Link copied!
Sign in / Sign up
5
Shares

குழந்தையை உண்மையாக நேசிக்கும் பெற்றோர்களுக்கான பதிப்பு!

குழந்தையை பத்து மாதம் கஷ்டப்பட்டு பெற்றெடுத்த பின், தன் கடமை தீர்ந்து விட்டதாய் தம்பதியர் எண்ணினால், அது மிகவும் தவறு. குழந்தையை பெற்று எடுத்த பின்பு தான், பெற்றோரின் உண்மையான கடமையே தொடங்குகிறது; குழந்தைகளை சிறு வயது முதலே, அனைத்து அத்யாவசிய விஷயங்களையும் கற்றுக்கொடுத்து, மரியாதை தெரிந்தவர்களாக, அறிவுள்ளவர்களாக வளர்த்தல் அவசியம். ஆகையால், குழந்தை வளர்ப்பில் முக்கிய பங்கு வகிக்கும் சில விஷயங்களை குறித்து, இந்த பதிப்பில் படித்தறியுங்கள் பெற்றோர்களே!

1. பசி!

குழந்தை உங்களிடம் பசிக்கிறது என்று கூறினால், முதலில் உணவினை அளியுங்கள்; உங்களுக்கு ஏற்படும் சோம்பல், அரட்டை ஆர்வம் காரணமாக குழந்தைக்கு உணவளிப்பதை தள்ளிப்போடாதீர்கள்.

2. ஆடை!

குழந்தைகள் எப்பொழுதும் ஏதேனும் ஆடை அணிந்திருக்க வேண்டும்; ஓரிரு வயது வரை வீட்டில், அதுவும் பெற்றோரான நீங்கள் மட்டும் இருக்கையில் வேண்டுமானால், குழந்தை அவ்வப்போது ஆடையில்லாமல் இருக்கலாம். ஆனால், குழந்தையை எப்போதும் ஆடை அணிவித்து அழகு பார்ப்பது ஒரு நல்ல பெற்றோருக்கான முக்கிய கடமை ஆகும். 

3. பேச்சு!

குழந்தைகள் பேசினால், அவர்களுடன் பேசிக்கொண்டே இருங்கள்; அவர்கள் கேள்வி எழுப்பினால், அவர்களின் கேள்விக்கு சரியான விடையை அளியுங்கள். மேலும் உங்கள் எரிச்சலை குழந்தையிடம் காட்டி, அவர்கள் பேசுவதை ஒருபோதும் தடுக்க முயலாதீர்கள்.

4. Good Touch - Bad Touch 

யார் அழைத்தால் உடன் செல்ல வேண்டும், யாரையும் தன்னை தொட விடக்கூடாது; எந்த ஒரு ஆணும் பெண்ணும் பெற்றோரையும் சேர்த்து, ஒரு தன்னை, தன் உடல் பாகங்களை தொட விடக்கூடாது. Good Touch - Bad Touch என்ற தெளிவான விளக்கத்தை கற்றுக்கொடுத்து, வளர்க்க வேண்டும். 

5. சிறப்பான வளர்ப்பு!

உங்கள் குழந்தைகளை யாருடனும் ஒப்பிட்டு பேசாமல், அவர்கள் தவறு செய்தால், தண்டிக்காமல் கண்டித்து திருத்தி, அன்பு காட்டி அரவணைத்து, ஊக்கமளித்து, பெரியவர்களை மதிக்கும் பண்பை கற்பித்து அவர்களை வளர்த்தல் மிகவும் அவசியம். 

6. எதிர்காலம்!

படிப்பு ஒன்றே எதிர்காலம் என்று வளர்க்காமல், குழந்தைகளுக்கு அனைத்துவித கலைகளையும் கற்றுக்கொடுத்து, அவர்களுக்கு பிடித்த துறையில் வளர விடுங்கள்; மேலும் குழந்தைகள் சமூக சேவை மற்றவர்களுக்கு உதவுதல் போன்ற விஷயங்களையும் கற்பித்து குழந்தையை சமூகத்திற்கு நன்மை செய்யும் மனப்பான்மையுடன் வளருங்கள்.!

7. தவிர்க்க!

குழந்தை கேட்கும் படியாக புறம் பேசுவது, தவறான வார்த்தைகள் உபயோகிப்பது, மேலும் அவர்கள் முன் சண்டையிடுவது, கோள்மூட்டி வேலை பார்ப்பது போன்றவற்றை தவிருங்கள்.!

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon