Link copied!
Sign in / Sign up
30
Shares

சத்தான சத்துமாவு கஞ்சி

பல பெற்றோர்களின் கவலைப்படும் விஷயம், குழந்தைகள் கடைகளில் கிடைக்கும் சத்து பானங்களை குடிப்பதில்லை என்பது தான். அப்படி குடிக்காத குழந்தைகளின் பெற்றோர்கள் உண்மையில் மகிழ்ச்சி அடைய வேண்டும். நீங்கள் உங்கள் குழந்தைக்கு கொடுத்தால், நீங்கள் அதற்காக கட்டாயம் வருந்த வேண்டும். நாங்கள் ஏன் வருந்த வேண்டும், எங்கள் குழந்தைக்கு சத்தானதை தானே நாங்கள் கொடுக்கிறோம் என்றால், இல்லை நிச்சயம் இல்லை. எண்ணெய் எடுத்த பின், கடலை பருப்பில் மிஞ்சி இருக்கும் சக்கைகளைக் கொண்டுதான், நீங்கள் வாங்கும் சத்து பானங்கள் தயாரிக்கப்படுகின்றன. அனைத்தும் எடுத்த சக்கையில் என்ன மிச்சம் இருக்க போகிறது. இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள், வீணாய் குப்பையில் எரிய வேண்டியதை விலை கொடுத்து வாங்கி, உங்கள் குழந்தைக்கு கொடுக்குறீர்கள் என்பதை. அதற்கு என்ன செய்வது என்றால், வீட்டிலேயே இயற்கை முறையில் தயாரியுங்கள். அது எப்படி என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள் : (100 கிராமிற்கு)

கோதுமை, மக்கா சோளம் மற்றும் கம்பு மாவு கலவை - 52 கிராம்

மூளை கட்டிய கேழ்வரகு மாவு   - 5 கிராம்

கடலை மாவு - 12 கிராம்

வேர்க்கடலை மற்றும் பொட்டுக்கடலை வறுத்து பொடித்த மாவு - 10 கிராம்

வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை - 30 கிராம்

செய்முறை :

கோதுமை, மக்கா சோளம் மற்றும் கம்பு மாவு, மூளை கட்டிய கேழ்வரகு மாவு, கடலை மாவு, வேர்க்கடலை மற்றும் பொட்டுக்கடலை மாவு ஆகியவற்றை மேற்சொன்ன அளவில் கலந்து கட்டி இல்லாமல் சலித்து, அதனுடன் வெல்லம் சேர்த்து கொள்ளவும். பின் இந்த கலவையை ஒரு கப் தண்ணீரில் இட்டு, கொதிக்க வைத்தால் சுவையான சத்து மாவு கஞ்சி ரெடி. கொதிக்க வைக்கப்பட்ட இந்த கலவையை பாலுடன் கலந்தும் குழந்தைக்கு கொடுக்கலாம். சிறிது கெட்டி பதத்திற்கு தயாரித்து, குழந்தைகளுக்கு ஊட்டவும் செய்யலாம். இந்த மாவை நன்கு வறுத்து எடுத்து, கொஞ்சம் வளர்ந்த குழந்தைகளுக்கு பாலில் நேரடியாக கலந்தும் கொடுக்கலாம்.

மிஞ்சிய சக்கைகளை குழந்தைகளுக்கு கொடுப்பதை விட, இயற்கையான முறையில் தயாரித்து குழந்தைகளுக்கு சத்தான ஒன்றை கொடுப்போம்! 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon