Link copied!
Sign in / Sign up
0
Shares

செய்தித்தாள் படிக்க மட்டும் தானா?

வீட்டை அழகாக்குவது., நம் குழந்தைகளின் புகைப்படம் தான். வயது வாரியாக புகைப்படம் எடுத்து அதை டிவி, ஸ்டெபிலைஸர், டிவிடி, திண்ணை என பல இடங்களில் வைத்து அழகு பார்ப்பது அன்னையின் ஸ்பெஷல். அதுவும், ஒரு சில வீட்டில் கணவன்மார்களின் வெளிக்கவலைகளை மறக்க குழந்தைகளின் போட்டோ உதவுகிறது என்பது உண்மை தானே. அட ஆமாங்க, வெளியில் எவ்வளவு டென்ஷன் இருந்தாலும் குழந்தையின் சிரிக்கும் முகம் கண்டு மலரும் கணவனின் முகமும் நம் நாட்டில் உண்டு. 

அதனால், எப்போதும் போட்டோவை தேர்வு செய்யும் நீங்கள், குழந்தைகள் சிரிப்பது போன்ற போட்டோக்களை திண்ணையில் மாட்டுவது மிக சிறந்த யோசனை. இந்த உலகத்தில் எல்லாத்துக்குமே பேரம் பேசும் நாம், குழந்தையின் போட்டோவை பிரேம் பண்ண மட்டும் கடைக்காரனிடம் பேரம் பேச ஆசைப்படுவதில்லை. அதற்கு காரணம், எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை... என் வீட்டு இளவரசன்/இளவரசியின் போட்டோ நன்றாக வந்தால் போதுமென்னும் மன நிலைதான்.

ஒருவேளை இந்த போட்டோ பிரேமை உங்கள் கையாலே செய்து வீட்டில் வைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? அதற்கான வழிமுறைகளை இதோ நாங்கள் தருகிறோம். நீங்களும் முயன்று பாருங்களேன்.

தேவையான பொருட்கள்:

பழைய செய்தித்தாள் - பெரிய பக்கம் (தேவைக்கேற்ப)

பேனா ரீபில் (தாளை சுருட்ட)

கோந்து பசை 

நீல நிற அட்டை (நடுவில் வைக்க)

#1

ஒரு பழைய செய்தித்தாளின் பெரிய பக்கத்தை எடுத்துக்கொண்டு இரண்டாக வெட்டிக்கொள்ளுங்கள். பின்னர், பேனா ரீபில் கொண்டு ட்யூப் வடிவத்தில் அந்த செய்தித்தாளை சுருட்டி கொள்ளுங்கள்.

அந்த செய்தித்தாளின் இறுதியில் கோந்து பசை கொண்டு ஒட்டிக்கொள்ள வேண்டும். இல்லையேல், அது பிரிந்து விடும்.

#2

அதேபோல் ஐந்து ரோல்களை தயார்செய்துக்கொண்டு, அந்த ஐந்து ரோலை சேர்த்து ஒட்டிக்கொள்ள வேண்டும்.

#3

ஒவ்வொரு பக்கத்திற்கும் ஐந்து என, அதாவது மொத்தமாக இருபது ரோல்களை தயார் செய்துக்கொள்ளுங்கள்.

#4

முதல் இரண்டு ரோல்களை வடக்கில் ஒன்றும், தெற்கில் ஒன்றுமாக வைத்திடுங்கள். அதன் மேலே இரண்டு ரோல்களை கிழக்கில் ஒன்றும், மேற்கில் ஒன்றுமாக வைத்துக்கொள்ளுங்கள். (போட்டோ வைக்கும் இடைவெளி நடுவில் தேவை)

#5

போட்டோ பிரேமின் உள் அளவு அகலமானது 17 சென்டிமீட்டரும், உயரம் 14 சென்டிமீட்டரும் இருக்க வேண்டும்.

#6

வெளி அளவு ஒவ்வொரு பக்கமும் 5 சென்டிமீட்டர் சமமாக இருக்க வேண்டும். அதிகமாக இருந்தால் சமமாக வெட்டிக்கொள்ளுங்கள்.

#7

இப்போது ரோல்களை பிரேம் வடிவத்தில் வரிசைப்படுத்த வேண்டும்.

முதலில் மேற்கு மற்றும் கிழக்கு புறத்தில் இருக்கும் ரோல்களை செங்குத்தான முறையில் வைத்துக்கொள்ளுங்கள்.

மேற்கில் இருப்பது கொஞ்சம் மேலாகவும், கிழக்கில் இருப்பது கொஞ்சம் கீழாகவும் போட்டோ வைக்கும் தொலைவில் தள்ளி இருக்க வேண்டும்.

பின்னர் வடக்கு மற்றும் தெற்கு புறங்களில் இருக்கும் ஒட்டிய ரோல்களை படுக்கை வடிவத்தில் வைக்க வேண்டும்.

வடக்கில் இருப்பது கீழ் தள்ளியும், தெற்கில் இருப்பது கொஞ்சம் மேலாகவும் இருத்தல் வேண்டும்.

அதாவது நான்கு புறங்களை பார்த்தால் 'L' வடிவத்தில் இருக்கும்.

#8

இறுதியாக, நடுவில் நீல நிற அட்டையை ஓட்ட வேண்டும். அது தான் நீங்கள் போட்டோ வைக்க வேண்டிய இடமாகும்.

பிரேமின் ஒவ்வொரு மூலையிலும் நான்கு வடிவமைத்த ரோஜாக்கள் வைப்பது பார்க்க இன்னும் அழகை சேர்த்து தரும்.

இதோ உங்கள் வீட்டின் குட்டி இளவரசன்/இளவரசி போட்டோ வைப்பதற்கான பிரேம் தயார். 

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

Recently, we launched a baby-safe, natural and toxin-free floor cleaner. Recommended by moms and doctors all over India, this floor-cleaner liquid gets rid of germs and stains without adding harmful toxins to the floor. Click here to buy it and let us know if you liked it.

Stay tuned for our future product launches - we plan to launch a range of homecare products that will keep your little explorer healthy, safe and happy!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon