Link copied!
Sign in / Sign up
2
Shares

பிரசவ தேதி தள்ளி போக என்ன காரணம் தெரியுமா?

இன்று நவீன வளர்ச்சியினால் ஒரு குழந்தை எப்போது பிறக்கும் என்பது வரை நம்மால் அறிய முடிய, சில சமயத்தில் நேரம் முதற்கொண்டு நம்மால் தெரிந்துக்கொள்ள முடிகிறது. ஆனால், பிரசவ தேதி குறிப்பிட்ட பின்னரும் குழந்தை பிறப்பிற்கான காலம் என்பது ஒரு சில பெண்களுக்கு தள்ளி போகிறது. இதற்கு உங்கள் வாழ்க்கை முறையும் மன அழுத்தம் தான் காரணமா? என பலவித ஆய்வுகள் நடந்த போதும் அவற்றின் முடிவுகள் முற்றிலும் வித்தியாசமாக சொல்லப்படுகிறது. அவை என்ன என்பதை தான் நாம் இப்போது பார்க்க போகிறோம். 

மாதவிடாய் தள்ளி போகுதல்:

ஒரு சில பெண்களுக்கு மாதவிடாய் காலம் என்பது சரியாக வர மறுத்து, தள்ளி போகவும் கூடும். இதனால் அல்ட்ரா சவுண்ட் முறைக்கொண்டு பிரசவ தேதியை சரியாக குறிப்பிட முடிவதில்லை. ஏனெனில், கடைசி மாதவிடாய் காலத்திலிருந்தே பிரசவ நாள் என்பது ஒரு பெண்ணுக்கு கணக்கிடப்படுகிறது. இந்த நிலைமை மாறும்போது பிரசவ தேதியை சரியாக குறிப்பிடுவதில் சிக்கல் ஏற்படுகிறது.

முதல் அல்ட்ரா சவுண்ட் தாமதம்:

உங்கள் பிரசவ தேதி தள்ளி போக இதுவும் ஒரு முக்கிய காரணம். அதாவது முதல் அல்ட்ரா சவுண்ட் என்பது கர்ப்ப காலத்தின் முதல் 3 மாதத்தில் வர வேண்டியதாகும். ஆனால், கருவிலிருக்கும் குழந்தையின் வளர்ச்சியை பொறுத்து ஒரு சிலருக்கு இந்த அல்ட்ரா சவுண்ட் என்பது இரண்டாவது 3 மாதத்தில் ஏற்படுகிறது. இது உங்கள் பிரசவ தேதியை சரியாக குறிப்பிட முடியாத நிலைமையை ஏற்படுத்துகிறது.

பண்டல் உயரம் பொறுத்து:

இந்த பண்டல் அளவீடு என்பது பொது எலும்பிலிருந்து கருப்பை மேல்புறம் வரை கணக்கிடப்படுவதாகும். கர்ப்ப காலத்தை பொறுத்து இந்த உயரம் என்பது அமைய செய்கிறது. ஒருவேளை இந்த உயரம் என்பது சராசரி உயரத்தை விட அதிகமாக இருக்கும்போது பிரசவ தேதி என்பது தள்ளிப்போகக்கூடும்.

AFP அளவு பொறுத்து:

இந்த ஆல்பா - பீட்டோ புரதம் அல்லது புரதம் என்பது கல்லீரலில்  இருந்து உற்பத்தி ஆகிறது. இந்த அளவு சாதாரண நிலையிலிருக்கும்போது பிரசவ தேதி என்பது சரியாக ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு அமைகிறது. ஒருவேளை இதன் அளவானது அசாதாரண நிலையை அடைந்தால் பிரசவ தேதியும் தள்ளிப்போகக்கூடும். அதனால் 14 முதல் 22 வாரங்களுக்கு இடைப்பட்ட கர்ப்ப காலத்தில் AFP பரிசோதனை என்பது அவசியம். ஒருவேளை இதன் அளவு அதிகம் காணப்படுமெனில் பிறக்கும் குழந்தையின் வளர்ச்சியில் அசாதாரண நிலை காணப்பட, இதனால் பிரசவ தேதியும் தள்ளி செல்ல வாய்ப்பிருக்கிறது.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon