Link copied!
Sign in / Sign up
4
Shares

சரும முதிர்ச்சிக்கு காரணமாகும் 9 செயல்கள்

அழகு என்பது அனைவர்க்கும் பிடித்த ஒன்று. அதற்கான பணம் செலவழித்து கண்டதை வாங்கி உபயோகிப்பவர்கள் இன்றைய காலகட்டத்தில் ஏராளம். சிலர் வயதானவர்களாக இருந்தாலும், பார்ப்பதற்கு இளமையாக இருப்பார்கள். சிலர் இளம் வயதிலேயே முதுமையாக காணப்படுவார்கள். உதாரணமாக, அம்மாவும், மகளும் வெளியில் செல்லும் போது, அம்மாவிற்கு தெரிந்த ஒருவர் மகளை பார்த்து உங்கள் சகோதரியா என்று கேட்பார். இங்கு அந்த அம்மா இளமையாக இருக்கிறாரா அல்லது அந்த பெண் அதிக வயதுடையவளாக தெரிகிறாளா? உணவு முறையில் நாம் மேற்கொள்ளும் சில மாற்றங்களே, சரும முதிர்ச்சி வழிவகுக்கிறது. இங்கு சரும முதிர்வை ஏற்படுத்தும் செயல்கள் பற்றி பார்க்கலாம்.

1 கொழுப்பு

உடல் எடை அதிகரிக்கும் என்று கொழுப்பே இல்லாமல் சாப்பிடுவது தவறு. ஹார்மோன் சுரப்பிற்கும் , உள்ளுறுப்புகளை பாதுகாக்கவும் மற்றும் சருமத்தை ஊட்டமாக வைக்கவும் கொழுப்பு மிகவும் அவசியமான ஒன்று. அதற்காக அளவிற்கு அதிகமாக கொழுப்பை எடுத்து கொண்டால் ஆபத்தை ஏற்படுத்தும். ஆனால், கொழுப்பை முழுமையாக தவிர்த்தால், சரும முதிர்ச்சிக்கு வித்திடும்.

2 இனிப்பு

அதிக இனிப்பை சாப்பிட்டால் உங்கள் வயதை அதிகரிக்கிறீர்கள் என்றே சொல்லலாம். இது சரும செல்களை பாதிக்கும் தன்மையுடையது. கண்களை சுற்றி வீக்கம், தளர்வான சருமம் ஆகியவற்றை ஏற்படுத்தும்.

3 குறைவான தூக்கம்

குறைந்தது 7-8 மணி நேரமாவது தூங்க வேண்டும். தூக்கத்தை குறைத்து வேலை செய்வது அல்லது பொழுதை கழிப்பது செல் வளர்ச்சியை பாதிக்கும். செல் இறப்பு அதிகம் உண்டாகும் போது முதுமையான தோற்றத்தை தோற்றுவிக்கும்.

4 ஸ்ட்ரா

பழச்சாறு அல்லது குளிர்பானங்கள் என எதை குடித்தாலும் ஸ்ட்ரா போட்டு உறிஞ்சி குடிப்பது தவறு. இது வாயை சுற்றிலும் அதிக சுருக்கத்தை உண்டாக்கும். புகைபிடிப்பது முதுமையை தோற்றுவிக்கும் முக்கிய காரணியாகும்.

5 அதிக அலங்காரம்

நமது சரும செல்களை சுவாசிக்க முடியாமல் எப்போதும் கண்ட களிம்புகளை பூசி இருந்தால் சருமம் விரைவில் முதிர்ச்சியடையும். சருமத்தில் சுரக்கும் இயற்கையான எண்ணெயை சுரக்கவிடாமல் தடுத்து சுருக்கங்களை ஏற்படுத்தும்.

6 சூரிய ஒளி

சூரிய ஒளியால் சருமம் பாதிப்படையும் என்பது உண்மை தான். ஆனால், சூரிய ஒளி படாமலே இருந்தாலும் சருமம் பாதிப்படையும். அதிகாலை சூரிய ஒளியில் 10 நிமிடங்களாவது நிற்க வேண்டும். அதே சமயம் சக்தி வாய்ந்த புற ஊதாக்கதிர்கள் அதிகம் தாக்கும் மதிய வெயிலில் அதிக நேரம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இவை சரும செல்களை அழிக்கும். அந்த மாதிரி சமயத்தில் சன் ஸ்க்ரீன் லோஷன் போடுவது நல்லது.

7 படுக்கும் முறை

ஒரே பக்கத்தில் படுத்தால் கன்னம் மற்றும் நாசி படுக்கையில் அழுந்தும்போது செல்லிறப்பு அதிகரித்து சுருக்கம் உண்டாகிவிடும். ஆகவே, தலையணை அல்லது படுக்கையில் முகம் அழுந்த படுக்க கூடாது.

8 மன அழுத்தம்

எப்போதும் கவலைகளை சுமந்தபடி இருந்தால், அவை முகத்தில் பிரதிபலிக்கும். ஆகவே, மன அழுத்தம் மற்றும் வேலை அழுத்தத்திலிருந்து விடுபட மனதிற்கு பிடித்தபடி மகிழ்ச்சியாய் இருங்கள்.

9 கணினி

இன்று பெரும்பாலோனர் வேலை பார்ப்பது கணினியில் தான். அவர்கள் கணினி மேசையில் ஊன்றியபடி அமர்வது கூன் விழுந்து, உடல் தோற்றத்தை பாதிக்கும். எலும்புகள் குறுகி தசைகள் தளர ஆரம்பிக்கும். இது உங்கள் உடல் தோற்றத்தை முதுமையாய் காட்ட துவங்கும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon