Link copied!
Sign in / Sign up
31
Shares

ஆரோக்கியத்தை தரும் குழந்தைகளுக்கான 7 வகை கஞ்சி

கஞ்சி எளிய, முழுமையான மற்றும் ஆரோக்கியத்திற்கு தேவையானவற்றை நிறைவு செய்ய கூடிய உணவு. இதை தயாரிப்பது மிக பெரிய வித்தை போல் அல்ல, சில நிமிடங்களில் தயாரித்துவிடலாம். குழந்தைகளுக்கு சலிப்பை ஏற்படுத்தாமல் இருக்க விதவிதமாக கஞ்சி தயாரித்து கொடுங்கள். இங்கு குழந்தைகளுக்கான 7 கஞ்சி வகைகளை பார்க்கலாம்.

1. ஏலக்காய் மற்றும் கோதுமை கஞ்சி

தேவையான பொருட்கள்

கோதுமை - 3 தேக்கரண்டி

பாசிப்பயறு - 2 ½ தேக்கரண்டி

ஏலக்காய் - 3

செய்முறை

1. ஈரமில்லாத பாத்திரத்தில் கோதுமை, பாசிப்பயறு மற்றும் ஏலக்காயை வறுக்கவும்.

2. அவற்றை தனித்தனியாக அரைத்து, பின் ஒன்றாக கலந்து கொள்ளவும்.

3. அரைத்து வைத்த கலவையை சூடான நீரில் இரண்டு தேக்கரண்டி சேர்க்கவும்.

4.  நன்கு கட்டியில்லாமல் கலந்து குழந்தைக்கு கொடுக்கவும்.

2. பாசிப்பருப்புடன் அரிசி கஞ்சி

தேவையான பொருட்கள்

அரிசி - 3 தேக்கரண்டி

பருப்பு - 2 தேக்கரண்டி

செய்முறை

1. அரிசியை கழுவி, நன்கு உலர செய்து அரைத்து கொள்ளவும்.

2. பருப்பை வறுத்து அரைத்து கொள்ளவும்.

3. இரண்டையும் ஒன்றோடு ஒன்றாக கலந்து கொள்ளவும்.

4. அதனுடன் சுடுநீர் சேர்த்து கட்டியில்லாமல் கலந்து கொள்ளவும்.

இப்போது சுவையான அரிசி கஞ்சி தயார்.

3. தேன் மற்றும் ஓட்ஸ் கஞ்சி

தேவையான பொருட்கள்

பால் - 3/4 கப்

ஓட்ஸ்

தேன் - 1 தேக்கரண்டி

செய்முறை

1. பாலை காய்ச்சி பொங்கி வரும் போது, அதனுடன் ஓட்ஸ் சேர்க்கவும்.

2. ஓட்ஸ் வேகும் வரை நன்கு கிளறிவிடவும்.

3. அடுப்பை அணைத்த பின் அதனுடன் தேன் சேர்க்கவும்.

இப்போது சுவையான ஓட்ஸ் கஞ்சி சாப்பிட தயாராக உள்ளது.

4. சோள கஞ்சி

தேவையான பொருட்கள்

சோளப்பொடி - 4 தேக்கரண்டி

பாசிப்பருப்பு பொடி - 4 தேக்கரண்டி

எள் பொடி - அரை தேக்கரண்டி

செய்முறை

1. மேலே குறிப்பிட்ட மூன்று பொடிகளையும் தனித்தனியாக வறுத்து கொள்ளவும்.

2. பின், அவற்றை ஒன்றோடு ஒன்றாக நன்கு கலந்து கொள்ளவும்.

3. இந்த கலவையை சுடுநீரில் சேர்த்து கட்டியில்லாமல் கிளறவும். இந்த கலவை கட்டியை ஏற்படுத்தக் கூடியது. எனவே, நன்கு கிளறவும்.

சோளக் கஞ்சி இப்போது சாப்பிட தயாராக உள்ளது.

5. சோயாபீன்ஸ் மற்றும் கோதுமை கஞ்சி

தேவையான பொருட்கள்

முழு கோதுமை - 5 தேக்கரண்டி

முழு சோயாபீன்ஸ் - 1 ½ தேக்கரண்டி

செய்முறை

1. முழு கோதுமை மற்றும் சோயாபீன்ஸ் இரண்டையும் தனித்தனியாக நன்கு வறுத்து கொள்ளவும்.

2. அவற்றை தனித்தனியாக அரைத்து கொள்ளவும்.

3. இரண்டையும் நன்றாக கலந்து கொள்ளவும்.

4. இந்த கலவையை சுடுநீரில் சேர்த்து நன்கு கலக்கவும்.

சோயாபீன்ஸ் மற்றும் கோதுமை கஞ்சி உங்களுக்காக காத்திருக்கிறது.

6. ஆப்பிள் மற்றும் ராகி கஞ்சி

தேவையான பொருட்கள்

ராகி மாவு - 2 தேக்கரண்டி

அரை ஆப்பிள்

செய்முறை

1. ஆப்பிளை நன்கு அரைத்து கூழ் செய்து கொள்ளவும்.

2. ராகி மாவை தண்ணிரில் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

3. இப்போது ஆப்பிள் கூழை அதனுடன் சேர்க்கவும்.

இதோ ஆரோக்கியமான ஆப்பிள் மற்றும் ராகி கஞ்சி தயார்.

7. கடலை மற்றும் கோதுமை

தேவையான பொருட்கள்

கடலை - 3 தேக்கரண்டி

கோதுமை - 3 தேக்கரண்டி

பாசிப்பயறு - 2 ½ தேக்கரண்டி

செய்முறை

1. கடலை, கோதுமை மற்றும் பாசிப்பயறு ஆகியவற்றை நன்கு வறுத்து கொள்ளவும்.

2. பின், இவை மூன்றையும் அரைத்து பொடி செய்து கொள்ளவும்.

3. இந்த பொடியை நான்கு தேக்கரண்டி எடுத்து சுடுநீரில் கலந்து கொள்ளவும்.

4. கட்டி இல்லாமல் இருக்க நன்கு கிளறவும். வெதுவெதுப்பான சூட்டில் குழந்தைக்கு கொடுக்கவும். 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon