Link copied!
Sign in / Sign up
20
Shares

கர்ப்பம் தரிப்பதில் காணப்படும் ஐந்து சிக்கல்கள்...

திருமணம் என்பதை தாண்டி ஒரு பெண்ணுக்கு சந்தோஷத்தை தருவது அவள் கர்ப்பமாக இருக்கும் சமயம் தான். அதுவும் ஒரு சில பெண்களுக்கு இந்த கர்ப்ப நிலையை எட்ட வருடக்கணக்கில் கூட ஆவது வழக்கம். இதற்கு காரணங்களுள் ஒன்றாக தாமத திருமணமும் அமைகிறது. ஆம், கர்ப்ப அறிகுறிகள் என்பதும் வயதை பொறுத்து மாறி காணப்படுகிறது. கர்ப்பம் தரிக்க வெவ்வேறு வயதில் வெவ்வேறு விதமான சிக்கலை ஏற்படுத்துகிறது. அது என்ன சிக்கல்கள்? வாங்க பார்க்கலாம்.

1. உடலுறவு:
அதிக உடலுறவு கொண்டால்: 

ஒரு சிலர் அதிக நேரம் கொள்ளும் உடலுறவால் கர்ப்பம் தரிப்பதாக நினைக்கின்றனர். ஆனால், இந்த எண்ணம் முற்றிலும் தவறானது. நீங்கள் அடிக்கடி செக்ஸ் வைத்துக்கொள்வதால் உடல் பலவீனமாக மட்டுமே இருக்கும். அத்துடன் கால்கள் வலுவிழந்தும் காணக்கூடும். உங்கள் துணை செக்ஸ் விருப்பமற்று நீங்கள் கட்டாயப்படுத்தி உடலுறவு கொள்வதால் கூட, கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பு குறையக்கூடும். செக்ஸ் என்பது உடல் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. மனம் சம்பந்தப்பட்டதும் கூட என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். 

குறைவான உடலுறவு கொண்டால்: 

அண்டவிடுப்பின் போது மட்டும் செக்ஸ் வைத்துக்கொண்டு மற்ற நேரங்களில் விந்தணுக்களை சேமித்தும் நீங்கள் வைக்கலாம். ஆனால், வெகு நாட்களுக்கு உடலுறவு கொள்ளாமல் இருந்தாலும் மலட்டு தன்மை என்பது உருவாகி கர்ப்பம் தரித்தலில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும். அண்டவிடுப்பு நாளை கணக்கில் கொண்டு அடிக்கடி உடலுறவு கொள்வது நல்லது. ஒருவேளை மாதவிடாய் என்பது சரியான சமயத்தில் உங்களுக்கு வராவிட்டால் அண்டவிடுப்பு கிட் பயன்படுத்தலாம்.

2.  அதிக மன அழுத்தம்:

கர்ப்பம் என்பது தரிக்க வேண்டுமெனில் உடல் மற்றும் மனதளவில் நீங்கள் தெளிவுடன் இருக்க வேண்டியது முக்கியம். நீங்கள் மிகவும் மன அழுத்தம் நிரம்ப காணப்படுவீர்கள் எனில், கருமுட்டை வெளியாகும் பணி என்பது பாதிக்கப்படும். கர்ப்பம் தரிக்க ஆசைப்படும் நாட்களில் மிகவும் அமைதியாக இருத்தல் வேண்டும். ஏனெனில், மன அழுத்தம் என்பது ஹைப்போதலாமஸை தடை செய்ய, பிட்யூட்டரி சுரப்பியும் கட்டுப்பாட்டினுள் வருகிறது. இந்த சுரப்பி மாதவிடாயின் செயல்பாடுகளுக்கு இடையூறை ஏற்படுத்த, நாளும் தள்ளி போகக்கூடும். 

3. ஆண் பலவீனம்:

ஒரு பெண் கர்ப்பம் தரிப்பதற்கு இருக்கக்கூடிய முக்கியமான காரணங்களுள் ஒன்று குறைவான விந்தணுக்களே ஆகும். இதுவே 30 முதல் 40 சதவிகித பெண்கள் கருத்தரிக்க முடியாமல் போவதற்கு காரணமாக அமைகிறது. இதற்கு தீர்வாக அமைவது செயற்கை கருத்தரித்தல் முறை (IVF) மற்றும் விந்து ஊசி முறை (ICSI) ஆகும். இந்த முறைகளில் முட்டையுடன் ஆணின் விந்தை செயற்கை முறையில் செலுத்தி கருத்தரிக்க செய்வர்.

4. உடலுறவுக்கு பின்னர் குளியலறை தேடி ஓடுதல்:

பெண்களில் பலரும் உடலுறவு முடிந்த உடனே அவசரமாக குளியலறைக்கு ஓடிச்சென்று தன் பெண்ணுறுப்பை சுத்தம் செய்வர். ஆனால் அவ்வாறு செய்யக்கூடாது. ஆம், செக்ஸ் வைத்துக்கொண்ட உடன் சிறிது நேரம் காத்திருக்க வேண்டும். அப்போதுதான் பிறப்புறுப்பில் புகுந்த விந்தணுக்கள் உங்கள் முட்டையை சென்று சேரும். நீங்கள் உடனே சுத்தம் செய்வதால் விந்தணுக்கள் தேவையின்றி வெளியேறிவிடக்கூடும். இதுவும் கர்ப்பம் தரிக்காமல் போவதற்கு காரணமாக அமைகிறது. அதனால், செக்ஸ் வைத்துக்கொண்ட சிறிது நேரம் கட்டிலில் இருந்திடுங்கள். முடிந்த அளவு கால்களை உயர்த்தி வைப்பதன் மூலம் விந்தணுக்கள் முட்டையை சென்று சேர்ந்து கருத்தரிக்க வாய்ப்பை ஏற்படுத்தி தரும்.

5. இறுக்கமான உள்ளாடை:

பெண்கள் தன் பிறப்புறுப்பின் வடிவத்துக்கு ஏற்றவாறு உள்ளாடை வாங்குகின்றனர். அப்படி செய்வதால் ஆடை இறுக, இனப்பெருக்க செயல்பாடுகள் தடைப்படக்கூடும். ஆண்களுக்கு இதனால் விந்தணு உற்பத்தி குறைய, பெண்களுக்கு காற்று புகும் நிலை குறைந்து கர்ப்பம் தரிப்பதில் சிக்கலை ஏற்படுத்துகிறது. எனவே சரியான உள்ளாடையை தேர்வு செய்ய வேண்டியது அவசியம். 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon