Link copied!
Sign in / Sign up
11
Shares

1 முதல் 3 மாத குழந்தைகள் தூங்கும் விதத்தை அம்மாக்கள் தெரிந்துகொள்வது எப்படி?

கர்ப்பகால வலியை தொடர்ந்து குழந்தையை ஈன்றுவிட்டீர்களா? அதற்கு எங்கள் முதல் வாழ்த்துக்கள். அடுத்து என்ன? என்ற குழப்பம் ஒரு சில அம்மாக்கள் மனதில் எழும். அவற்றில் ஒன்று தான் குழந்தை தூங்கும் நிலையும் கூட. உங்கள் குழந்தைக்கு சரியான தூக்கத்தை புதிதாய் அம்மா ஆனவர்கள் தர வேண்டியது மிகவும் அவசியம். அது என்ன என்பதை இப்போது நாம் பார்க்கலாமா! வாருங்கள். 

ஒரு மாத குழந்தை எப்படி தூங்கும்?

உங்கள் குழந்தை பிறந்த பிறகு பெரும்பாலும் முதல் வாரம் நன்றாக தூங்கும்.

1. முதல் மாதத்தில் பல நாட்களில், உங்கள் குழந்தை 18 மணி நேரம் வரை தூங்க செய்வான்.

2. உங்கள் குழந்தை எவ்வளவு நேரம் தூங்குகிறான் என்பதை மருத்துவருக்கு தெரியப்படுத்த வேண்டியது மிகவும் முக்கியம்.

3. புதிதாய் பிறந்த குழந்தைக்கு எது பகல்? எது இரவு? என தெரியாது. அதனால் முதல் மாதத்தில் அவர்கள் விரும்பும் நேரத்தில் தூங்குவதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.

4. முதல் மாதம் தூங்கும் குழந்தையின் தூக்க சுழற்சி என்பது நம் தூக்கத்தைவிட சிறியதாகவே இருக்கிறது. உங்கள் பிறந்த குழந்தைகளுக்கு REM (Rapid Eye Movement) என்பது அவசியமாகிறது. இதனால் மூளை வளர்ச்சிக்கும் உதவுகிறது.

இரண்டு மாத குழந்தை எப்படி தூங்கும்?

முதல் மாதத்தை விட முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது இரண்டாவது மாத குழந்தையின் தூக்கம் என்பது.

1. உங்கள் குழந்தையின் ஆறு மற்றும் எட்டாவது வாரத்திற்கு இடையில் தூக்க நேர இடைவேளை என்பது மாறுவதை நீங்கள் காணலாம்.

2. இந்த வார இடைவேளையில், பகல் பொழுதில் குறைவாக தூங்கி இரவில் அதிக நேரமும் உங்கள் குழந்தை தூங்குவான்.

3. உங்கள் குழந்தை விழித்திருப்பதை பொறுத்து தூங்கவும் தொடங்குகிறான். 

4. இந்த இரண்டாவது மாத குழந்தை தூக்கம் என்பதில் REM நிலை குறைவாக காணப்படுகிறது.

மூன்று மாத குழந்தை எப்படி தூங்கும்?

1. இந்த மூன்றாவது மாதத்தில் குழந்தைகள் 15 மணி நேரம் வரை தூங்குகிறது.

2. அதாவது பகல் நேரத்தில் உங்கள் குழந்தைகள்  5 மணி நேரம் வரை தூங்க, இரவில் 10 மணி நேரம் வரை தூங்குகின்றனர்.

3. ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை இவர்களுக்கு பசியும் எடுக்கிறது.

4. ஒருவேளை இரவில் நன்றாக தூங்கும் குழந்தை பசி எடுக்காமல் அழ மறுத்தாலும் அதுவும் குழந்தையின் இயல்பு நிலை தான். நீங்கள் பயப்பட தேவையில்லை.

5. ஒருவேளை உங்கள் குழந்தை வழக்கத்தை விட குறைவாக சாப்பிட்டாலோ அல்லது தூக்கம் குறைப்பாட்டில் இருந்தாலோ மருத்துவரை பார்த்து ஆலோசனை பெற வேண்டும். 

 

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon