Link copied!
Sign in / Sign up
39
Shares

பிரசவத்திற்குப் பின்னான உடலுறவு அளிக்கும் வியக்கத்தக்க 10 உண்மைகள்..!!

ஒரு குழந்தையை பெற்று எடுத்த பின் பெண்ணின் உடலில் பல மாறுதல்கள் நிகழ்கின்றன. சில மாறுதல்கள் பெண்களின் அழகைக் கூட்டலாம்; சிலவோ அழகைக் குறைக்கலாம். பிரசவத்திற்குப் பின் பெண்கள் உடலுறவு கொள்ளும் போது, அவர்களின் உடலுறவு பல வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

இவ்வாறு உங்கள் உறவினால், ஏற்படும் வியத்தகு மாற்றங்களைப் பற்றி காணலாம்., இப்பதிப்பில்..

வியக்கத்தக்க 10 உண்மைகள்

1. பிரசவத்தால், உங்கள் பிறப்புறுப்பு பகுதி அதிகம் மாற்றம் அடைந்திருக்கும். உங்களுக்கு சுகப்பிரசவம் நிகழ்ந்திருந்தால் பெரிதாகியும், சிசேரியன் என்றால் அதற்கேற்ற மாற்றங்களையும் அடைந்திருக்கும்; மாற்றங்கள் எதுவாயினும் உங்கள் கணவர், இம்மாற்றங்களை ரசிக்கத்தான் செய்வார்.

2. பிரசவத்திற்குப் பின், உடலுறவு கொள்ளும் போது, பெண்களுக்கு அதிக வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது. அப்படி அதிக வலி ஏற்பட்டால், மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது நல்லது.

3. மகப்பேற்றால், பெண்களின் மனநிலையில் மாற்றங்கள் ஏற்படலாம். அதனால், அவர்களுக்கு உடலுறவு கொள்ளும் எண்ணமே எழாமல் இருக்கலாம். இத்தகைய சூழலில், கணவர் மனைவிக்கு பக்கபலமாக இருந்து, அவரின் மனநிலையை சரிசெய்து, இயல்பு நிலைக்குக் கொண்டுவர முயல்வது நல்லது.

4. நீங்கள் மற்றோரு குழந்தையை பெற்றுக்கொள்ள வேண்டும் என நினைக்கையில், தாய்ப்பால் புகட்டிக் கொண்டிருந்தாலும், அது உங்கள் எண்ணத்திற்கு எந்தவித பங்கத்தையும் விளைவிக்காது. நீங்கள் தைரியமாக உடலுறவு கொண்டு, ஒரு புது உயிரினை உருவாக்கலாம்.

5. பிரசவத்தின் பின்னல், நீங்கள் முன்னுரிமை அளிக்கும் விஷயங்கள் மாறுபடலாம்; அதில் உடலுறவு கடைசி இடம் கொள்ளலாம். இச்சமயங்களில், கணவர்கள் பொறுமையோடு இருக்க வேண்டியது மிக அவசியம்.

6. உடலுறவு கொள்கையில், சில சமயங்களில் தாய்ப்பால் வெளிப்படலாம்; இது வெட்கப்படக்கூடிய விஷயமன்று. இது இயல்பான நிகழ்வே! கணவர்கள், இதற்காக மனைவி மீது கோபம் கொள்ளாது, அவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

7. குழந்தை பிறந்த பின் உடலுறவு கொள்ளும் போது, அது உங்களுக்கு முன்பை விட அதிக சந்தோஷத்தைத் தரும். ஏனெனில், உங்கள் பிறப்புறுப்பும், ஹார்மோன் சுரப்பும் அதிக மாற்றங்கள் அடைந்திருக்கும். இம்மாற்றங்கள் உங்களுக்கு அதீத இன்பத்தை உடலுறவு போது அளிக்கும்.

8. குழந்தை பிறந்தவுடன், உங்களுக்கு குழந்தையை கவனிக்கவே நேரம் சரியாக இருக்கும். அப்பொழுது உங்களுக்கு உறங்கவே நேரம் இருக்காது; இதில் உடலுறவு கொள்ள எங்கே நேரம்..? தம்பதியருக்கு மதிய வேளையில் உடலுறவு கொள்ள நேரம் இருந்தால், அவ்வேளையில் ஈடுபடலாம்; ஏனெனில் அந்த சமயம் தம்பதியரின் உணர்வுகள் மேலோங்கிக் காணப்படலாம் எனக் கூறப்படுகிறது.

9. நீங்கள் உடலுறவின் உச்சக்கட்டத்தை எட்டும் போது, உங்கள் பிறப்புறுப்பில் நடைமுறைக்கு மாறான கோழைத்திரவம் வெளிப்பட்டால், உங்களுக்கு அதிக வலி மற்றும் வேதனை தோன்ற வாய்ப்புள்ளது. ஆகையால், கவனத்துடன் செயல்பட வேண்டும்.

10. உடலுறவு உங்களுக்கு வலியை ஏற்படுத்தலாம். அதிலும் குறிப்பாக, சிசேரியன் செய்த பெண்களுக்கு அதிக வலியை உண்டாக்கலாம். இது உங்கள் உடலில் ஹார்மோன்கள் மற்றும் தாய்ப்பால் சுரப்பில் மாற்றங்களை உருவாக்கலாம்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon