Link copied!
Sign in / Sign up
31
Shares

சருமத்தின் நிறத்தை அதிகரிக்க 6 வழிகள்

பெரும்பாலான பெண்கள், தங்கள் சருமம் கூடுதல் நிறத்துடனும், ஒளிரும் தன்மையுடனும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். இது அவர்களுக்கு தன்னம்பிக்கையை கொடுப்பது மட்டுமல்லாது, எந்த ஒப்பனையும் இல்லாமல், இயற்கையாகவே அவர்களை அழகாக காட்டும். ஆனால், முகப்பருக்கள், பருக்கள், காயத்தினால் உண்டான தழும்புகள், உடலில் போதிய நீர்சத்து இல்லாமை, ஹார்மோன் மாற்றங்கள், சூரிய ஒளி, மன அழுத்தம், போன்றவை உங்களின்  சருமத்தின் நிறத்தை மழுங்கடித்துவிடும். இதனால் உங்கள் முகம் வாடிப் போய் காணப்படும். 

என்ன தான், உங்கள் சருமத்தின் நிறத்தை அதிகரிக்க பல சிகிச்சைகளும், கிரீம்களும் இருந்தாலும், அவற்றில் இரசாயனங்கள் இருப்பதால் அவை உங்கள் சருமத்தை பாதிக்க கூடும். கவலைப்படாதீர்கள், உங்கள் வீட்டிலேயே உங்கள் சருமத்தின் நிறத்தை கூட்டும் பொருட்கள் உள்ளன. அவற்றில் சிறந்த 6 பொருட்களை இங்கே கொடுத்துள்ளோம்.

1 எலுமிச்சை சாறு

எலுமிச்சையில் வைட்டமின் C மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ் அதிகளவில் இருப்பதால், சுற்றுசூழல் மாசுக்களால் ஏற்படும் பாதிப்பிலிருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்கும். இதன் காரணமாகவே பல அழகு சாதன கிரீம்களில் எலுமிச்சையை பயன்படுத்துகிறார்கள். எலுமிச்சைக்கு இயற்கையாகவே உங்கள் சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும் திறன் உண்டு. எனவே, இதை தினமும் பயன்படுத்தினால், உங்கள் சருமத்தின் நிறத்தை அதிகரிப்பதோடு, கரும்புள்ளிகளையும் அகற்றுகிறது. கரும்புள்ளிகள் இல்லாத மென்மையான சருமத்தை பெற எலுமிச்சையை பயன்படுத்துங்கள்.

2 சமையல் சோடா

நம் வீட்டு சமையல் அறையில் எளிதாக கிடைக்கும் இந்த பொருள், சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கும் தன்மை கொண்டது. மேலும், இதில் சீரான அளவிலேயே pH இருப்பதால், இது சருமத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துவதில்லை. வடுக்கள் அல்லது சருமம் கறுத்து, வறண்டு இருந்தால், சமையல் சோடா அதை நீக்குகிறது. இதனால் புதிய செல்கள் உருவாகி, சருமத்தை பொலிவாக்குகிறது.

3 உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு எப்போதும் நம் வீட்டில் இருக்கும் ஒரு காய்கறி. மேலும், சருமத்தில் ஏற்படும் பாதிப்புகள், கரும்புள்ளிகள் ஆகியவற்றை சரி செய்யும் திறன் உருளைக்கிழங்கிற்கு உள்ளது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. உருளைக்கிழங்கில், சருமத்தை மேம்படுத்தும் சத்துக்களான பொட்டாசியம், வைட்டமின் B6 மற்றும் வைட்டமின் C ஆகியவை நிறைந்துள்ளன. மேலும், உருளைக்கிழங்கு சாறில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ் இருப்பதால், இது சருமத்தில் உள்ள சேதமடைந்த செல்களை குணப்படுத்தும். இதை தினமும் பயன்படுத்தினால், முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மற்றும் நிறமாற்றத்தை சரிசெய்யும்.

4 தக்காளி

நம் வீட்டு சமையல் அறையில் கிடைக்கும் மற்றுமொரு பொருள் தக்காளி. தக்காளி, ஆரோக்கியமான இளமையான, மென்மையான சருமத்தை பெற உதவுகிறது. இதில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ், ஆஸ்ட்ரின்ஜெண்ட்ஸ் மற்றும் சருமத்தை பொலிவாக்கும் திறன் அதிகளவில் உள்ளது. இது கரும்புள்ளிகளை அகற்றுவதோடு, முகத்தை பொலிவாக்கி, கூடுதல் சிகப்பழகையும் தருகிறது.

5 பப்பாளி

இது உங்கள் சருமத்திற்கு கூடுதல் சிகப்பழகை தரும். பப்பாளியில் அதிகளவு வைட்டமின் A, C, E மற்றும் இயற்கை ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ்களான பீட்டா கரோட்டின் மற்றும் லிகோபீன் உள்ளது. இவை உங்கள் சருமத்தில் உள்ள கறைகள், பருக்கள், இறந்த செல்களை நீக்க உதவுகிறது. மேலும், பப்பைன் என்னும் AHA என்சைம் உங்கள் சருமத்தை மென்மையாக்கி, கூடுதல் சிகப்பழகை தருகிறது.

6 மஞ்சள்

மென்மையான சருமத்தை பெற மஞ்சள் உதவுகிறது. இதில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மை இருப்பதால் இது சருமத்தில் ஏற்படும் வீக்கத்தை குறைத்து, சருமத்தின் நிறத்தை அதிகரிக்கிறது. மேலும், இது முகப்பருக்களை சரி செய்கிறது. மஞ்சளை தொடர்ந்து பயன்படுத்தினால் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் கறைகளை இது அகற்றும்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon