Link copied!
Sign in / Sign up
3
Shares

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி?

எல்லோருக்கும் பிடித்த ஒரு உணவு என்றால் அது பிரியாணி தான். என்ன தான் கூட்டு, குழம்பு, சாதமென வந்தாலும் பிரியாணியை ஒருசிலர் மிகவும் விரும்பி சாப்பிடுவது வழக்கம். எந்த ஊருக்கு போனாலும் சரி... பிரியாணியின் சுவை என்பது மட்டும் மாறி காணப்படுவதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். அதிலும் ஒரு சில இடங்கள் பிரியாணிக்காகவே பெயர் பெற்ற இடங்கள். ஹைதராபாத் பிரியாணி, ஆம்பூர் பிரியாணி, செட்டிநாடு ஸ்பெஷல் பிரியாணி, திண்டுக்கல் தலப்பாக்கட்டு பிரியாணி என நம் நாவை சுவைக்க தூண்டும் பிரியாணி வகைகள் பல. அவற்றில் நாம் இப்போது பார்க்கப்போவது சிக்கன் பிரியாணியுடன் தேங்காய் பால் எப்படி இருக்கும் என்பதை பற்றி தான். 

தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அல்லது சீரக அரிசி - 500 கிராம்

சிக்கன் - 500 கிராம்

வெங்காயம் - 1 (நறுக்கியது)

தக்காளி - 3 (நறுக்கியது)

பச்சை மிளகாய் - 5

இலவங்கப்பட்டை - 6 (அ) 5 துண்டுகள்

ஏலக்காய் - 6 முதல் 10

கிராம்பு - 8 முதல் 10

பெருஞ்சீரகம் - 1 டீஸ்பூன்

முந்திரி பருப்பு - 10

கரம் மசாலா பவுடர் - அரை டீஸ்பூன்

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

இலவங்க இலை - 2

தயிர் - 2 டீஸ்பூன்

இஞ்சி - பூண்டு (அரைத்தது) - 2 டீஸ்பூன்

தேங்காய் பால் - 200 மில்லி

கறி இலைகள் - 1

கொத்துமல்லி இலை - 1

புதினா இலைகள் - தேவையான அளவு

உப்பு - சுவைக்கேற்ப

எண்ணெய் - 15 மில்லி

நெய் - 2 டேபிள் ஸ்பூன்

எத்தனை பேர் உண்ணலாம் - 4

செய்முறை:

1. பாஸ்மதி அரிசியை 800 மில்லி தண்ணீரில் 15 முதல் 30 நிமிடத்திற்கு ஊற வைத்து கொள்ளுங்கள்.

2. சிக்கனை கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள். அத்துடன் மிளகாய் தூள், இஞ்சி பூண்டு அரைத்தது 1 டீஸ்பூன், தயிர் மற்றும் உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள். அவற்றை நன்றாக பிசைந்து 3 முதல் 4 மணி நேரத்துக்கு தனியாக வைத்துவிடுங்கள். ஒரு இரவு சிக்கனை ஊற வைப்பது நல்லது.

3. எண்ணெய்யை பெரிய பிரஷர் குக்கரில் வைத்து சூடுபடுத்தி கொள்ளுங்கள். அத்துடன் இலவங்கப்பட்டை, ஏலக்காய், கிராம்பு, முந்திரி பருப்பு, பெருஞ்சீரகம் ஆகியவற்றை குறைந்த சூட்டில் பொறிக்க வேண்டும். அதாவது முந்திரி பருப்பின் நிறம் பழுப்பு நிறமாக மாறும் வரை பொறித்து கொள்ளுங்கள்.

4. பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் (செங்குத்தாக நறுக்கியது), கறி இலைகளை சேர்த்து மீண்டும் பொறிக்க வேண்டும். வெங்காயத்தின் பச்சை வாடை போகும் வரை பொறித்துக்கொள்ளுங்கள்.

5. நறுக்கிய தக்காளி சேர்த்து மீதமிருக்கும் இஞ்சி பூண்டு அரைத்தது, கரம் மசாலா, மஞ்சள் தூள், கொத்துமல்லி இலை, புதினா இலைகள், உப்பு ஆகியவற்றை குறைந்த சூட்டில் தொடர்ந்து பொறிக்க தக்காளி நன்றாக மசிய வேண்டியது அவசியம்.

6. அதன்பின்னர் சிக்கன் சேர்த்து சற்று வேகும் வரை வைத்திருங்கள்.

7. பின்னர் பாஸ்மதி அரிசி சேர்த்து 2 நிமிடத்திற்கு பொறிக்க வேண்டும்.

8. அதன்பிறகு ஊறவைத்த அரிசியில் நீர் மற்றும் தேங்காய் பால் சேர்த்து ஊற வைக்க வேண்டும். 8 முதல் 10 நிமிடம் பிரஸர் குக்கரில் வைத்திருந்தால் அரிசி நன்றாக வெந்துவிடும்.

9. அவ்வளவு தான் சூடாக இறக்கி சுவையாக பரிமாற தயாராகுங்கள்.

10. அதற்குமுன்பு நெய் விட்டு நன்றாக கலந்துக்கொள்ளுங்கள்.

11. இதற்கு தொடு உணவாக குருமா மற்றும் ரைத்தாவை தொட்டு கொள்ள, அப்படி இருக்கும் டேஸ்ட்...

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon