Link copied!
Sign in / Sign up
157
Shares

சிசேரியன் செய்யும் முறைகளும், அதன் விளைவுகளும்..!!

பொதுவாகவே, சிசேரியன் குறித்த முழுமையான விழிப்புணர்வு பெண்களிடையே இருப்பதில்லை. குழந்தை பெற்றுக் கொள்ளும் முன், அனைத்து விதமான பிரசவம் சார்ந்த விஷயங்களையும், கர்ப்பிணிகள் அறிய வேண்டியது அவசியம். சிசேரியன் குறித்த அனைத்து விஷயங்களையும் இப்பதிப்பில் காணலாம். 

சிசேரியன் செய்யும் முறை

சாதாரணமாக சிசேரியன் அறுவைச் சிகிச்சைக்கு முதுகுத்தண்டில் ஊசி ஏற்றி விறைக்கச் செய்யும் மயக்கமுறை (Spinal Anaesthesia) கையாளப்படும். சிசேரியனில் தாய்க்கு முழுமையான மயக்கத்துக்கு மருந்து கொடுக்கப்படுகிறது அல்லது குறிப்பிட்ட இடம் மட்டும் மரத்துப்போகவும் மருந்து கொடுக்கிறார்கள். குறிப்பிட்ட இடத்துக்கு மட்டும் மயக்க மருந்து தரப்படும்போது, அந்த இடம் மட்டும் மரத்துப்போய் வலி தெரியாது. ஆனால் தாய்க்கு நினைவிருக்கும். 

பொதுவான மயக்கத்தில் தசைகள் இலகுவாகி தூக்கம் வந்துவிடும். வலி தெரியாது. நினைவும் இருக்காது. கர்ப்பப்பையிலிருந்து குழந்தையை வெளியே எடுப்பதற்காக, தொப்புளுக்குக் கீழே அடிவயிற்றை வெட்டுவர். பிறகு குழந்தை, நஞ்சுக்கொடி, பிரசவப்பை எல்லாவற்றையும் வெளியில் எடுத்து வெட்டப்பட்ட கர்ப்பப்பையையும் அடிவயிற்றையும் தைத்து விடுவர்.

சிசேரியன் முறையில் குழந்தை பெறுவதற்கு முன் ஏறத்தாழ ஆறு மணி முதல் அறுவை முடிந்து ஆறு மணி வரை தாயானவர் உணவு ஆகாரமின்றி (Fasting) வைத்திருக்கப்படுவார். அதனால்தான் அறுவைச் சிகிச்சை முடிந்ததும் குளுக்கோஸ், சேலைன் ஏற்றிடுவர்.

 

சிசேரியன் செய்யும் போது கொடுத்த விறைப்பு மருந்து குறையும் போது மெதுவாக வலி அதிகமாக உணரப்படலாம். இதன் போது மீண்டும் வலி நிவாரணிகள் (Pain killers) ஊசி மூலமும் (Injections), மாத்திரைகள் மூலமும் வழங்கப்படும். அறுவைச்சிகிச்சை முடிந்த அடுத்த நாளே தாயாவர் நடக்கத் தொடங்க வேண்டும். இவ்வாறு நடப்பது கால்த்தசை நாளக்குருதி தேங்கிக் கட்டியாவதை தடுக்கும்.

குழந்தை பிறந்த பின்னர் பொதுவாக ஏற்படக்கூடிய மலச்சிக்கல் (Constipation) சிறுநீர்த் தொற்று (Urine infection) ஆகியவற்றைத் தடுக்க அதிக நீராகங்களையும் பழவகைகளையும் இலைக்கறிகளையும் எடுக்க வேண்டும். இவ்வாறு செய்யாமல் சிரமத்துடன் முக்கி மலங்கழிக்கும் போது தையலூடாக வயிற்றினுள் உள்ள பாகங்கள் வெளிவர சிறிது சாத்தியம் உண்டு. எனவே இவ்வாறான சந்தற்பத்தில் இயலுமான அளவு முக்குதல், இருமுதல் போன்றவற்றைத் தவிர்த்தல் வேண்டும்.

ஒரு முறை சீசர் பண்ணிவிட்டால் அடுத்த முறையும் சீசர் பண்ண வேண்டி ஏற்படலாம். முதல் இரண்டு முறை சீசர் என்றால் மூன்றாவது குழந்தை கட்டாயமாக சீசர் முறையில் தான் பெறவேண்டியிருக்கும்.

சிசேரியனுக்குப் பிறகு பின்பற்ற வேண்டியவை..!

தாயின் உடல் நிலையைப் பொறுத்து நான்கிலிருந்து ஆறு நாட்கள் வரை மருத்து வமனையில் இருக்க வேண்டும். மருத்து வமனையிலிருந்து வீடு திரும்பியதும் மெல்ல உங்கள் வழக்கமான எளிய பணிகளைத் தொடக்கலாம். சிசேரியன் அறுவை சிகிச்சை முடிந்து ஒரு மாதத்திற்குள்ளேயே உங்களுடைய எல்லா வேலைகளையுமே செய்ய இயலும்.

ஆபரேஷன் முடிந்து ஓரிரு நாட்களில், நீங்கள் சாதாரண உணவை உட்கொள்ளலாம். சிசேரியனுக்கு உணவுக் கட்டுப்பாடுகள் கிடையாது. சமச்சீரான உணவு வகைகளைச் சாப்பிடுவது நல்லது. உணவில் புரதச்சத்து கொஞ்சம் அதிகம் இருக்கட்டும்.

நெய் போன்ற கொழுப்புச்சத்து நிறைந்த பொருட்களைத் தவிர்க்கவும். காரணம், கர்ப்ப காலத்தின்போது உடல் எடை கூடியிருக்கும். அதைக் குறைப்பதற்கு இந்தக் கொழுப்பு உணவுகள் எந்தவகையிலும் உதவாது.

ஆறு வாரங்களுக்கு அதிக எடையுள்ள பொருட்களைத் தூக்குவதைத் தவிர்க்கவும். அதே போல் தாம்பத்திய உறவையும் ஆறு வாரங்களுக்குத் தவிர்த்து விடுங்கள். நான்கிலிருந்து ஆறுவாரங்களுக்குப் பிறகு, அடிவயிற்றுத் தசைகளுக்கான உடற் பயிற்சிகளைத் தொடக்கலாம்.

எப்போதெல்லாம் பரிசோதனைக்கு வரவேண்டும் என்பதையெல்லாம் உங்கள் மருத்துவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.

சிசேரியனால் ஆபத்து உண்டா..?

பொதுவாக, சிசேரியன் அறுவை சிகிச்சை ஆபத்தில்லாதவை. மிகச் சில சமயங்களில் பிரச்சினைகள் வருவதுண்டு. ஆனால் எல்லா அறுவை சிகிச்சைகளிலும் அந்த ஆபத்து உண்டு. ஏதாவது தொற்று நோயோ அல்லது இரத்தக்கசிவோ ஏற்பட வாய்ப்பிருக்கிறது.மிக அரிதாக கர்ப்பப்பையை வெட்டிய இடம் மிகப் பலவீனமாக மாற வாய்ப்பிருக்கிறது. இது குடலிறக்கத்துக்கு வழி வகுத்து விடுகிறது.

முதல் பிரசவம் சிசேரியன் என்பதால், அடுத்த பிரசவமும் சிசேரியனாக இருக்கும் என்ற கவலை வேண்டாம். உங்களது அடுத்த பிரசவம் இயல்பாக பெண்ணுறுப்பின் வழியே நிகழ வாய்ப்பிருக்கிறது. ஆனால், உங்களுக்கு சிசேரியன் எந்தக் காரணங்களுக்காகச் செய்யப்பட்டது என்பதைப் பொறுத்து, அடுத்த பிரசவமும் சிசேரியனாக அமையும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

+

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
100%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon