without adding harmful toxins to the floor. Click here to buy it and let us know if you liked it.

Stay tuned for our future product launches - we plan to launch a range of homecare products that will keep your little explorer healthy, safe and happy!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon