Link copied!
Sign in / Sign up
0
Shares

செவிலித்தாயிடம் இருக்க வேண்டிய 5 குணங்கள்

நாம் நம் குழந்தைகளை எப்படி அளவுக்கதிகமாக நேசிக்கின்றோமோ, அதே போல் தான் மற்றவர்களும் இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. இந்தியாவில், குழந்தையை பார்த்துக்கொள்ள, ஆட்களை அதாவது செவிலித்தாயை நியமிப்பது சாதாரணமான ஒன்று. நீங்கள் தேர்ந்தெடுக்கும் நபர் தாயன்புடன் இருக்க வேண்டும். நேர்மறையான எண்ணம் கொண்டவராக இருக்க வேண்டும். உங்கள் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடப்போவதால், அவரிடம் நிறைய நல்ல குணங்கள் இருக்க வேண்டும். எனவே, ஒரு செவிலித்தாயை நியமிக்கும் போது, அவரிடம் சில அடிப்படை குணங்கள் இருக்கிறதா என்று பார்ப்பது மிக முக்கியமான ஒன்றாகும்.

1 குழந்தைகளுக்கான அன்பு

உங்கள் குழந்தையை சந்திக்கும் போது, அந்த செவிலித்தாய் முகத்தை இறுக்கமாக வைத்திருந்தால், கண்டிப்பாக அவரை தேர்ந்தெடுக்க வேண்டாம். உங்கள் குழந்தையை நன்றாக கவனித்துக்கொள்ள அன்பாகவும், கனிவாகவும், குழந்தைகள் மேல் பாசம் கொண்டவராக இருக்க வேண்டும்.

2 பொறுப்பு

படத்தில் காண்பதை போல, ஒரு தவறு செய்த பின்னரும், குற்ற உணர்வு ஏதும் இல்லாமல் சந்தோஷமாக இருந்தால், அவரை தேர்ந்தெடுக்க வேண்டாம். பொறுப்பாக இருக்கும் ஒரு நபரால் தான் வேலையை ஒழுங்காக செய்ய முடியும். அவர் பொறுப்பை தட்டிக்கழிக்காமல், எடுத்துக்கொண்டு முடித்துக்காட்ட வேண்டும்.

3 நம்பிக்கையான ஒருவர்

உங்கள் குழந்தையை ஒப்படைக்கும் நபர், நம்பகமான ஒருவராக இருக்க வேண்டும். செவிலித்தாயை நியமிக்கும் முன், அவர் பின்னணியை பரிசோதிப்பது நல்லது. மேலும், வீட்டில் கேமராவை மறைத்துவைத்து, குழந்தையுடனான அவரின் நடத்தையை கண்காணிக்க வேண்டும்.

4 அனுபவம்

முன் அனுபவம் உள்ளவரை வேலைக்கு நியமிப்பது மிகவும் நல்லது. ஏனெனில், அவர்களால் எந்த விதமான சூழ்நிலையையும் சமாளிக்க முடியும். உங்கள் குழந்தை தான் உங்களின் உலகம். எனவே, அவர்களை மற்றவரிடம் ஒப்படைத்து பரிசோதனை செய்வதை தவிர்க்கவும்.

5 முதலுதவி திறன்

நீங்கள் நியமிக்கும் செவிலித்தாய், அடிப்படை முதலுதவி சிகிச்சைகள் குறித்து தெரிந்தவராக இருக்க வேண்டும். எந்த விதமான நிலைமையையும் கட்டுக்குள் வைத்திருக்கும் திறன் வேண்டும். படத்தில் பார்க்கும் Mr.பீன் வேடிக்கையாக இருக்கலாம். ஆனால், இதே நிலையில் உங்கள் செவிலித்தாயும் இருந்தால், அது நல்லதல்ல.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon