Link copied!
Sign in / Sign up
1
Shares

நீங்கள் செய்துப்பார்க்க வேண்டிய 7 சிகை அலங்காரங்கள்

உங்கள் அன்றாட தோற்றம் உங்களை சோர்வடைய செய்கிறதா? நீங்கள் அழகு நிலையங்களுக்கு செல்லாமல் எப்போதும் உள்ள தோற்றத்தை எளிதாக மாற்றி அமைக்க முடிந்தால், அது உங்களை எவ்வளவு ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். நீங்கள் உங்கள் தினசரி சிகை அலங்காரத்தில் செய்யும், சிறிய மாற்றம் கூட உங்கள் தோற்றத்தை வித்தியாசப்படுத்தி காட்டும். இங்கு உங்களுக்கான சில சிகை அலங்காரங்களை பார்க்கலாம்.

1. பாதி மேலே பாதி கீழே

இது அடர்த்தியான முடி கொண்ட பெண்களுக்கு சிறப்பான தோற்றத்தை கொடுக்கும். அடர்த்தியான முடியை இந்த முறையில் பிரிப்பது அழகான தோற்றத்தை ஏற்படுத்தும். உங்கள் முடி அடர்த்தியாக இல்லாவிட்டாலும், குறைவான முடியில் பாதியாக பிரித்து முன் பக்கம் பஃப் வைத்து முடியை தோள்பட்டையில் படும் படி விடுவது மாறுபட்ட தோற்றத்தை கொடுக்கும். உங்களது நெற்றி மேலேறியதாக இருந்தால், சிறிது முடியை நெற்றியின் மீது விட்டால், நல்ல தோற்றத்தை கொடுக்கும்.

2. ஒரு பக்க பின்னல்

இந்த சிகை அலங்காரம் கலிபோர்னியா பெண் தோற்றத்தின் நீட்டிப்பு ஆகும். பக்க பின்னல் மீண்டும் நம்பமுடியாத அளவிற்கு எளிதானது. உங்கள் இடது கை பக்க ஓரத்தில் பின்ன துவங்கி பின்புறத்தில் முடிக்க வேண்டும். வலது கை பக்கத்தில் இருக்கும் முடியை அப்படியே விட்டு விட வேண்டும். இந்த சிகை அலங்காரம் அலைபாயும் மற்றும் நேர்த்தியான முடி உடைய பெண்களுக்கு மிக அற்புதமான தோற்றத்தை தருகிறது.

3. நேர் வகிடு

இது முடி நேராக நிற்கிறது என்றதும் சலிப்பை ஏற்படுத்தக்கூடிய  பெண்களுக்கானது. அது முற்றிலும் சாத்தியமில்லாத உண்மை. இந்த தோற்றம் முறையான மற்றும் முறைசாரா நிகழ்வுக்கு சரியானது மற்றும் இந்த பட்டியலில் மீண்டும் உருவாக்க எளிதான சிகை அலங்காரங்களிலும் ஒன்றாகும். உங்களுக்கு தேவைப்படுவது தலை முடியை சரியாக இரண்டாக பிரிக்க பெரிய பல் கொண்ட சீப்பு மற்றும் சரியாக பிரித்த முடி கலையாமல் இருக்க பயன்படுத்த கூடிய ஹேர் ஸ்பிரே மட்டுமே.

4. பிரஞ்சு பின்னல்

சாதாரண பின்னல் சலிப்பை ஏற்படுத்தும் போது இது ஒரு மாற்றுவழி ஆகும். நீங்கள் உங்கள் தலைமுடியை ஒரு மெல்லிய தோற்றத்துடன் பின்னி முடிக்க முடிந்தால், உங்கள் தலைமுடியின் பின்னணியில் சரியாகப் பொருந்தி இருக்கும் அல்லது அடர்த்தியான முடி கொண்ட பெண்களுக்கு தடிமனான தோற்றத்தை ஏற்படுத்தும். நேர்த்தியான தோற்றத்தை மிக சாதாரணமாக அணிந்து கொள்ளலாம். பிரஞ்சு பின்னல் சாதாரண உடைகள் அணியும் போதும் நல்ல தோற்றத்தை தரும்.

5. ஒரு பக்கமாக பறக்க விடுதல்

இது நீங்கள் கற்பனை செய்வதை விட எளிதானது. இந்த சிகை அலங்கார அமைப்பு, உட்புற முடியை வெளிபுறமும், வெளிப்புற முடியை உட்புறமாகவும் கொண்டு வந்து விடும். நுனி முடியை மட்டும் சற்று உலர்த்தி, முன்புற சுருள் முடியை எடுத்து விட்டால் நேர்த்தியான தோற்றத்தை தரும்.

6. பிக்ஸி

சிறிய முகம் கொண்ட பெண்களுக்கு நல்ல தோற்றத்தை தரும். நீங்கள் நீண்ட முடியுடன் இருக்கும் போது, கோடைக்காலத்தில் அதிக சூடாகவும், வியர்வையுடனும் அவதிப்பட்டால், இந்த சிகை அலங்காரம் நல்ல பலனை தரும்.

இது பெண்களுக்கான குறைந்த பராமரிப்பு கொண்ட சிகை அலங்காரங்களில் ஒன்றாகும். இந்த சிகையலங்காரமானது தடிமனான முடி கொண்ட பெண்களுக்கு கூட நல்ல தோற்றத்தை தருகிறது.

7. உயர் குதிரைவால்

இது சலிப்பை ஏற்படுத்தும் குதிரைவாலின் தவறான கருத்துக்களை அகற்ற மற்றொரு புதுமையான பாணி. இதை உடற்பயிற்சி நிலையங்கள் மற்றும் வியர்வையை ஏற்படுத்த கூடிய இடங்களில் நல்ல பலனை தரும். முகத்தில் முடி விழாமல் இருக்க விரும்புபவர்களுக்கு ஏற்ற ஒன்று.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

Recently, we launched a baby-safe, natural and toxin-free floor cleaner. Recommended by moms and doctors all over India, this floor-cleaner liquid gets rid of germs and stains without adding harmful toxins to the floor. Click here to buy it and let us know if you liked it.

Stay tuned for our future product launches - we plan to launch a range of homecare products that will keep your little explorer healthy, safe and happy!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon