Link copied!
Sign in / Sign up
2
Shares

ஷாப்பிங் செய்வதால் மகிழ்ச்சி ஏற்படுவது ஏன்?

நாம் நம் வாழ்க்கையில், எந்த ஒரு குறிப்பிட்ட காரணமும் இல்லாமல் அவ்வப்போது ஷாப்பிங் செய்து பல பொருட்களை வாங்கி குவிக்கும் நபர்களை பார்த்திருப்போம். அவர்களை நாம் ஷாப்பிங் அடிமைகள் என்று அழைப்பதுண்டு. ஆனால் ஷாப்பிங் என்பது ஏதோ ஒரு பொருளை வாங்குவது மட்டுமல்ல. இது அதற்கும் மேல் என்றே சொல்லலாம். TBS குளோபல் மூலம் Ebates.com சார்பாக நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் ஷாப்பிங் செய்வதால் அது பலருக்கும் மன ரீதியாக சிகிச்சையளிக்கிறது என்று தெரியவந்துள்ளது. அமெரிக்க மக்கள்தொகையில் பாதி பேர் (64% பெண்கள்), இந்த சிகிச்சையால் மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு, தன்னம்பிக்கையை உயர்த்துவதாக கூறியுள்ளனர்.

1 ஷாப்பிங் ஒரு பொழுதுபோக்காக செயல்படுகிறது

சிலருக்கு ஷாப்பிங் என்பது சௌகரியமான வாழ்க்கைக்கு தேவையான அடிப்படையான பொருட்களை வாங்குவது என்பதே. ஆனால் ஷாப்பிங் என்பது பலருக்கும் மற்ற செயல்களை போல் ஒரு பொழுதுபோக்காகும். பலர் ஒரு பொருளை வாங்குவது அது தேவை என்பதால் அல்ல. அது அவர்களுக்கு பிடித்திருப்பதால் தான் வாங்குகிறார்கள். ஏனெனில், பாடுவது, ஆடுவது, வரைவது போல ஷாப்பிங்கும் ஒரு பொழுதுபோக்காகும். இதை பெண்கள் தான் அதிகமாக செய்வார்கள். இதுவே அவர்களை மகிழ்ச்சிப்படுத்துகிறது.

2 ஷாப்பிங் மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கிறது

ஒரு ஆய்வில், " ஒருத்தர் தனக்காக ஒரு சிறிய பொருளை வாங்கும் போது, நேர்மறை விளைவுகள் உண்டாகும். அவர் நன்றாக உணர்வார்". நாள் முழுவதும் அலுவலகத்தில் மூளையை கசக்கி பிழிந்து வேலை செய்த பின், ஷாப்பிங் மட்டுமே உங்களுக்கு சிறிது மன அமைதியை கொடுக்கும். நீங்கள் அடிக்கடி பொருள் வாங்குவதில்லை என்றாலும், கடைக்கு சென்று புதிதாக வந்த பொருட்களையோ அல்லது துணி ரகங்களையோ பார்க்கலாம். புதிய பொருட்களில் இருந்து வரும் மணமும், அந்த சூழலும் உங்களுக்கு மகிழ்ச்சியான மனநிலையை உண்டாக்கும்.

3 ஷாப்பிங் அன்பை வெளிக்காட்டும் வழி

ஷாப்பிங் என்பது தனிப்பட்ட செயலை தாண்டி ஒரு சமூக செயலாகும். நாம் ஒரு இடத்திற்கு செல்லும் போது, நமக்கு பிடித்தவர்களுக்காக அந்த இடத்தின் நினைவாகவோ அல்லது அந்த இடத்தில் பிரபலமான ஒரு பொருளையோ வாங்கி கொடுப்போம். இந்த வகையான ஷாப்பிங் நமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். ஏனெனில், நமக்கு பிடித்தமானவர்களுக்காக நாம் பொருள் வாங்குகிறோம். ஷாப்பிங் என்பது தன்னை தானே நிறைவுபடுத்திக்கொள்ளும் ஒரு செயலல்ல. நம் அன்பை வெளிப்படுத்தும் ஒரு வழியுமாகும்.

4 ஷாப்பிங் சோகத்தில் இருந்து நம்மை மீட்டெடுக்கும்

புகழ் பெற்ற சான் பிரான்சிஸ்கோ தெரபிஸ்ட் பெக்கி வெய்ன் இந்த சிகிச்சையை பாராட்டுகிறார், " நாம் எல்லோரும் இந்த ரீடேல் சிகிச்சையை அவ்வப்போது சந்தோஷமாக அனுபவிக்கிறோம். இது நமக்கு தேவையான ஒன்றும் கூட". நாம் நினைப்பதை போல் எல்லா விஷயங்களும் நடப்பதில்லை. இதனால் நாம் கவலையாக இருப்போம். நம் தினசரி வாழ்வில் பல தோல்விகளை நாம் சந்திக்க நேரிடும். எத்தனை தோல்விகள் வந்தாலும் அது நம்மை பாதிக்காமல், சந்தோஷமாக இருக்க வேண்டியது நம் கடமை. இந்த மாதிரி நேரத்தில் ஷாப்பிங் நிச்சயம் நமக்கு கைகொடுக்கும். இது எல்லோருக்கும் பொருந்தாது, ஏனெனில் எல்லோரும் இதை நம்புவதில்லை. ஆனால் விஞ்ஞான ரீதியாக சோகமாக இருக்கும் போது ஷாப்பிங் செய்வது ஒருவரை நன்றாக உணர வைக்கும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. இது உங்கள் மனக்காயங்களை ஆற்றும் ஒரு இயற்கை தீர்வாகும்.

5 ஷாப்பிங் உங்களின் நம்பிக்கையை அதிகரிக்கிறது

நீங்கள் அணியும் ஆடை உங்களின் சுயத்தை பிரதிபலிக்கிறது. உங்களின் அலமாரி உங்களின் அகத்தை பிரதிபலிக்கும். நீங்கள் யார் என்பதை நீங்கள் செய்யும் ஷாப்பிங் தீர்மானிக்கிறது. நீங்கள் எதனால் மகிழ்ச்சியடைவீர்கள் என்பதையும் ஷாப்பிங் தான் தீர்மானிக்கிறது.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
100%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon