Link copied!
Sign in / Sign up
6
Shares

செட்டிநாடு பொங்கல் செய்வது எப்படி?

பொங்கல் என்றாலே அனைவருக்கும் விருப்பமான ஒன்று தான். தை பொங்கல் அன்று செய்யும் பொங்கல் அனைவரின் மகிழ்ச்சியையும் அழைத்து வரும். எந்த ஒரு உணவும் ஒருவர் செய்வது, மற்றவரிடமிருந்து வேறுபாடும். அவர்களின் செய்முறையானது அவர்களின் பிறந்த ஊர் மற்றும் வசிக்கும் ஊரை பொறுத்து மாறும். நல்ல காரசாரமான உணவிற்கு பெயர் போனது செட்டிநாடு சமையல் முறை. எதிலும் அவர்களின் சுவை சற்று மாறுபட்டிருக்கும். இங்கு செட்டிநாட்டு பொங்கல் செய்முறையை பார்க்கலாம்.

1 பொங்கல் சாதம்

தேவையான பொருட்கள்

பச்சரிசி - 250 கிராம்

தண்ணீர் - 500 மிலி

செய்முறை

1 முதலில் பச்சரிசியை தண்ணீர் சேர்த்து கழுவிக் கொள்ளவும்.

2 இரண்டாம் முறை கழுவ நாம் எடுத்து வைத்திருக்கும் நீரை பயன்படுத்தி கழுவி, அந்த நீரை பாத்திரத்தில் சேமிக்கவும்.

3 அதை வடிகட்டி பொங்கல் வைக்கும் பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க விடவும். பொங்கி வரும் போது, நெருப்பை குறைக்கவும். தண்ணீர் அதிகமாக இருப்பதாக தோன்றினால், சிறிது நீரை வேறு பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளவும்.

4 பின் அரிசியை சேர்த்து வேக வைக்கவும். தண்ணீர் தேவையானல் நாம் பாத்திரத்தில் எடுத்து வைத்திருக்கும் நீரை உபயோகிக்கவும்.

2 சர்க்கரைப் பொங்கல்

தேவையானவை

பச்சரிசி - 300 கிராம் (புதியது)

தண்ணீர் - 500 மிலி

வெல்லம் - 300 கிராம்

தேங்காய் - ¼ கப் (துருவியது)

முந்திரிப்பருப்பு, திராட்சை - 10

நெய் - 5 தேக்கரண்டி

ஏலக்காய் - 2

செய்முறை

1 முதலில் பச்சரிசியை தண்ணீர் சேர்த்து கழுவிக் கொள்ளவும்.

2 இரண்டாம் முறை கழுவ நாம் எடுத்து வைத்திருக்கும் நீரை பயன்படுத்தி கழுவி, அந்த நீரை பாத்திரத்தில் சேமிக்கவும்.

3 அதை வடிகட்டி பொங்கல் வைக்கும் பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க விடவும். பொங்கி வரும் போது, நெருப்பை குறைக்கவும். தண்ணீர் அதிகமாக இருப்பதாக தோன்றினால், சிறிது நீரை வேறு பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளவும்.

4 பின் அரிசியை சேர்த்து வேக வைக்கவும். பின், நன்றாக தட்டிய வெல்லத்தை சேர்த்து கிளறி, வெல்லம் கரையும் வரை வேகவிடவும்.

5 முந்திரி மற்றும் திராட்சையை நெய்யில் வறுத்து பொங்கலில் சேர்க்கவும். பின் அதனுடன் தேங்காய் துருவலையும் சேர்த்து கிளறி இறக்கவும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon