Link copied!
Sign in / Sign up
19
Shares

இரண்டாவது குழந்தைக்கு திட்டமிடும் முன் கவனத்தில் கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்

உங்கள் குழந்தை ஒருவராய் இருப்பதை நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா? அல்லது உங்கள் இரண்டாவது குழந்தையை எண்ணி கனவு காண்கிறீர்களா? பலருக்கு குடும்பம் என்பது குழந்தைகளுடன் இருப்பதே. ஆனால், பலருக்கு அது கனவாகவே இருந்துவிடுகிறது. இரண்டாவது குழந்தையை பெறுவது எளிதான ஒன்றா? உங்கள் சூழ்நிலையில் இருந்து உங்கள் முடிவு சரியானதுதானா?

நாம் அனைவரும் குடும்பத்தின் முக்கியத்துவத்தை அறிந்திருப்போம். ஒவ்வொருவருக்கும் குடும்பத்தின் அர்த்தம் என்பது மாறுபட்டிருக்கும். நீங்கள் உடன்பிறந்தவர்களுடன் வேடிக்கையான மற்றும் மகிழ்ச்சியான நிகழ்வுகளுடன் வளர்ந்திருக்கலாம். நீங்கள் உங்கள் முதல் குழந்தைக்கு அதை பரிசளிக்க விரும்பினால், அது இயற்கையானது தான். இருப்பினும், உங்கள் அடுத்த குழந்தையை பற்றி நீங்கள் திட்டமிட்டிருந்தால், உங்கள் கருத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

நீங்கள் உங்கள் இரண்டாவது குழந்தையை பெற தயார் என்றால், நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களை பார்ப்போம்.

1. நிதி நிலைமை

உங்கள் இருவராலும் வீட்டின் நிதி நிலைமையை சமாளிக்க முடியுமா? உங்கள் முதல் குழந்தையை கவனித்து கொள்ள போதுமான வேலையை செய்ய வேண்டியுள்ளதா? அல்லது இப்போது நீங்கள் உங்கள் வேலையில் மீண்டும் சேர்ந்துவிட்டீர்களா மற்றும் உங்கள் குழந்தை மற்றவர்களை சார்ந்து இருக்க துவங்கிவிட்டதா? அவற்றை பற்றி நீங்கள் மீண்டும் சிந்திக்க வேண்டும்.

இன்றைய சூழலில் குழந்தையை வளர்ப்பது எளிதான ஒன்றல்ல. குழந்தையை வளர்ப்பதற்கு நிறைய பணம் தேவைப்படும். நாங்கள் விளையாட்டிற்கு சொல்லவில்லை, நீங்கள் முதல் குழந்தையை வளர்ப்பதால் உங்களுக்கே அது நன்றாக புரிந்திருக்கும். குழந்தைகளுக்கு தேவையான பொருட்களில் துவங்கி, அவர்களின் பள்ளி கட்டணம் என அனைத்திற்கும் பணம் அவசியமாகிறது. இரண்டு குழந்தைகளை வளர்ப்பது அவ்வளவு எளிதான ஒன்றல்ல. ஒரு முறைக்கு இருமுறை யோசிப்பது சிறந்தது.

21 ஆம் நூற்றாண்டில் நீங்கள் விரும்பும் வாழ்க்கைத்திறன் கொண்ட குழந்தைகளை உருவாக்குவது மிகவும் கடினம். உங்கள் முடிவுக்கு முற்றிலும் உறுதியாக இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். இதனாலேயே, பெரும்பாலான பெற்றோர்கள் ஒரு குழந்தை போதுமென தீர்மானிக்கிறார்கள்.

உங்கள் குடும்பத்தின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் போது, நிதி நிலைமை போதுமானதாக இருக்கும். சில நேரங்களில் இது போதுமானதாகவும் இருக்கும்.

2. முதல் பிரசவத்தில் சிரமங்கள் இருந்திருந்தால்

பிரசவம் என்பது அனைவருக்கும் மென்மையான ஒன்றல்ல. சில பெண்களுக்கு மருத்துவரீதியாக சில சிக்கல்கள் இருக்கும் கட்டமாகும். நீங்கள் முதல் முறை கடினமான பிரசவத்தை சந்தித்திருந்தால், உங்கள் மகப்பேறு மருத்துவரை உங்கள் தொடர்பு எல்லைக்குள் வைத்திருங்கள். உங்கள் உடல் மற்றொரு குழந்தையை தாங்குவதற்கு ஏற்றதாக இருக்கிறதா என மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்.

30 வயதில் நீங்கள் முதல் குழந்தையை பெற்றிருந்தால், இப்போது உங்களுக்கு அதை விட வயது அதிகமாகி இருக்கும். பாதுகாப்பற்ற பிரசவத்தால் ஏற்படும் ஆபத்துகளை தவிர்க்க, கட்டாயம் பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும். பெண்களின் வயதிற்கு ஏற்ப பிரசவத்தில் சிக்கல்கள் ஏற்படும்.

நீங்கள் 20 முதல் 30 வயதை கடந்து செல்லும் போது கருச்சிதைவுகள் மற்றும் பிற சிக்கல்களுக்கான வாய்ப்புகள் அதிகம். இது அனைத்து சந்தர்ப்பங்களிலும் உண்மையாகாமல் இருக்கலாம். ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் காணப்படுகின்றது. கவனமாக இருக்கவும்.

3. கடுமையான வேலை சுமை

நீங்கள் வேலைக்கு செல்லும் அம்மாவாக இருக்கும் போது, உங்கள் முதல் குழந்தையை கவனித்து கொள்வது கடினமான ஒன்றாக இருக்கலாம். அந்த சமயத்தில் இரண்டாவது குழந்தையை பற்றிய சிந்தனையை நிலுவையில் வைப்பது சிறந்தது. நீங்கள் அலுவலக வேலை மற்றும் வீட்டு வேலை செய்வதோடு முதல் குழந்தையின் மீது கவனம் செலுத்த வேண்டிய நிலையில் இருப்பீர்கள். 

உங்களிடம் பலவற்றை எதிர்பார்க்கலாம். அப்போது உங்கள் இரண்டாவது குழந்தையை பற்றிய யோசனையை தவிர்க்கவும்.

எனவே, சிந்திக்க நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் முன்னுரிமைகளை வரிசைப்படுத்துங்கள், உங்கள் இருவராலும், இப்போது மற்றொரு குழந்தையை வளர்க்க முடிந்தால், அதைச் செய்யுங்கள். உங்களுக்கு இரண்டாவது குழந்தை வேண்டும் எனில், அதற்கு ஏற்றபடி திட்டமிடுங்கள்.

4. முதல் குழந்தைக்கு சிறப்பு தேவைகள் இருந்தால்?

உங்கள் முதல் குழந்தை ஒரு சிறப்பு குழந்தை அல்லது மெதுவாக கற்றல் வேகத்தில் இருக்க கூடிய குழந்தையாக இருந்தால், நீங்கள் இரண்டாவது குழந்தைக்கு திட்டமிடுவதை தாமதப்படுத்தலாம். குடும்பத்தின் அளவை அதிகரிக்க விரும்பும், உங்கள் உற்சாகத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஆனால், இது உங்கள் முதல் குழந்தையின் தேவைகளை அலட்சியம் செய்வதை போலாகிவிடும். சிறப்பு குழந்தைகளுக்கு அதிக கவனமும் பொறுமையும் தேவை, அதை நீங்கள் சமரசம் செய்யக்கூடாது.

உங்கள் குடும்பத்தின் அளவை அதிகரிக்கும் ஆசையில், உங்கள் முதல் குழந்தையை புறக்கணித்துவிடாதீர்கள்.

5. உங்களுக்கு உண்மையில் மற்றொரு குழந்தை வேண்டுமா?

சமுதாயத்தின் எதிர்பார்ப்பிற்காக நாம் மற்றொரு குழந்தை வேண்டும் என்கிற நிலைக்கு தள்ளப்படுகிறோம். முதல் குழந்தைக்கு ஒரு துணை தேவை என்பதற்காகவும், வயதான காலத்தின் ஆதரவிற்காகவும் என பல காரணங்களுக்காக பெற்றோர் அல்லது மாமனார் மற்றும் மாமியாரின் தூண்டுதலாலும், இரண்டாவது குழந்தைக்கு திட்டமிடும் நிலைக்கு தள்ளப்படுகிறோம். ஆனால், உங்களுக்கு கட்டாயம் இரண்டாவது குழந்தை வேண்டுமா என சிந்தித்து முடிவெடுங்கள்.

உங்கள் முதல் குழந்தை மற்றும் கணவரோடு உங்கள் குடும்பம் நிறைவு பெறுவதாக தோன்றினால், இருப்பதை வைத்து மகிழ்ச்சியடையுங்கள். உங்கள் இரண்டாவது குழந்தைக்கு திட்டமிடும் போது, சிந்தித்து முடிவு செய்யுங்கள்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon