Link copied!
Sign in / Sign up
1
Shares

சாப்பிடும் உங்கள் குழந்தைகளிடம் செய்ய வேண்டியதும்? செய்ய கூடாததும்?

குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய பழக்கங்கள் பல இருப்பின்... அவை யாவும் தலைமுறை தாங்கும் பாரம்பரியம் என்பதை உணர்ந்து செயல்படுவது மிக நல்லது. அவற்றில் ஒன்று தான் உணவு பழக்கம்.  இந்த உணவு பழக்கம் என்பது ஒருவரின் புறத் தோற்றத்தையும் முதல் பார்வையிலே மற்றவருக்கு தெரியப்படுத்துவதாகும். ஒருசில தவறான உணவு பழக்கத்தின் உந்துதலால் உங்கள் குழந்தை எதிர்க்காலத்தில் பல பிரச்சனையை சந்திக்க அதிக வாய்ப்பிருக்கிறது. அதனால், சாப்பிடும் போது உங்கள் குழந்தை எதையெல்லாம் செய்ய வேண்டும்? எவையெல்லாம் செய்யக்கூடாது? என்பதை நாம் இப்போது பார்க்கலாம்.

ஒன்றாக அமர்ந்து பகிர்ந்து உண்ணுதல்:

அன்பையும் சரி... அன்றாட உணவையும் சரி... பகிர்ந்து உண்ண பழக்கப்படுத்துங்கள். சாப்பிடும் போதுதான் ஒருசில விஷயங்களை மகிழ்வுடன் நம் மனம் விரும்பிய நபருடன் பகிர்ந்துக்கொள்ள முடியும். இதனால், குழந்தைகளிடம் இருக்கும் உணவு பொறாமை என்பது முற்றிலும் நீங்கும். அதேபோல், தனியாக அமர்ந்து உண்ண பழக்கப்படுத்தாமல், சேர்ந்து உண்ண பழக்கப்படுத்துவது மிக நல்லது.

வேண்டியவற்றை தேர்வு செய்தல்:

உங்கள் குழந்தைக்கு வேண்டிய உணவை, அவர்களே தேர்ந்தெடுக்க அனுமதிக்க பழகுங்கள். இதனால், அவர்கள் உடல் மட்டுமல்லாமல் மனதளவிலும் ஆரோக்கியமாக இருத்தல்கூடும். உங்கள் குழந்தை ஒரு ஆரோக்கியமான உணவை தவிர்த்தால்... அதற்கு மாறான அவர்கள் விரும்பும் ஆரோக்கியமான உணவை அந்த இடத்தில் வைத்திடுங்கள். இதனால் வெறுப்புடன் பார்க்கப்படும் ஒரு உணவும் விருப்பத்துடன் பார்க்க நேரிடும். அவர்கள் வயிற்றின் அளவுக்கு மீறியதை வைத்து திணிக்காதீர்கள்.

ஆரோக்கியமான உணவை தொடர்ந்து தவிர்த்தால்:

குழந்தைகள் எப்போதும் ஒரு உணவை உடனடியாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். பலதடவை அவர்கள் மனதானது யோசித்த வண்ணம் இருக்கிறது. இப்போது உங்கள் குழந்தை பூக்கோசு சாப்பிடமாட்டேன் என அடம்பிடித்தால், அந்த உணவை சாப்பிடலாமா? வேண்டாமா? என்பதை அவர்கள் முடிவு செய்ய கொஞ்ச நாட்கள் ஆகும் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். வேண்டாத உணவை வைத்து திணிக்காதீர்கள். அன்பாக கொடுக்க பழகுங்கள்.

ஆசைக்காட்டுதல் கூடாது:

உங்கள் குழந்தைகள் சாப்பிட்டு முடித்தால் தான் அவனுக்கு வேண்டியதை தருவேன் எனும் மனநிலையை மாற்றிக்கொள்ளுங்கள். இந்த மனநிலையால்... பிடிக்காத உணவை கஷ்டப்பட்டு உங்கள் குழந்தைகள் சாப்பிட, அவர்கள் விரும்பிய உணவின் மீதான ஈர்ப்பும் அதிகரிக்கிறது. விளைவு, அந்த உணவு இல்லையென்றால் அவர்கள் சாப்பிடமாட்டேன் என அடம்பிடிக்க, பிடிவாத குணமும் உங்கள் குழந்தையிடம் உருவாகிடும்.

மறைத்துவைத்து கொடுத்தல்:

உங்கள் குழந்தைகளுக்கு மறைத்து வைத்து உணவை கொடுப்பதை நிறுத்துங்கள். இதனால், நீங்கள் இல்லாவிட்டாலும் அவர்களை அந்த உணவு உண்ண தூண்ட, கைக்கு எட்டியது, வாய்க்கு எட்டவும் கூடும் என்பதை புரிந்து நடந்து கொள்ளுங்கள். பிற்காலத்தில் உதவும்...

நண்பர்களே!

உங்கள் வீட்டு தரை அழுக்காய் இருக்கிறதா? கவலை வேண்டாம்... இயற்கையாக சுத்தப்படுத்த இதோ நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம் டைனி ஸ்டெப் ப்ளோர் கிளீனரை. இந்த கிளீனரில் எந்த வித வேதி பொருளும் இல்லை. நச்சு தன்மையும் இல்லை. குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பானது. ஒருமுறை பயன்படுத்தினால், மீண்டும் வேறு எதையும் வாங்க உங்கள் மனம் முன்வராது. இப்போதே இதை நீங்கள் பெற முந்துங்கள். ஆர்டர் செய்ய இந்த பொத்தானை அழுத்தவும். கிளிக் செய்க...

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon