Link copied!
Sign in / Sign up
2
Shares

குழந்தைக்கு ஆரோக்கியத்தை தரும் தாய்ப்பால் தர சில நிலைகள் - வீடியோ உள்ளே...

குழந்தைக்கு தரும் தாய்ப்பால் என்பது எல்லா வித ஊட்டச்சத்துக்களையும் ஒருசேர தருவது போன்ற உணர்வை குழந்தையின் மனதில் ஏற்படுத்துகிறது. ஆனாலும் முறையாக தாய்ப்பால் தருவதென்பது ஒரு சில பொதுவான நிலைகளை பொறுத்து அமைய, அந்த நிலையில் மட்டும் தான் உங்கள் குழந்தைக்கு தேவையான தாய்ப்பால் என்பது சரியாக சென்று சேரும் என்பதையும் நீங்கள் முதலில் உணருங்கள். ஆம், அது எத்தகைய நிலை என்பதை தான் நாம் இப்போது பார்க்க போகிறோம்.

தொட்டில் நிலை:

இந்த நிலையில் குழந்தை தலையை உங்கள் முழங்கைகளால் தாங்கிக்கொள்ளுங்கள். அதாவது தலையானது தொட்டிலில் தூங்கும் குழந்தையை தாங்குவது போல் இருக்க வேண்டும். நாற்காலியில் அமர்ந்துக்கொள்ள உங்கள் கைகளுக்கு தேவையான பிடித்தம் என்பது கிடைக்கிறது. இல்லையேல், கட்டிலில் நிறைய தலையணை வைத்து உங்கள் குழந்தைகளை நீங்கள் தாங்கிக்கொள்ளலாம். உங்கள் கால்களை காபி டேபிள், அல்லது வேறு ஏதேனும் உயர்ந்த பகுதியில் வைத்துக்கொள்ள உங்கள் குழந்தை கீழ் நோக்கி சாயாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். அவளை உங்கள் மடியில் தாங்க, அவளுடைய முகம், வயிறு, மற்றும் முழங்கால்கள் உங்களை பார்த்தவாறும் இருக்கும். 

குறுக்கே தாங்கும் நிலை:

இந்நிலையில் குழந்தையின் தலையை முழங்கைகளால் தாங்க வேண்டிய அவசியமில்லை. அதற்கு மாறாக உங்கள் கைகள் முற்றிலும் குழந்தையின் தலையை தாங்கி இருக்கும். நீங்கள் தாய்ப்பால் தர கற்றுக்கொள்ளும்போது உங்கள் இடதுக்கையால் குழந்தையை பிடிக்க பழகிக்கொள்ளுங்கள். அவன் உடலை திருப்பிக்கொள்ள, இதனால் அவன் மார்பு மற்றும் வயிறுப்பகுதி உங்களை பார்த்தவாறு இருக்கும். உங்களுடைய கட்டைவிரல் மற்றும் விரல்கள் அவன் தலைக்கு பின்புறம் இருக்க, காதுகளுக்கு கீழ் புறத்திலும் இருக்க வேண்டும். 

கால்பந்து பிடித்தல் நிலை:

இந்த நிலையில் உங்கள் இருக்கைகளுக்கு நடுவே கால்பந்து இருப்பது போல் இருக்க வேண்டும். அதாவது ஹேண்ட்பேக்கை உங்கள் கையில் எடுத்தால் எப்படி இருக்குமோ அந்த நிலையில் குழந்தையை பிடித்து கொள்ளுங்கள். முதலில் குழந்தையை ஒரு பக்கமாக கைகளுக்கு கீழ் பிடித்து கொள்ளுங்கள். அவள் மூக்கு உங்கள் முலைக்காம்பை பார்த்தவாறு இருக்க வேண்டும்.அவளுடைய கால்கள் உங்கள் பின்புறம் நோக்கி இருக்க வேண்டும்.

ஆனால் மிகவும் நீங்கள் கவனமாக இருத்தல் வேண்டும். அவளை உங்களுடைய மார்பகம் நோக்கி தள்ளாதீர்கள்.

சாய்வு நிலை:

படுக்கையில் குழந்தையை படுக்கவைத்துக்கொண்டு நீங்களும் ஒருக்கணித்து படுத்துக்கொள்ளுங்கள். இந்நிலையில் தாய்ப்பால் தரும்போது உங்கள் துணை அல்லது வேறு ஒருவரின் ஆதரவு என்பது உங்களுக்கு தேவைப்படுகிறது. ஏனெனில், உங்கள் பின்பறம் தலையணைகள் இந்த முறையில் இருக்க வேண்டும். உங்கள் தலை மற்றும் தோள்பட்டையை தாங்கியவாறும் வளைந்த முழங்கால்களை தாங்கியவாறும் தலையணை வைக்க வேண்டியது மிகவும் முக்கியம். அதாவது உங்கள் முதுகு மற்றும் இடுப்பு வளையாமல் நேராக இருத்தல் வேண்டும்.

குழந்தைகளுக்கு தாய்ப்பால் தருவது பற்றிய வீடியோ உங்களுக்காக...

 Video Credit goes to Baby centre

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon