Link copied!
Sign in / Sign up
0
Shares

சருமத்தை மிளிர செய்யும் 7 ஆயுர்வேத சிகிச்சைகள்

நாம் சருமம் என்று வரும் போது, எச்சரிக்கையாக இருக்க நம்மால் முடிந்தவரை ஆர்வம் காட்டுவோம். நாம் செயற்கை மற்றும் இரசாயனம் நிறைந்த தயாரிப்புகளை குறைந்தபட்சமாக பயன்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.

ஆனால், நாம் இன்னும் நிறம் குறையாத, முகத்தின் அசுத்தங்களால் ஏற்படும் கரும்புள்ளிகள், பருக்கள் மற்றும் சூரிய ஒளியால் பதிப்படையாத சருமம் வேண்டும் என நினைத்தால் தீர்வு இருக்கிறதா? இருக்கிறது. அதற்கான வலி ஆயுர்வேதத்தில் இருக்கிறது. ஆயுர்வேத, நமக்கு குறிப்பாக இந்தியர்களுக்கு புதிதல்ல. ஆயுர்வேதம் தோல் பராமரிப்பு தொடர்பான சிக்கல்களுக்கு மிகவும் பயனுள்ள, பாதுகாப்பான மற்றும் இயற்கை சிகிச்சையாக கருதப்படுகிறது. ஆயுர்வேதம் சூழ்நிலைகளுக்கு தகுந்தபடி பலன் தராமல் பிரச்சனைகளின் வேரை கண்டறிந்து பலன் தருகிறது. இங்கு ஆயுர்வேத முறைப்படி அழகிய, மிளிர கூடிய சருமத்தை பெறுவது எப்படி எனப் பார்க்கலாம்.

 

ஆயுர்வேத கூற்றுப்படி, ஒவ்வொரு தோலும் வாதா, பிதா, மற்றும் கபா என மூன்று வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. வாதா சரும வகை வறண்ட சருமத்தையும், பிதா தோல் வகை அதிக உணர்திறன் மிக்க சருமத்தையும் மற்றும் கபா தோல் வகை எண்ணெய் சருமத்தையும் குறிக்கும். ஒருவரின் சரும வகையை ஆயுர்வேதத்தின் மூலம் சாதாரண சருமமாக மாற்ற முடியும் என நம்பப்படுகிறது.

1. முல்தானி மிட்டி

சருமத்தின் வயதான தோற்றத்தை தடுக்க முல்தானி மிட்டி இந்தியாவில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், இந்த மூலப்பொருளின் திறன் என்பது உங்கள் சரும பராமரிப்பில் போதுமான சான்றாக இருக்கிறது. சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் மற்றும் அழுக்கை வெளியேற்ற முல்தானி மிட்டி பயன்படுத்தப்படுகிறது. இந்த மூலப்பொருள் பருக்கள் வராமல் தடுக்கவும், சருமத்தின் நிறத்தை சமநிலையில் வைப்பதோடு, நிறம் மாறாமல் இருக்கவும் மற்றும் வெளிறிய சருமத்தை மாற்றி, உங்கள் சருமத்தை மிளிர செய்யவும் உதவுகிறது. முல்தானி மிட்டியை நீங்கள் பால், தயிர் அல்லது தண்ணீரில் கலந்தும் உபயோகிக்கலாம்.

2. சந்தனக்கட்டை

சந்தனக்கட்டை அல்லது சந்தனம் என்பது ஆயுர்வேத மூலிகை ஆகும். இது தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிப்பதோடு, வயது முதிர்ச்சியை சரி செய்து தோலின் நிறத்தைப் பராமரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. சந்தனத்தை பொடி செய்து, அதை பசை வடிவத்தில் தோலில் பயன்படுத்தலாம். இந்த சந்தனம் பிதா மற்றும் கபா தோல் வகைக்கு உதவுகிறது. இந்த சரும பராமரிப்பு முறையின் ஒரு பாகமாக இந்த மூலப்பொருள், உங்கள் முகத்தில் முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாவை சுத்தப்படுத்துகிறது.

3. ரோஸ் வாட்டர்

ரோஸ் வாட்டர் அதன் குளிர்ச்சி மற்றும் ஹைட்ரேட்டிங் பண்புகள் காரணமாக அதிக உணர்திறன் கொண்ட சருமத்தை சரி செய்கிறது. மேலும், ரோஸ் வாட்டர் தோலின் நிறத்தை சீர்படுத்துவதோடு, வெளிறிய நிறத்தை குறைத்து, தோலை இறுக செய்கிறது. ரோஸ் வாட்டர் அழற்சிக்கு எதிராகவும் மற்றும் பாக்டீரியவை எதிர்க்கும் பண்புகளை கொண்டிருப்பதால், உங்கள் முகத்தில் பாக்டீரியா இனப்பெருக்கம் செய்வதை தடுக்கிறது. இது உங்கள் தோலின் மந்தமான நிலையை சரி செய்வதுடன், அதை பிரகாசமாக மாற்றுவதற்கும் பயன்படக்கூடிய ஒரு மூலப்பொருள் ஆகும். உண்மையில் ஒரு வியத்தகு ஆயுர்வேத சிகிச்சை.

4. கற்றாழை

கற்றாழை பசை சமஸ்கிருதத்தில் க்ரிதா குமாரா என்று அழைக்கப்படுகிறது, அதன் குணப்படுத்தும் பண்புகள் ஆயுர்வேத நூல்களின் மூலம் அறியப்படுகிறது. இது சரும எரிச்சலைக் குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், இது வெளிறிய சருமத்தை சரி செய்யவும், துளைகள் அடைபடாமல் ஈரப்பதத்தை தக்க வைக்கவும் உதவுகிறது. வாதா தோல் வகை கொண்டவர்கள் தினமும் இந்த ஜெல்லை மாய்ஸ்சரைசராகப் பயன்படுத்த வேண்டும். இதை செடியில் இருந்து நேரடியாக உபயோகிக்க வேண்டும், செயற்கை வாசனை திரவியங்களுடன் சேர்த்து பயன்படுத்த கூடாது. இரண்டு தேக்கரண்டி கற்றாழை பசை சருமத்தில் உள்ள நச்சுக்களை நீக்கி, மிளிர செய்கிறது.

5. நெல்லிக்காய்

நெல்லிக்காய் பெரும்பாலும் எண்ணற்ற பலன்களை கொண்ட ஒரு சிறந்த உணவாக கருதப்படுகிறது. நெல்லிக்காய் பிதா, வாதா, மற்றும் கபா ஆகியவற்றை சமநிலைப்படுத்த உதவுகிறது. நெல்லிக்காய் சாறு துவர்ப்பு சுவையுடன், குளிர்ச்சியான பண்புகளை கொண்டிருப்பதால் இதை சருமத்திற்கு வெளியேயும், உடலுக்குள்ளேயும் பயன்படுத்தலாம். இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும், இயற்கை இரத்த சுத்தப்படுத்தியாகவும் பயன்படுகிறது. மேலும், இது சருமத்தின் கொலாஜன் அளவுகளை அதிகரிப்பதால், சருமத்தை ஆரோக்கியமாகவும், மென்மையாகவும் மற்றும் பளபளப்பாகவும் வைக்க உதவுகிறது.

6. மஞ்சள்

மஞ்சள் இந்தியாவின் அனைத்து வீடுகளிலும் இருக்க கூடிய ஒரு பொருள். அதன் செறிவூட்டல் பண்புகள் காரணமாக, இந்திய உணவு வகைகளில் மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது. மஞ்சள், அழற்சிக்கு எதிராகவும், வயதான தோற்றத்தை தடுக்கவும் மற்றும் பாக்டீரியாக்களுக்கு எதிராகவும் செயல்படும் ஆற்றல் கொண்டது. இது பருக்களை தடுக்க உதவுவதோடு, இறந்த தோல் செல்கள் நீக்கவும், தெளிவான புதிய தோலுடம் கூடிய தோற்றத்தை உருவாக்கவும் பயன்படுகிறது. பாசிப்பயறு மாவுடன், மஞ்சள் தூள் மற்றும் பால் சேர்த்து முகத்தில் போட நல்ல பலனைத் தரும்.

7. குங்குமப்பூ

குங்குமப்பூ ஒரு விலை உயர்ந்த மசாலாப்பொருள். இது சரும பளபளப்பை அதிகரிக்க, சரும நிறத்தை அதிகரிக்க, மற்றும் மிக முக்கியமாக வாதா, பிதா மற்றும் கபா ஆகியவற்றை சமன் செய்ய ஆயுர்வேத பாரம்பரியங்களில் பயன்படுத்தப்படுகிறது. குங்குமப்பூ, இரத்தத்தை சுத்திகரிக்கும் ஆற்றல் கொண்டது. இது உலர்ந்த தோல், முகப்பரு, கறைகள் மற்றும் கருவளையங்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகிறது. பால், ரோஸ் வாட்டர் அல்லது வேறு ஏதேனும் திரவத்துடன் குங்குமப்பூ சேர்த்து வெளிப்புறமாகப் பயன்படுத்தலாம். 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon