Link copied!
Sign in / Sign up
0
Shares

தாய்மைக்கு பின் இளமையாக இருக்க உதவும் சில விஷயங்கள்...

கணவன் - மனைவி வாழ்க்கையில் மிகவும் அழகிய தருணமாக அமைவது ஒரு பெண் தாய்மை எனும் ஸ்தானத்தை பெறும் நேரம் தான். அவள் தன் வாழ்வை தன் குழந்தைக்காகவே அர்ப்பணிக்க செய்யும் ஒரு அற்புத உணர்வும் தாய்மையில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். அதுவும் தாய்ப்பால் தரும் தாய்மார்கள் ஒட்டுமொத்த ஆற்றலையும் தன் குழந்தைக்கு கொடுத்திட, ஆனாலும் அவர்களிடத்தில் இருக்கும் இளமை குறைவு என்பதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை. அதேபோல், குழந்தைகள் பிறந்தவுடன் முழு அன்பையும் அவர்கள் மேல் காட்ட, கணவன் - மனைவி வாழ்வு என்பது உப்பு சப்புடன் இருக்கக்கூடும். இதுவும் மிக தவறு என சொல்லப்படுகிறது.    

அதேபோல் பெண்களின் கர்ப்பம் மற்றும் குழந்தை பிறப்பின் போது ஏற்படக்கூடிய ஹார்மோன் மாற்றங்களாலும் கணவன் - மனைவிக்குள் இருக்கும் அந்தரங்க வாழ்க்கை அழகு என்பது குறைகிறது. 

என்ன காரணம்?

கருவுற்ற நேரத்தில் கர்ப்பிணிகளுக்கு பிரோலேக்டின் சுரப்பதற்கான வழிமுறைகள் மருத்துவரால் பரிந்துரை செய்யப்படுகிறது. இந்த பிரோலேக்டின், அண்டவிடுப்பை குறைத்து ஒரு சில ஹார்மோன்களையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. எஸ்ட்ரோஜன் எனும் ஹார்மோனும் உங்கள் காதல் வாழ்க்கைக்கு பாதகம் விளைவிக்கக்கூடிய சூழலை உருவாக்குகிறது. இதனால் தான் கருத்தரித்த பின்பு உடலுறவு நாட்டம் என்பது குறைந்து காணப்படுவதற்கு காரணமாகும்.

 

 என்ன செய்ய வேண்டும்?
1. இளமை தோற்றம்:

தாய்மை குணத்தை பெறும் நீங்கள் எப்போதும் மகிழ்வுடன் இருக்க பாருங்கள். அப்போதுதான் அட்ரினலின் அதிகம் சுரக்கும். ஆம், உடற்பயிற்சி மட்டும் நடனம் போன்றவற்றை நீங்கள் செய்யும்போது அட்ரினலின் சுரப்பதை உணர முடியும். அதாவது சந்தோஷத்தை உணர செய்யும் ஒரு ஹார்மோன் தான் அட்ரினலின் என்பதாகும். இனிமேல் தாய்மை அடையும் நீங்கள் இளமையை பெற எப்படி இருப்பீர்கள்? சிரித்துக்கொண்டே இருங்கள். சரியா!

2. உச்சக்கட்ட உணர்வு:

உங்களுக்கு தேவையான மற்றுமோர் ஹார்மோன் தான் DHEA ஆகும். இந்த ஹார்மோன் கணவன் - மனைவியின் உச்சக்கட்ட உணர்வின் மூலம் வெளிப்படுகிறது. மேலும் இந்த ஹார்மோன் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்ய, சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுவதோடு திசுக்கள் மறுசீரமைப்பு பணிக்கும் உதவுகிறது. அதனால் வாரத்தில் இருமுறையாவது தாய்மை அடையும் நீங்கள் உங்கள் கணவரோடு நெருக்கமாக இருக்க வேண்டும். இதனால் இம்யுனோக்ளோபுலினும் அதிகரிக்க, காய்ச்சல் மற்றும் சளி பிரச்சனை அற்று உங்கள் உடலை இந்த ஹார்மோன்கள் பாதுகாக்கக்கூடும்.

3. இதய வலிமை:

ஒரு சில பேர் நினைக்கும் விஷயம் என்னவென்றால், அட்ரினலின் அதிகரிப்பால் இதயத்துக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதாகும். ஆனால், இது உண்மையல்ல. ஒரு சிலருக்கு உச்சக்கட்ட சந்தோஷத்தை எட்டும்போது மாரடைப்பு வரக்காரணம், அது அவர்களின் ஆரோக்கியத்தை பொறுத்தும் அமைகிறது. நீங்கள் சரியான தூக்கத்தை பெற வேண்டியது அவசியமாக, இதனால் எஸ்ட்ரோஜன் அளவு அதிகரிக்க, இதய நோய் என்பதும் ஒரு பெண்ணுக்கு ஏற்படாது.

4. சிறுநீர்ப்பை கட்டுப்பாடு:

குழந்தைக்கு பிறப்பை தரும் பெண்கள் பிறப்புறுப்பு என்பது கட்டுப்பாட்டில் இல்லாமல் கொஞ்ச நாட்கள் காணக்கூடும். இதை தவிர்க்க ஒரு சில உடற்பயிற்சிகள் உதவுகிறது. ஆனாலும், அத்துடன் நீங்கள் உங்கள் கணவருடன் நெருக்கம் கொள்ளும்போது சிறுநீர்ப்பை தசைகளுக்கு அது மெல்ல உதவ செய்கிறது.

எனவே, பிள்ளை பெற்றெடுத்த தாய்மார்கள், கணவனுடன் நெருக்கம் கொள்வதில் எந்த தயக்கமும் கொள்ள வேண்டாம் என்றாலும், நீங்களாக முடிவை எடுத்துவிடாமல் நெருக்கம் கொள்வதில் எதை செய்ய வேண்டும்? செய்யக்கூடாது? என்பதை முழுவதுமாய் அறிந்து மருத்துவரின் ஆலோசனையுடன் காதலில் மயங்குவது நன்மை அளிக்கும். 

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon