Link copied!
Sign in / Sign up
6
Shares

செலவில்லாமல் உடல் எடையை குறைக்க வேண்டுமா??

இந்த நவீன வாழ்க்கையில், உணவு முறை மாற்றத்தால் கண்ட உணவுகளை உண்டு உங்கள் உடலின் எடை மிகவும் அதிகமாகி வருகிறது. BMI எனும் உடற்குறியீட்டு எண் பெரும்பாலான மக்களுக்கு எல்லை மீறியே இருக்கிறது. அதை கட்டுக்குள் வைக்க மக்கள் பல வழிகளில் முயற்சிக்கின்றனர்; தங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் உடல் எடை குறைப்பில் ஈடுபடுத்துகின்றனர். இவ்வளவு கஷ்டப்படாமல், சிறிய முயற்சியில், பணம் செலவிடாமல் எப்படி உடல் எடையைக் குறைக்கலாம் என இங்கு படித்தறிவோம்..!

பூண்டு

 பூண்டுக்கு மிஞ்சிய மருந்தில்லை என்பர்; 5-8 பூண்டு பற்களை நன்கு வேகவைத்து பாலில் கலந்து, காலை, மாலை என இருவேளைகளிலும் குடித்தால், உடலிலுள்ள கெட்ட கொழுப்பு குறைந்துவிடும்.

அதிமதுரம்

தித்திப்பு குச்சி எனப்படும் அதிமதுரம் மற்றும் சீரகத்தை சமஅளவு எடுத்து நன்றாக இடித்துக் கொள்ளவும்; இதில் 4 மடங்கு நீர் விட்டு கொதிக்க வைக்கவும்; அது ஒரே ஒரு பங்காக சுண்டியவுடன், அந்நீரை வடிகட்டி காலை, மாலை என இருவேளைகளிலும் தேநீருக்கு பதிலாக அருந்தலாம்.

சீரகம் 

மேலும் 1 லிட்டர் தண்ணீருடன் 20 கிராம் சீரகத்தை கலந்து நன்றாக கொதிக்க வைக்கவும்; இதை நீருக்குப் பதிலாக பயன்படுத்தினால் உடலில் உள்ள கெட்டக்கொழுப்பு நீங்கிவிடும். 

செம்பருத்தி,ரோஜா இதழ்கள்

செம்பருத்தி பூ இதழ்களை கொஞ்சம் எடுத்து உலர்த்தி, 200 மில்லி நீரில் சேர்த்து கொதிக்க வைக்கவும்; நன்கு கொதித்து 50 மில்லியாக நன்கு சுண்டியதும் இறக்கி வைத்து, தினமும் பருகி வரவும்; இதே போல் ரோஜா இதழ்களையும் நீங்கள் பயன்படுத்தலாம்; நல்ல பலன் கிடைக்கும்.

இஞ்சி–ஏலக்காய்

இஞ்சியின் மேல் தோலை சீவி, ஏலக்காய் சிறிது சேர்த்து நன்றாக இடித்துக் கொள்ளவும்; இதில் 200 மில்லி நீர் சேர்த்து கொதிக்க வைத்து 50 மில்லியாக நன்கு சுண்டியதும் இறக்கி வைத்து, தினம் குடிக்கவும்.

சோற்றுக் கற்றாழை

சோற்றுக் கற்றாழையின் மேல் தோலினை சீவி, உள்ளே இருக்கும் ஜெல்லை, வெளியில் எடுத்து 7 முறை கழுவவும்; தினமும் காலை, கற்றாழை ஜெல்லை ஒரு  எலுமிச்சை அளவு எடுத்து, வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், உடற்சூட்டுடன், கொழுப்பும் குறையும்!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon