Link copied!
Sign in / Sign up
0
Shares

ரஜினியின் அரசியல் குறித்த முடிவு என்ன? பதில் பதிப்பினுள்ளே!

தோழிகளே! ஆறு முதல் அறுபது வயதினர் வரை அனைவரையும் கவர்ந்த ஒரே நபர்; பிஞ்சு நெஞ்சங்களின் மனதிலும், இளங்காளைகளின் உள்ளத்திலும், தன் உண்மை நடிப்பால், ஒரு புத்தொளியை உண்டாக்கியவர்; நம் நெஞ்சங்களை தன் யதார்த்த நடிப்பால், அசத்தலான ஸ்டைலால் கொள்ளை கொண்டவர் ரஜினிகாந்த். அப்படிப்பட்ட அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொங்கி வரும் புது வெள்ளம் போல், ஆரம்பம் முதலே தமிழ் மக்களின் நெஞ்சில், கரைபுரண்டு ஓடி வந்தது. 

இதனைக் குறித்து கேள்விப்பட்ட ரஜினியோ, ஆன்மிக வாழ்க்கையே சந்தோசம் தரும்; அரசியல் தனக்கு ஏற்றதல்ல; ஆண்டவன் விருப்பப்படியே அனைத்தும் நடக்கும் என வேதாந்தம் பேசி வந்தார். இடையில் அவர் அரசியலுக்கு வருவார் என்ற புரணி மக்களிடையே பரவியது. இதன் பின் கமல், விஜய், அஜித் போன்ற பல நடிகர்கள் தங்கள் அரசியல் குறித்த முடிவை பலவாறாக வெளியிட்டு வந்தார்கள்..!

அறிவித்த இடம்..!

இந்நிலையில் இன்று செய்தியாளர்களுடன் சென்னையில் ஸ்ரீ ராகவேந்திரா மண்டபத்தில், 8.30 மணி அளவில், நடந்த கூட்டத்தில், தன் இரசிகர்களுக்கு மத்தியில் டிசம்பர் 31 ஆம் தேதியன்று, தனது அரசியல் குறித்த இறுதி முடிவினை அறிவிப்பதாக கூறியுள்ளார். மேலும் "அரசியலுக்கு நான் புதியவனல்ல; அதில் என்னென்ன நடக்கும்; சாதக, பாதகங்கள் என்னென்ன என அறிவேன்; அரசியல் என்ன லாப நஷ்டங்களைத் தரும் எனவும் அறிவேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ரஜினியின் முடிவு..!

தொடர்ச்சியாக, "அரசியலுக்கு வர தாமதித்தேனே தவிர வரமாட்டேன் எனக் கூறவில்லை; அரசியலில் நுழைவதே வெற்றிக்கு இணையானது, என்னுடைய அரசியல் தொடர்பான இறுதி முடிவு டிசம்பர் 31 ஆம் தேதி வெளியிடுவேன்" எனக் கூறியுள்ளார்.

மேலும் "அரசியலில் நுழைந்தால், வெற்றி பெறாமல் விடமாட்டேன்; அரசியல் போருக்கு நிகரானது; போரில் நுழைந்த வீரன் வெற்றி பெற வேண்டும், இல்லையேல் உயிர் இழப்பான். ஆகவே அரசியலில் நுழைந்தால், வெற்றி வாகை சூட வேண்டியது அவசியம்" என்று கூறியுள்ளார்.

ரஜினியின் நண்பரான, காந்திய மக்கள் இயக்கம் என்பதை நடத்தும் தமிழருவி மணியன், டிசம்பர் 22 ஆம் தேதி ரஜினி தான் அரசியல் குறித்த முடிவை விரைவில் கூறுவார் என்று குறிப்பிட்டது - குறிப்பிடத்தக்கது..!

மேலும் ரஜினி கடவுளின் ஆசியால், அரசியலில் தான் நுழைந்தால், பணத்தாசை, பதவியாசை இன்றி மக்கள் நலனுக்காக செயல்படுவேன் என்று உணர்ச்சிப்போர்வமாக கூறியுள்ளார்..!

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

Recently, we launched a baby-safe, natural and toxin-free floor cleaner. Recommended by moms and doctors all over India, this floor-cleaner liquid gets rid of germs and stains without adding harmful toxins to the floor. Click here to buy it and let us know if you liked it.

Stay tuned for our future product launches - we plan to launch a range of homecare products that will keep your little explorer healthy, safe and happy!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon