Link copied!
Sign in / Sign up
3
Shares

சமாளிக்க வேண்டிய சின்னஞ்சிறுசுகள்...

விட்டாச்சு லீவ் என்றால், பாதி பெற்றோருக்கு ஹார்ட் அட்டாக் வராத குறை தான். என்ன செய்வது? நம்ம பசங்க மனுபக்சரிங் அப்டிங்க. அட ஆமாங்க, கர்ப்பமா இருக்கும் போது குழந்தை நல்லா ஆரோக்கியமா, புஸ்டியா வளரனும்னு பாதாம், பிஸ்தான்னு உங்க உடம்ப தேத்துவிங்க. அப்போ நீங்க சாப்பிட்டதெல்லாம் உங்க குழந்தைக்கு தான போய் சேரும். அப்போ குழந்தை தில்லாலங்கடி ரவி மாதிரி இல்லாம எப்படி தான் இருப்பான்...! என்ன தான் குழந்தைங்க குறும்ப பார்த்து தாய்க்கு கோபம் வந்தாலும்... மனசுல அப்டியே இறக்கக்கட்டி பறப்பாங்க. தன்னோட குழந்தை எவ்வளவு புத்திசாலியா இருக்கான்னு...

சரிங்க, குழந்தைக்கு லீவ் விட்டால் அம்மாவுக்கு ஸ்கூல் ஆரம்பம். என்ன வேடிக்கைனா கொஞ்சம் எக்ஸ்ட்ரா டைம் அவங்க கத்துக்க வேண்டியதா இருக்கும். உங்கள் குழந்தை வீட்டிலேயே தொந்தரவு தராமல் விளையாட வேண்டுமா? இதோ உங்களுக்காக தான் இந்த பதிவு.

குமிழி விளையாட்டு:

இந்த குமிழிக்குள் என்ன இருக்கிறதோ இல்லையோ.. கண்டிப்பாக குழந்தைகள் மனம் என்பது இருக்கும். எனவே, இந்த காற்றில் ஊதி விளையாடும் குழந்தைகளுக்கான விளையாட்டு என்பது அவர்களுடைய நேரத்தை நீங்கள் இன்றி போக்க உதவுகிறது. இரு குழந்தைகளாக இருந்தால், இரு குமிழியையும் மோதவிட்டு நீங்கள் வேடிக்கை பார்க்கலாம்.

முகமூடி:

இந்த முக மூடி விளையாட்டை குழந்தைகளுக்கு சொல்லி தருவதனால்... நாளை உங்கள் குழந்தை ஒரு கிரியேட்டிவ் பெர்சனாக கூட வலம் வரலாம். அட ஆமாங்க, ஒரு ரவுண்ட் வடிவ பேப்பரை கொண்டு, அதன் மீது இலை, காய், பழம் போன்றவற்றை வைத்து..."இது தான் கண்ணு...இது தான் வாய்..." என சொல்லி உங்கள் பிள்ளையின் ஆர்வத்தை தூண்டுங்களேன். நீங்கள் சாப்பிட்ட பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பெல்லாம் வேலை செய்ய நாளை உங்கள் பிள்ளை ஒரு சயின்டிஸ்ட்டாக கூட உருவாகலாம்.

நீர் சறுக்கு விளையாட்டு:

ஒரு பெரிய கருங்கித்தான் (நீர்க்காப்பு துணி, தார்ப்பாய்) எடுத்து, அதை வீட்டின் வெட்ட வெளியில் விரித்து விடுங்கள். அதில் லேசாக தண்ணீரை பாய்ச்சி கொள்ளுங்கள். இதனால் உங்கள் பிள்ளை, இந்த தார்ப்பாயில் வேகமாக ஓடி வந்து வழுக்கி சரியக்கூடும். ஆனால், துணியில் சரிவதால் அடிபட வாய்ப்பு என்பது இல்லை. ஆனால், கண்டிப்பாக சந்தோசத்தை தரக்கூடிய ஒரு விளையாட்டாக அமையும்.

ஸ்கிப்பிங்க் விளையாட்டு:

இந்த விளையாட்டை காலை அல்லது மாலையில் பழக்குவது நல்லது. இது ஒரு சிறந்த உடற்பயிற்சியாக அமைய, இதனால் உங்கள் பிள்ளையின் ஆரோக்கியமும் எதிர்க்காலத்தில் பேணி பாதுகாக்கப்படும். இந்த ஸ்கிப்பிங்கை பழக்க மட்டும் தான் சிரமம். அவர்கள் ஆர்வம் கொள்ள தொடங்கிவிட்டால், அவர்கள் விட்டாலும்...அது விடாத ஒரு அழகிய பயிற்சி இது.

பொருளை இழுத்தல்:

கிணற்றில் தண்ணீர் இரைப்பதை பார்த்து இருப்பீர்கள். அதுதான் இந்த விளையாட்டு. ஒரு வாளியில், உங்கள் பிள்ளைகள் தூக்கும் அளவிற்கு கனத்தை வைத்து விடுங்கள். அதை ஒரு குட்டி மரத்தின் மேல் சிக்கும்படி வைத்துக்கொள்ளுங்கள். உயர்ந்த மரம் வேண்டாம். ஏனெனில், அந்த கனத்த பொருள் கவிழ்ந்து உங்கள் குழந்தை மேல் விழ வாய்ப்பிருக்கிறது. குட்டை மரத்தில் அந்த வாளியை சிக்க வைத்து கொஞ்ச தூரத்திலிருந்து இழுக்க பழக்கப்படுத்துங்கள். இது உங்கள் குழந்தையின் தசைக்கு நல்லது. இதை தான் இன்று இளைஞர்கள் ஜிம்மில் செய்கிறார்கள். கனத்த பொருளை தேர்வு செய்வதில் கவனம் தேவை.

விரலில் விளையாட்டு:

இந்த விளையாட்டு மிகவும் சுவாரஸ்யமான ஒன்றும் கூட... கைவிரல்களை கொண்டு மான் போன்றவற்றை செய்து உங்கள் குழந்தைகளுக்கு காட்டலாம். இதனால் அவர்களுக்குள்ளே செய்து விளையாடவும் தொடங்குவார்கள். இந்த விளையாட்டு உங்கள் பிள்ளைகளின் சிந்தனைக்கு வேரூன்றியும் நிற்கிறது.

தண்ணீர் (அ) மண் விளையாட்டு:

குழந்தைகளுக்கு தண்ணீர் (அ) மண் கொண்டு விளையாட கற்றுக்கொடுங்கள். ஆனால், சளி பிடிக்கும் அளவுக்கு தண்ணீரை பயன்படுத்த அனுமதிக்காதீர்கள். கொஞ்சம் லேசான நீரில் உங்கள் பெயரையும், உங்கள் கணவர் பெயரையுமென எழுத பழக்கப்படுத்தலாம். இதனால், தண்ணீரில் அக்குழந்தைகள் பல வித புது யோசனையை புகுத்தவும் கூடும்.

பஷ்ஷில் விளையாட்டு:

இந்த பஷ்ஷில் விளையாட்டுக்கு ஒரு படம் கொண்ட அட்டை தேவை. அந்த அட்டையை நீங்களாக பஷ்ஷில் போல் நறுக்கி கொள்ளுங்கள். அந்த அட்டையை கலைத்து அப்பிள்ளைகளிடம் கொடுக்க, அவர்கள் நினைவாற்றல் வலுவடைவதோடு, ஆக்கப்பூர்வமான சிந்தனையும் அவர்களுக்கு உண்டாகிறது. அதேபோல், பஷ்ஷிலை அவ்வப்போது மாற்றி வேடிக்கை காட்டுவதன் மூலம் அவர்கள் அலுப்பும் குறைந்து போகும். இதற்கான அடித்தளத்தை எழுத்து கலப்பின் மூலம் தொடங்குவது சிறந்தது.

தாய்மார்களே! உங்கள் குழந்தையின் சிறுவயதிலிருந்தே சின்ன...சின்ன பழக்கங்களை கற்றுக்கொடுப்பதனால், உங்கள் குழந்தையின் மூளையானது மிக கூர்மையாக எதிர்க்காலத்தில் இருத்தல் கூடும். எனவே, வார விடுமுறையில் அவர்களுக்கு தேவைப்படுவதை இந்த மாதிரி விளையாட்டுக்கள் மூலமாக அவர்களே ஏற்படுத்தி கொள்வதற்கான வாய்ப்பு என்பது அதிகம். அவ்வப்போது மறக்காமல் உங்கள் குழந்தைகளின் செயலை நீங்கள் பார்த்து செல்ல வேண்டியது அவசியம். இதனால், எது நல்லது? எது கெட்டது? என்பது உங்கள் மகன்/மகளுக்கு தெரியவரும். 

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon