Link copied!
Sign in / Sign up
1
Shares

பொது இடங்களில் பாதுகாப்பது எப்படி? குழந்தைகளுக்கு கட்டாயம் சொல்லி தர வேண்டிய விஷயங்கள்!

பாதுகாப்பின்மை என்பது புதிதாய் தோன்றிய சமுதாயப் பிரச்சனை அல்ல; எல்லா காலங்களிலும் இப்பாதிப்பு இருந்து வந்தது. பின் ஊடகங்களின் (Media) எண்ணிக்கை அதிகரித்ததினால் சமுதாயத்தில் நடக்கும் அநியாயங்களும் கொடுமைகளும் வெளியே வர தொடங்கின. 

மழலைப் பருவத்தில் விளையாட்டைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் குழந்தைகளுக்கு நல்லது எது? கெட்டது எது ? என பகுத்தறியும் திறன் கிடையாது. குழந்தைகள் அந்நியர்களிடம் அவர்கள் நல்லவரா கெட்டவரா ..? என்று தெரியாமல் தான் பழகுவர்.

சமீபத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஜம்மு காஷ்மீரில் ( Jammu & Kashmir) உள்ள கத்துவா என்னும் கிராமத்தில் எட்டு வயது சிறுமியை கற்பழித்த சம்பவம் நாட்டை மற்றும் இன்றி உலகத்தையே உலுக்கியது. இச்சூழ்நிலையில் பெண் குழந்தைகளுக்கு மட்டுமே பாதுகாப்பு அவசியம் என்று எண்ண வேண்டாம்; பாதுகாப்பின்மை ஆண் குழந்தைகளுக்கும் தான்.

இந்தியாவில் ஒரு நாளைக்கு மட்டும் 290 குழந்தைகள் கற்பழிப்பு, கடத்தல், குழந்தை தொழில் என பல பெருங்குற்றங்களுக்கு தள்ளப்படுகிறார்கள். 2016 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி காணாமல் போன குழந்தைகளின் விகிதம் 11% ஆக உயர்ந்துள்ளது (இரண்டு வருடங்களில் மட்டும்). அதுவே கடந்த பத்து வருடங்களில் 500% ஆக உயர்ந்துள்ளது.

2016-1,06,958 ( காணாமல் போன குழந்தைகளின் எண்ணிக்கை ).

2015-94,172 ( காணாமல் போன குழந்தைகளின் எண்ணிக்கை ).

அதில் குழந்தை கடத்தல் 48.9% சதவீதமாகவும்; குழந்தை கற்பழிப்பு 18% சதவீதமாகவும் உள்ளது.அதிகமாக குற்றங்கள் நடக்கும் மாநிலங்களாக உத்தர பிரதேசம் (Uttar Pradesh) , மகாராஷ்டிரா(Maharashtra), மத்திய பிரதேசம் (Madhya Pradesh), டெல்லி(Delhi), மேற்கு வங்காளம்  (West Bengal) அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றங்களை எல்லாம் குறைப்பது எப்படி என கவலைக்கொள்வதைக்காட்டிலும் குழந்தைகளுக்கு வளரும் போதே தற்காப்பு கலைகளை சொல்லி தருவதனால் இந்த அவலநிலையை தடுக்க முடியும். அதை பற்றி என்னுடன் சேர்ந்து படித்து நீங்களும் தெரிந்துக்கொள்ளலாமே!

தற்காப்பு கலைகள்:

எந்த ஒரு குழந்தைகளுக்கும் பெரியவர்களை எதிர்த்து போராடும் திறன் கிடையாது. ஆனால், அவர்கள் அவ்வப்போது சூழ்நிலைகளில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள இத்தற்காப்பு கலை நிச்சயம் உதவும்.

உலகமெங்கும் பயன்படுத்தும் தற்காப்பு கலைகள் .

1. சிலம்பம்:

1000 ஆண்டு காலமாக தமிழர்களின் வீர விளையாட்டாக சிலம்பம் இருந்துள்ளது. மூங்கில் மரங்களைக் கொண்டு செய்த இந்த குச்சியின் சண்டையிடும் போது வரும் ஓசையை கொண்டு இந்த பெயர் வந்துள்ளது.இது ஒரு சிறந்த தற்காப்புக் கலையாகத் திகழ்கிறது.

2. மல் யுத்தம்:

மல் யுத்தத்தை குஸ்தி என்றும் கூறுவர். இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் வசிக்கும் மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு குஸ்தி பயில அனுப்புவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் இது முகலாய சாம்பிராஜ்யத்தில் மருவிய தற்காப்பு கலையாகும்.

3. குத்துச்சண்டை:

உலகமெங்கும் அதிக அளவில் கற்றுக்கொண்டு வரப்படும் ஒரு கலையாகும். ஜப்பான் நாட்டு மார்ஷியல் ஆர்ட்ஸ்ஸின் கலப்படமாக திகழப்படுகிறது. ஜப்பான் நாட்டில் கண்டுபிடிக்கப்பட, பத்தே வருடங்களில் அமெரிக்காவில் அதிக அளவில் கற்றுக்கொள்ளப்பட்டது.

4. கராத்தே:

மிக அதிகமான குழந்தைகளால் கற்றுக்கொண்டு வரப்படும் ஒரு தற்காப்பு கலையாகும். கராத்தே Ryukyu சாம்ராஜ்ஜியத்தில் சீனாவில் தோன்றிய இக்கலை, ஜப்பான் நாட்டில் பயன்படுத்தப்பட்டு பின் அதிக அளவில் உலகமெங்கும் கற்பிக்கப்படுகிறது. இக்கலையை kung fu என்றும் கூறுவர்.

5. டேக்ஒன்டு:

கொரியா (Korea) நாட்டில் உருவான இக்கலை பல்வேறு பெருங் கலைஞர்களால் பயன்படுத்தி வரப்படுகிறது. இந்தியாவில் வளர்ந்து வரும் கலைகளில் இது முக்கியமான ஒன்று.

தற்காப்பு கலை பயில்வதினால் பாதுகாப்பு இன்றி வேறு சில நன்மைகளும் உள்ளன. இக்காலத்து குழந்தைகளுக்கு மன அழுத்தம் அதிகம் இருப்பதினால் அதிலிருந்து பாதுகாப்பு பெறலாம். விளையாட்டை மறந்த குழந்தைகளின் உடம்பும் மூளையும் சுறுசுறுப்படையும்.. மன தைரியம் கிடைக்கும் .

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon