Link copied!
Sign in / Sign up
2
Shares

கருவறையிலிருக்கும் குழந்தை வெளிவர மறுக்க காணப்படும் 5 காரணங்கள்

இன்றைய சூழ்நிலையில் சிசேரியன் என்பது அதிகரித்த வண்ணம் காணப்படுகிறது. அதன் விளைவு, ஒரு பெண்ணுக்கு சுகப்பிரசவம் நேர்ந்தால் உடனடியாக ஆச்சரியத்துடன் எல்லோரும் பார்க்கின்றனர். இதற்கு முக்கிய காரணம், அன்னைகள் பழக்கவழக்கத்தில் இன்று காணப்படும் மாற்றங்களே ஆகும். ஒரு சில குழந்தைகளை தொப்புள் கொடி சுற்றிவிட, இதனால் சுகப்பிரசவம் என்பது வாய்ப்பற்று போய்விடுகிறது. இதற்கு என்ன காரணமென நாம் இப்போது பார்க்கலாமா!

1. அம்மாக்களின் நிலை:

பிரசவம் என்பது அம்மாக்களின் நிலை பொறுத்தும் அமைகிறது என்பதில் எந்தவித மாற்றமுமில்லை. மேல்புற நிலை எனப்படும் குந்திக்கொண்டு உட்காரும் நிலையினால் இடுப்பு விரிவடைய 30 சதவிகித வாய்ப்பிருக்கிறது. இதனால் குழந்தையும் பிறப்பதற்கு ஏதுவான நிலைக்கு எளிதில் வர உதவுகிறது. மருத்துவமனையில் கொடுக்கப்படும் ஒரு பயிற்சியாக அமைவது எதுவென்றால், கீழ் நோக்கி படுப்பது அல்லது சாய்வு நிலையிலிருப்பதாகும். இதனால் பெண்களின் பிரசவம் என்பது சிரமமற்று அமைகிறது. ஒருவேளை அம்மாக்களின் நிலையினால் குழந்தையை தொப்புள் கொடி சுற்றிக்கொண்டு பிறக்குமெனில் இதனால் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யவும் படுகிறது.

2. கருவிலிருக்கும் குழந்தை நிலை:

ஒரு குழந்தையின் நிலை பொறுத்தே சிசேரியனா? சுகப்பிரசவமா? என்பது முடிவு செய்யப்படுகிறது. பொதுவாக பிரசவத்துக்கு ஏற்ற குழந்தையின் நிலையாக இருக்க வேண்டியது முன்புற முதுகெலும்பு நிலையாகும். அதாவது குழந்தையின் தலை பெண்களின் பிறப்புறுப்பு நோக்கி கீழ் இருக்க வேண்டும். இதன்மூலமாக குழந்தையின் தலை எளிதில் வெளிவர, சுகப்பிரசவத்துக்கும் உதவ செய்கிறது. ஒருவேளை குழந்தையின் தலை மேலிருந்து பின்புறம் கீழிருக்க, இதனால் சுகப்பிரசவம் என்பது வாய்ப்பற்று போகிறது.

3. மயக்க மருந்து உபயோகம்:

பிரசவத்தின் போது கொடுக்கப்படும் மயக்க மருந்து என்பது தண்டு வடத்தை சில சமயத்தில் கடின நிலைக்கு தள்ளிவிடுகிறது. இந்த மயக்க மருந்து கொடுப்பதற்கான முக்கிய காரணம் என்னவென்றால், பிரசவத்தின் போது ஏற்படும் வலியை குறைக்கவே ஆகும். இதனால் பல சிக்கலையும், பக்க விளைவையும் ஒரு சில நேரத்தில் ஏற்படுத்திவிடவும்கூடும். இதனால் அம்மாக்கள் அசைவற்று ஒரே நிலையிலிருக்க, இதனால் குழந்தை பிறப்பு என்பது கடினமான நிலைக்கு ஒரு பெண்ணை தள்ளக்கூடும்.

4. தோள்பட்டை பிரச்சனை:

ஒருசில சமயத்தில் கருவிலிருக்கும் குழந்தையின் வளர்ச்சி மிகவும் அதிகம் இருக்கும்போது பிரசவ நேரத்தில் குழந்தையின் தோள்பட்டை இடுப்பில் சிக்கிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. 

5. இடுப்பின் வடிவ மாற்றம்:

ஒரு சில பெண்களுக்கு இடுப்பின் வடிவம் என்பது சிறியதாகவோ அல்லது மிகவும் பெரியதாகவோ இருக்கக்கூடும். இந்த நிலையில் பிரசவம் என்பது கடினத்தை ஒருவருக்கு ஏற்படுத்திவிடுகிறது. இந்த நிலையை தான் செபலோபேல்விக் குறைபாடு (CPD) என அழைக்கப்படுகிறது. 

கர்ப்பிணிகளே! உங்களுடைய கர்ப்ப காலத்தில் மற்றவர்கள் பேச்சை கேட்பதை தவிர்த்து மருத்துவரிடம் முறையான ஆலோசனையை பெறுங்கள். நீங்கள் எளிதாக குழந்தை பெற்றுக்கொள்ள என்ன வழி? அதற்கு நீங்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்பதை மருத்துவரிடம் கேட்டு, அதன் மூலமாக ஒருசில பிரச்சனையை பிரசவத்தின்போது தவிர்க்க முடியும். நீங்கள் உண்ணும் உணவிலும், செய்யும் செயலிலும் முழுமையான கவனத்துடன் இருக்க வேண்டியது மிகவும் முக்கியம்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon