Link copied!
Sign in / Sign up
4
Shares

பிரசவ வலியை குறைத்து எளிதில் குழந்தை பெற்றுக்கொள்வது எப்படி?

இந்த உலகில் எழுப்பப்படும் ஒலி அளவை விட அதிகமானது எது தெரியுமா? கர்ப்பிணி பெண் பிரசவத்தின் போது கொடுக்கும் குரல் தான். ஆம், அந்த நிமிடத்தில் புதிய உலகில் பிரயாணம் செய்யும் அவள், தன் குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டுமென்னும் நம்பிக்கையுடன் கடவுளை வேண்டிக்கொள்கிறாள். அவள் அனுபவிக்கும் வலி எல்லாம் காலத்திற்கும் அழியாத போதும், பிறந்த குழந்தையின் அழகிய முகம் கண்ட அந்த நொடி மறந்து மீண்டும் அதுபோன்ற வலியை எதிர்கொள்ள துடிப்பது தாய்மைக்கே உண்டான தனி குணம் என்பதில் மாற்றுக்கருத்து ஏது? இப்போது பிரசவ வலியை குறைத்து எளிதில் குழந்தை பெற்றுக்கொள்ள ஒரு சில வழிகளை நாம் பார்க்கலாம். ஓர் உதாரணத்திற்கு, பிரசவத்தின் போது ஒற்றை பக்கம் படுத்திருப்பதால் குழந்தை பிறப்பு விரைவாக நடக்கிறதாம். இதைப்பற்றிய அழகிய தொகுப்பு இதோ உங்களுக்காக.

1. பக்கமாக படுத்திருத்தல்:

குழந்தை பிறப்பதற்கு ஏதுவான நிலையில் நீங்கள் இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். பெண்கள் பலரும் பிரசவத்தின் முதல் நிலையில் பின்பக்கமாக படுக்க விரும்புகின்றனர். இதனால் முதல் பிரசவ நிலை என்பது நீடிக்க, புதிய அம்மாக்களுக்கு இதன் வலி மிகவும் வேதனையுற்றதாக அமையும். எனவே, மருத்துவர் அல்லது பிள்ளை பெற்ற அனுபவசாலிகளிடம் பிரசவத்திற்கு முன்பு சிறந்த ஆலோசனை கேட்பது நல்லது. குழப்பம் மட்டும் வேண்டாம். அத்துடன் கால்களுக்கு நடுவில் தலையணை வைத்துக்கொள்ளுங்கள்.

2. பின் பக்கமாக படுத்தல்:

பிரசவத்தை நீங்கள் எளிதாக்க விரும்பினால் பின்பகுதி தரையில் தீண்டுமாறு நன்றாக மூச்சை இழுத்துவிட்டுக்கொண்டு படுத்துக்கொள்ளுங்கள். ஆனால், முதல் பிரசவ நிலையில் பின் பக்கமாக படுக்க முயலாதீர்கள். குழந்தை பிறக்கும் விளிம்பில் இந்த நிலைக்கு நீங்கள் வர முயல்வது நல்லது. அத்துடன் இடுப்பு பகுதியை விரித்து வைத்துக்கொள்ள, இதனால் குழந்தை பிறப்பின் சிரமம் என்பது குறைந்து காணப்படுவதோடு, உச்சக்கட்ட நிலையையும் நீங்கள் விரைவில் எட்டக்கூடும்.

3. அரை நிலையில் அமர்தல்:

இந்த நிலை என்பது பிரசவத்தின்போது வலியை தாங்கிக்கொள்ள எளிதாய் அமைகிறது. இந்த நிலையிலிருக்கும் நீங்கள் உங்கள் அருகில் பஞ்சு போன்ற தலையணை அல்லது உங்கள் கணவரை துணைக்கு நாட வேண்டியது மிகவும் அவசியம். அதாவது கால்களை தூக்கிக்கொள்ள இதனால் இடுப்பு பகுதி விரிவடைய உதவுவதால் குழந்தையும் சிரமமின்றி வெளிவருகிறது.

 

 

4. கால்களை மடக்கி கொள்வது:

பிரசவத்தின் போது கால்களை மடக்கி கொள்வதால்  இந்த நிலையிலிருக்கும் நீங்கள் ஓய்வு மற்றும் அமைதியையும் சேர்த்து பெற முடிகிறது. இதனால் ஈர்ப்பு விசை சிறந்த நிலையில் அமைய, குழந்தை பிறப்புக்கு பெரிதும் உதவுகிறது. 

இவை தான் பிரசவ நிலையை எளிதாக்கும் 4 நிலைகளாக அமைய, இதன்மூலமாக தாய், சேய் இருவருக்கும் அமைதி என்பதும் பிரசவ நேரத்தில் கிடைக்கிறது. இதுபோல் மருத்துவரிடம் இன்னும் பல நிலைகளை ஆலோசனை மூலம் நீங்கள் தெரிந்துக்கொள்ள முயலலாம். தயவுசெய்து குழப்பம் தரக்கூடிய அறிவுரைகள் தருபவர்களை தவிர்ப்பது மிக நல்லது. 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon