Link copied!
Sign in / Sign up
2
Shares

மோர் கீரை செய்வது எப்படி?

எல்லா தரப்பு வயதினருக்கும் ஏற்ற தோழன் கீரை தான். ஆம், கீரையில் பல வகைகள் இருக்க இவை அனைத்துமே பலவித நன்மையை செய்வதோடு நோய்களை குணப்படுத்தவும் வல்லது. கீரைகளில் தேவையான வைட்டமின் இருக்க, கண்களில் ஏற்படும் குறைபாடுகளை போக்கவும் உதவி செய்கிறது. அப்படிப்பட்ட கீரையில் ஒரு உணவு செய்து சாப்பிட்டால் எப்படி இருக்கும். அட ஆமாங்க! ஆரோக்கியத்தை அள்ளித்தரும் மோர் கீரை எப்படி செய்வது என்பதை தான் நாம் இப்போது பார்க்க போகிறோம். 

தேவையான பொருட்கள்:

முளைக் கீரை, அரைக்கீரை, மணத்தக்காளிக் கீரை கலவை - ஒரு கப் 

மோர் - ஒரு கப் 

மிளகு தூள் - தேவையான அளவு 

உப்பு, பெருங்காயத்தூள் - தேவைக்கேற்ப 

செய்முறை நேரம் - 15 நிமிடங்கள்

எத்தனை பேர் உண்ணலாம் - 2

செய்முறை:

1. கீரைகளை ஆய்ந்து சுத்தம் செய்து கொள்ளுங்கள். 

2. பின்னர் அந்த கீரையை பொடியாக நறுக்கி, ஆவியில் 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும். 

3. கீரை ஆறியதும், மோர், உப்பு, பெருங்காயத்தூள், மிளகு தூள் சேர்த்து அரைத்து வடிக்கட்டி கொள்ளுங்கள்.

4. அவ்வளவு தான் சுவையான சூடான மோர் கீரை இதோ ரெடி.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon